நொடியில் தூங்கனும்னா இத ஒரு முறை படிசிட்டு அப்புறம் தூங்கி பாருங்க

பகலில் அனைவரும் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். ஆனால் இரவில் படுத்தவுடன் தூக்கம் பலருக்கு வருவதில்லை. நன்றாக தூங்கவில்லை என்றால் பகலில் வேலை செய்வதில் பல சிரமங்கள் ஏற்படும். இதனை தடுக்க இரவில் விரைவில் தூங்க வேண்டும் அல்லவா அதற்கு கீழே சில டிப்ஸ்.

முதலில் மனிதர்களுக்கு இரவில் தூக்கம் எவ்வளவு நேரம் தேவைப்படும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நாம் அனைவரும் பொதுவாக இரவில் எட்டு மணி நேரம் உறங்க வேண்டும் என கேள்விபட்டிருப்போம். ஆனால் உண்மை அதுவல்ல தூக்கம் மனிதனின் உடல்நிலை, ஆரோக்கியம், வேலையை பொறுத்து அமையும். சிலருக்கு 5 முதல் 6 மணி நேர தூக்கமே போதுமானது, சிலருக்கு 8 மணி நேரதிற்கு மேல் தூக்கம் தேவைப்படும். உடல் நிலை பாதிக்கபட்ட நேரத்தில் 10 முதல் 12 மணி நேர தூக்கம் கட்டாயம் தேவைப்படும்.

இரவில் படுத்தவுடன் தூங்குவதற்கு முதலில் தூங்கும் நேரத்தை தேர்வு செய்து அந்த நேரத்தை வழக்கமாக தூங்கும் நேரமாக வைத்து கொள்ள வேண்டும். பிறகு தூங்குவதற்கு அனர மணி நேரதிற்கு முன்பு படுக்கை அறைக்கு செல்ல வேண்டும். இந்த நேரம் இரவு 10 மணிக்கு முன்பாக இருக்க வேண்டும்.

குழந்தை நன்றாக தூங்க காரணம் தாலாட்டு . அதே போல் நாம் இரவில் நன்றாக தூங்க மெல்லிய சப்தம் அல்லது காதுக்கு இனிமையான பாடல்களை குறைந்த ஒளியில் கேட்டல் அவசியம்.

பகலில் கடுமையாக உழைப்பவர்களுக்கு இரவில் விரைவில் தூக்கம் வரும். எனவே அனைவரும் முடிந்த வரை கடுமையாக உழையுங்கள். அனைத்து வேலையையும் செய்யுங்கள். இதனை செய்ய முடியாதவர்கள் மற்றும் மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்வோர் இரவு தூங்கும் கண்டிப்பாக உடற்பயிற்சி அல்லது யோகா செய்ய வேண்டும்.

இரவு தூங்கும் முன் காபி, சிகரெட், மது போன்ற பொருட்களை சாப்பிடக்கூடாது. குறிப்பாக படுக்கை அறையில் டி.வி பார்ப்பதோ, செல்போன் மற்றும் கணிணி பயன்படுத்தக் கூடாது. முடிந்தால் இந்த பொருட்களை படுக்கை அறையில் இருந்து வேறு அறைக்கு மாற்றுங்கள்.

இரவில் படுத்தவுடன் தூக்கம் வராமல் இருப்பதற்கு வேலை பளு, மன அழுத்தம், மன சோர்வே காரணம். இதனை தவிர்க்க படுக்கையில் படுத்தவுடன் இனியனான பாடலை கேட்டு கொண்டே வாழ்வின் இனிமையான தருணங்களை மனதில் நினைத்து கொள்ளுங்கள்.

படுக்கையில் படுக்கும் முன்னர் சிறிது நேரம் மூச்சை இழுத்து விடுங்கள். வலது நாசி வழியே மூச்சை இழுத்து இடது நாசி வழியாக விடவும், இதே போல் இடது நாசியிலும் செய்ய வேண்டும். முக்கியமாக படுக்கையில் போர்வை மற்றும் தலையணை சுத்தமாக இருக்க வேண்டும். படுக்கை அறையின் வெப்பநிலை மிதமாக இருக்க வேண்டும்.

இரவில் குளித்துவிட்டு தூங்கினால் விரைவில் தூக்கம் வரும். முடியாதவர்கள் கால்களை நன்றாக நீரில் நனைத்துவிட்டு தூங்க வேண்டும். இதனை வழக்கப்படுத்தி கொண்டால் இரவில் நன்றாகவும் விரைவாகவும் தூங்கலாம்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.