IPL பிளே ஆஃப் மற்றும் இறுதி போட்டி தொடங்கும் நேரம் மாற்றியமைப்பு பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

நடப்பு ஆண்டு ஐ.பி.எல் தொடர் விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில்  லீக் போட்டிகள் முடிவடைந்து, பிளே ஆஃப் மற்றும் இறுதி போட்டிகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் நேற்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழு (CoA) மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தை (BCCl) சேர்ந்த தலைவர்கள் கூடி பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் நடப்பு ஐ.பி.எல் தொடரில் பிளே ஆஃப் மற்றும் இறுதி போட்டிகளின் நேரத்தை மாற்றியமைப்பது பற்றி கலந்து ஆலோசிக்கபட்டது. இறுதியில் இந்தாண்டு நடைபெற உள்ள பிளே ஆஃப் மற்றும் இறுதி போட்டிகள் இரவு 8 மணிக்கு பதில் அரை மணி நேரம் முன்பாக இரவு 7.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பி.சி.சி.ஐ மூத்த அதிகாரி பிரபல நாளிதழில் ஒன்றில் கூறியிருப்பதாவது. இந்தாண்டு Bடைபெற்ற சில போட்டிகள் ஸ்லோ ஓவர் ரேட்டால் இரவு 12 மணியை தாண்டி நடைபெற்றுள்ளது. இதனால் மக்கள் அவதியடைகின்றனர். அதே போல் இரவு நடைபெறும் போட்டியின் பிற்பாதியில் ஈரப்பதம் (Dew) தாக்கம் அதிகம் உள்ளது. இது போட்டிகளை மிகவும் பாதிக்கிறது.

மேலும் ஐ.பி.எல் போட்டி ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனும் பிளே ஆஃப் மற்றும் இறுதி போட்டி முடிந்த பின் நடக்கும் நிகழ்சிகளை ஒளிபரப்ப நேரத்தை மாற்றியமைக்குமாறு கோரிக்கை வைத்தது. இவற்றை எல்லாம் பரிசீலனை செய்து தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு பிளே ஆஃப் மற்றும் இறுதி போட்டிகள் இரவு 7 மணிக்கு தொடங்கியது குறிப்பிடதக்கது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.