ரோகித் எங்கள் அணிக்கு வேண்டாம் அந்த அணிக்கு போகட்டும் ஹர்திக் பாண்டியா அதிரடி

நேற்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. இதன் மூலம் புள்ளி பட்டியலிலும் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது மும்பை அணி .

இப்போட்டியில் தோனி இல்லாதது தான் மும்பை அணியின் வெற்றிக்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும். ரோகித் சர்மாவின் அற்புதமான ஆட்டம் தான் அந்த அணியின் வெற்றிக்கு உதவியது. நேற்றைய போட்டியில் சூழ்நிலையை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு ஆடினார் றோகித் சர்மா.

அவர் 48 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்களுடன் 67 ரன்களை குவித்தார். இதனால் தான் மும்பை அணியால் 20 ஓவர் முடிவில் 155 என்ற நல்ல ஸ்கோரை எட்ட முடிந்தது.

சென்னை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய பின் மும்பை அணி வீரர் ஹர்திக் பாண்டியா டுவிட் ஒன்றை போட்டுள்ளார்.

அதில், மும்பை அணியின் கேப்டன் ஹிட் மேன் ரோகித் சர்மா “அவேஞ்சர்ஸ்” அணியில் இணைய இதுதான் சரியான நேரம். சென்னையில் சென்னை அணிக்கு எதிராக கிடைத்த அற்புத வெற்றி என பதிவிட்டுள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.