இன்று ஹிட்மேன் பிறந்தநாள் அவரை பற்றி உலகம் அறியாத சில அரிய தகவல்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா இன்று ஏப்ரல்-30 தனது 32வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

ரோஹித் சர்மா தனது 20 வயதில் கடந்த 2007ம் ஆண்டு ஜுன் 23ந் தேதி அயர்லாந்துக்கு எதிராக தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். அந்நாள் முதல் இந்நாள் வரை கிரிக்கெட்டில் பல சாதனைகளை செய்துள்ளார்.

இந்நிலையில் அவரை பற்றி யாரும் அறிந்திடாத சில தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மாவின் பெற்றோர்களால் பள்ளி கட்டணத்தை கட்ட இயலாத சூழ்நிலையில், தனது கிரிக்கெட் திறமையால் பள்ளி நிர்வாகத்திடம் இருந்து ஸ்காலர்ஷிப் பெற்றார் ரோஹித்.

ரோஹித் சர்மாவின் குடும்பம் சைவ உணவை உண்ணும் குடும்பம். ஆனால் ரோஹித் சர்மாவுக்கு வீட்டுக்கு வெளியே பிடித்த உணவு முட்டை தான்.

ஒருமுறை ரோஹித் சர்மாவிடம் அவரது நண்பர் ஒருவர் 45 முட்டைகளை இடைவெளி இல்லாமல் உண்ண வேண்டும் என்று சவால் லிட்டார். அதை ரோஹித் வெற்றிகரமாக செய்து முடித்தார் ரோஹித்.

ரோஹித் சர்மாவின்  264* நாட் அவுட் ரன்னை வைத்து 1983, 1987, 1992, 1996, 1999 உலக கோப்பையை எளிதில் வென்று விடலாம்.

ஒரு முறை விரேந்திர சேவாக்கை பார்ப்பதற்காக ரோஹித் சர்மா தனது பள்ளிகூடத்தை கட் அடித்தார். அதற்கு தண்டனையும் பெற்றார்.

கடந்த 2007-08ம் ஆண்டு ஆஸ்ரேலியாவுக்கு சுற்றுபயணம் சென்ற போது 4 ஜீன்ஸ் பேண்ட் மற்றும் 10 டி-ஷர்டை ரூ 1.5 லட்சத்திற்கு வாங்கினார்.

இந்தியன் கிரிக்கெட் அணியின் ஒய்வறையில் அதிகம் தூங்க கூடியவர் ரோஹித் சர்மா தான்.

ரோஹித் சர்மாவை சிறந்த பேட்ஸ்மேனாக மாற்றியவர், மும்பை அணி வீரர் சித்தேஷ் லாட் தந்தை தினேஷ் லாட் தான். அவர்தான் ரோஹித் சர்மாவின் பயிற்சியாளர்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.