சி.எஸ்.கே அணியை மிரள வைத்து மலிங்கா செய்த அபார சாதனை துள்ளி குதிக்கும் ரசிகர்கள்

நேற்று இரவு நடைபெற்ற பரபரப்பான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டிக்கான சென்னை அணியில் முக்கிய வீரர்களான தோனி மற்றும் ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்து.

இப்போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணிக்கு ரோகித் சர்மா அதிகபட்சமாக 67 ரன்களை எடுக்க, அந்த அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து 156 என்ற எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய சென்னை அணி வீரர்கள், மும்பை அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினர். இதனால் சென்னை அணி 17.4 ஓவரில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

மும்பை அணி இப்போட்டியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இப்போட்டியில் மும்பை வீரர் லசித் மலிங்காசிறப்பாக பந்து வீசி 3.4 ஓவர்களில் 37 ரன்களை விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

இப்போட்டியில் 4 விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் சி.எஸ்.கே அணிக்கு எதிராக 30 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் மலிங்கா. இதன் மூலம் ஐ.பி.எல் தொடரில் ஓர் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இப்பட்டியலில் மலிங்கா சி.எஸ் கே அணிக்கு எதிராக 30 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்திலும், உமேஷ் யாதவ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக 29 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்திலும், டிவைன் பிராவோ மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 28 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.