ஐ.பி.எல் போட்டிகளில் வார்னர் புதிய மைல்கல்

நேற்று இரவு நடைபெற்ற ஐ.பி.எல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இதன் மூலம் புள்ளி பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறி உள்ளது ராஜஸ்தான் அணி. மேலும் பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் வெறும் 160/8 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனைwடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணி தோற்றாலும், அந்த அணி வீரர் டேவிட் வார்னர் மாபெரும் சாதனை செய்துள்ளார். வார்னர் நேற்றைய போட்டியில் 37 ரன் அடித்ததன் மூலம் இந்த ஐ.பி.எல் தொடரில் 611 ரன்களை குவித்துள்ளார்.

இதன் மூலம் ஐ.பி.எல் தொடரில் தொடர்ந்து 3 முறை 600 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை யாரும் இந்த சாதனையை செய்யவில்லை.

கடந்த 2016ம் ஆண்டு 848 ரன்னும், 2017ம் ஆண்டு 641 ரன்னும், இந்த ஆண்டு 11 போட்டியில் 611* ரன்னும் எடுத்துள்ளர்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.