தோனியை நினைத்து தான் அதை செய்தேன் மைதானத்தை அதிர வைத்த ரிஷப் பண்ட்

நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி.

இப்போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி அணிக்கு ஷிகர் தவான் 50 ரன்கள் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஷ் அய்யர் 52 ரன்களை எடுத்து அசத்தினர். இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 187/7 என்ற ஸ்கோரை எட்டியது.

இதனையடுத்து களமிறங்கிய பெங்களுர் அணியில் நட்சத்திர வீரர்கள் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். அந்த அணியில் அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் 39 ரன் மற்றும் ஸ்டாய்னிஸ் 32 ரன்களை மட்டுமே எடுத்தனர். இதனால் பெங்களுர் அணி 20 ஓவர் முடிவில் 171/7 ரன்களை மட்டுமே சேர்த்து தோல்வியடைந்தது.

இப்போட்டியில் பெங்களுர் அணி வீரர் கிளாசன், அமித் மிஸ்ரா வீசிய பந்தை ஸ்கூப் ஷாட் ஆட முயற்சித்தார். அந்தபந்து அவரது மட்டையில் பட்டு பின் ஹெல்மெட்டில் பட்டு உயரே பறந்தது. இதை பார்த்த விக்கெட் கீப்பர் பண்ட் ஒரே தாவில் தாவி பிடித்தார். இந்த கேட்சை பார்த்து மற்ற டெல்லி வீரர்கள் பண்டை பாராட்டினர்.

இந்த கேட்ச் குறித்து பண்ட் கூறியதாவது., அந்த கேட்சை பிடிக்கும் போது மனதில் தோனியை நினைத்து கொண்டேன். அவர் அந்த சூழ்நிலையில் எப்படி சிந்தித்து செயல்பட்டிருப்பாரே அப்படியே நானும் செயல்பட்டேன் என பண்ட் தெரிவித்துள்ளார். பண்ட் சொல்வதை கேட்டு டெல்லி மைதாைனமே அதிர்ந்தது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.