போட்டியின் போது ஸ்டம்பை உடைத்த ரோகித் பிசிசிஐ வைத்த மாபெரும் ஆப்பு

நேற்று இரவு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி .

இப்போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணிக்கு ரஸல், ஷுப்மன் கில், கிறிஸ் என மூவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சை பதம் பார்த்தனர். இதனால் அந்த அணி 20 ஒலர் முடிவில் 232/2 என்ற இமாலய இலக்கை எட்டியது.

இதனையடுத்து களம் இறங்கிய மும்பை அணியில் பெரிய அளவில் யாரும் ரன்களை சேர்க்க வில்லை. அந்த அணியில் ஹர்திக் பாண்டியா மட்டும் 6 பவுண்டரி, 9 சிக்ஸ் உடன் 91 ரன்களை குவித்தார்.

இப்போட்டியில் மிகவும் எதிர்பார்த்த ரோகித் சர்மா 12 ரன்னில் கர்னி பந்தில் அவுட்டானார். தனது அணிக்காக பெரிய ரன்களை அடிக்காததால் அதிருப்தி அடைந்த ரோகித் சர்மா அவுட்டான உடன் ஸ்டம்பை தனது பேட்டால் தட்டி விட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ரோகித் சர்மாவின் இந்த செயலுக்கு பி.சி.சி.ஐ தற்போது அபராதம் விதித்துள்ளார். ரோகித் சர்மா ஐ.பி.எல் நடத்தை விதிமுறை 2.2 மீறியதால் போட்டி ஊதியத்தில் இருந்து 15% அபராதம் விதித்துள்ளது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.