இந்த இரண்டு பேர் ஆடினால் தான் சி.எஸ்.கே அணிக்கு கோப்பை திட்டவட்டமாக தெரிவித்த அஜித் அகர்கர்

நடப்பு ஐ.பி.எல் தொடரின் முதல் பாதியில் சி.எஸ்.கே அணி தொடர் வெற்றிகளை பெற்று அசத்தியது. அதுவே இரண்டாவது பாதியில் கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

இதற்கு காரணம் அந்த அணியின் மிடில் ஆர்டர் தான். சி.எஸ்.கே அணியின் நட்சத்திர வீரர்கள் ரெய்னா மற்றும் ராயுடு ஆகியோர் பெரிதாக ஏதும் ஆட வில்லை.

ரெய்னா இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 243 ரன்களையும், சராசரி 20 மற்றும் 120 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியுள்ளார். அதே போல் ராயுடு 12 போட்டிகளில் விளையாடி 213 ரன்களையும், சராசரி 17.5 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 89 மட்டுமே வைத்துள்ளார்.

தொடர்ந்து ராயுடு மற்றும் ரெய்னா மீது நம்பிக்கை வைத்து அடுத்தடுத்து வாய்ப்புகளை தருகின்றனர் தோனி மற்றும் பிளெமிங். ஆனால் இதுவரை வாய்ப்பை அவர்கள் பயன்படுத்தி கொள்ளவில்லை.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜித் அகர்கர் கூறியதாவது., சி.எஸ்.கே அணி ஐ.பி.எல் கோப்பையை வெல்ல அந்த அணியில் தோனி மட்டும் இருந்தால் போதாது. அந்த அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரெய்னா மற்றும் ராயுடு ஆகியோர் தங்களது பொறுப்பை உணர்ந்து ஆட வேண்டும்.

இவர்களது மோசமான ஆட்டம் வாட்சன் மற்றும் டுபிளசில் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ராயுடு மற்றும் ரெய்னா சிறப்பாக ஆடினால் மற்ற பேட்ஸ்மேன்கள் மீதான அழுத்தம் குறையும். அவர்களும் சிறப்பாக ஆடுவார்கள். சி.எஸ்.கே அணியும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.