ரெய்னா இடத்தில் அவரை இறக்குங்க தோனிக்கு அட்வைஸ் செய்த லெஜன்ட் கவாஸ்கர் மகன்

நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதரபாத் அணியை ராஜஸ்தான் அணி வீழ்த்தியது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆஃப் சுற்று உறுதியானது.

சி.எஸ்.கே நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிக வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்து இருந்தாலும், தொடக்கம் முதலே அந்த அணிக்கு மிகவும் தலை வலியாக இருப்பது அந்த அணியின் பேட்டிங் தான்.

குறிப்பாக கேதர் ஜாதவ் நடப்பு ஐ.பி.எல் தொடரில் மிகவும் மோசமாக விளையாடி வருகிறார். அவர் 12 போட்டிகளில் விளையாடி வெறும் 164 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். மேலும் அவரது சராசரி ஏறக்குறைய 20 மற்றும் ஸ்ரைக் ரேட் 100க்கும் குறைவு.

இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பைக்கான இந்திய அணியில் கேதர் ஜாதவ் உள்ள நிலையில், அவரது மோசமான ஃபார்ம் இந்திய அணிக்கு கவலை அளித்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் லெஜன்ட் சுனில் கவாஸ்கர் மகன் ரோகன் கவாஸ்கர் கேதர் ஜாதவை ஃபார்முக்கு கொண்டு வர ஒரு வழி கூறியுள்ளார்.

அதன் படி, சி.எஸ்.கே அணியில் கேதர் ஜாதவை மூன்றாவது வீரராகவும், ரெய்னாவை நான்காவது வீரராகவும் தோனி களம் இறக்க வேண்டும். அப்படி களம் இறக்கினால் கேதர் ஜாதவ்க்கு அதிக பந்துகளை சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைக்கும். பின் நிதானமாக பழைய ஃபார்மை மீட்டு விடுவார் ஜாதவ். இதை செய்தால் உலக கோப்பை போட்டிக்கு முன் ஜாதவை பழைய ஃபார்முக்கு கொண்டு வந்து விடலாம். அவருக்கும் அது அவருக்கு நல்ல தன்நம்பிக்கையை தரும் என தெரிவித்துள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.