அவர் மட்டும் அதிரடியாய் ஆடி இருந்தால் மேட்ச் மாறி இருக்கும் குமுறும் சச்சின்

நேற்று இரவு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

இப்போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணிக்கு கிறிஸ் லின் (54), கில்(76), ஆண்ரே ரஸல் (80) ரன்கன் என அனைவரும் சிறப்பாக ஆட, அந்த அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 232 ரன்களை குவித்தது.

இதனையடுத்து களம் இறங்கிய மும்பை அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி-காக் (0) மற்றும் ரோகித் சர்மா (12) ரன்னில் அவுட்டாகினர். இவர்களை தொடர்ந்து வந்த வீரர்களும் பெரியளவு ரன்களை குவிக்கவில்லை. ஆனால் அந்த அணி வீரர் ஹர்திக் பாண்டியா மட்டும் கொல்கத்தாவின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். அவர் 34 பந்தில் 91 ரன்களை குவித்து அவுட்டானார். இதனால் மும்பை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய சச்சின் கூறியதாவது, இப்போட்டியில் பவுலர்களை குறை கூற முடியாது. ஏனென்றால் பிட்ச் அப்படி பட்டது. ஹர்திக் பாண்டியா மிகவும் சிறப்பாக ஆடினார். அவருக்கு எனது வாழ்த்துகள்.

தொடக்கத்தில் ரோகித் சர்மா விரைவில் அவுட்டானது வருத்தமளிக்கிறது. அவர் சிறிது நேரம் நின்று ஆடியிருந்தால், இந்த மைதானத்தில் அவரை அவுட்டாக்கி இருக்க முடியாது. அவர் ஹர்திக் மற்றும் ரஸலை விட அபாரமாக ஆடக் கூடியவர். வேகம் மற்றும் சுழல் இரண்டையும் சிறப்பாக ஆடுபவர். அவர் சிறப்பாக ஆடியிருந்தால் மேட்ச் மாறியிருக்கும் என சச்சின் தெரிவித்துள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.