11 போட்டிகள் முடிந்தும் இதை மட்டும் நாங்கள் செய்யவே இல்லை வருத்தப்படும் ரெய்னா

நேற்று இரவு சேப்பாக் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர் கொண்டது மும்பை இந்தியன்ஸ் அணி. இப்போட்டியில் தோனி மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு தரப்பட்டு, முரளி விஜய் மற்றும் துருவ் ஷோரே ஆகியோர் சென்னை அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் 15 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனையடுத்து இணைந்த ரோகித் சர்மா மற்றும் லீவிஸ் ஜோடி அணியின் ஸ்கோரை அடித்து ஆடி உயர்த்தியது. இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 75 ரன்களை சேர்த்தது. ரோகித் சர்மா 67 ரன்னிலும், லீவிஸ் 32 ரன்னிலும் அவுட்டாகினர். மேலும் அந்த அணிக்கு ஹந்திக் பாண்டியா 23 ரன்னும் மற்றும் பொல்லார்ட் 13 ரன்னும் சேர்த்தனர். இதனால் அந்த அணி 20 ஒவர் முடிவில் 155/4 ரன்களை எடுத்தது.

இதனையடுத்து களம் இறங்கிய சென்னை அணி தொடக்கம் முதலே மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. சென்னை அணியில் முரளி விஜய்யை தவிர மற்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க எண்ணில் அவுட்டாகி சென்றனர். சென்னை அணியில் அதிகபட்சமாக முரளி விஜய் 38, மிட்செல் சாண்ட்னர் 20, பிராவோ 22 ரன்களை சேர்த்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகியதால் சென்னை அணி 17.4 ஓவரில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இப்போட்டியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை அணி.

போட்டி முடிந்த பின் தோல்வி குறித்து சென்னை அணி கேப்டன் ரெய்னா கூறியது., இந்த மைதானத்தில் 155 என்பது எளிதில் சேஸ் செய்ய கூடியது. இன்று மும்பை அணியினர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். எங்கள் அணி ஒவ்வொரு 2 -3 ஓவர்களுக்கும் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தது. இது தான் எங்கள் அணியின் தோல்விக்கு காரணம்.

இதுவரை 11 போட்டிகளில் ஆடி விட்டோம். இதுவரை ஒரு பேட்டிங் யூனிட்டாக சிறப்பாக செயல்படவில்லை. இன்றும் சொதப்பி விட்டோம். இது எனக்கு வருத்தம் அளிக்கிறது. மீண்டும் அனைவரும் கலந்து பேச வேண்டும என அவர் தெரிவித்தார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.