உலக கோப்பையில் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தாது முன்னாள் கேப்டன் கருத்து

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகள் மோதும் போட்டிகளை காண உலகம் முழுவதும் ஒரு ரசிகர் பட்டாளம் எப்போதும் உண்டு.

கடந்த சில ஆண்டுகளாக இவ்விரு அணிகளும் ஐ.சி.சி நடத்தும் தொடர்களில் மட்டுமே பங்கேற்று வருகின்றன. அதை தவிர தனிபட்ட முறையில் ஒருநாள், டெஸ்ட், டி20 தொடர்களில் விளையாடுவது இல்லை.

உலக கோப்பை போட்டிகளை பொறுத்தவரை இதுவரை இந்திய அணியை பாகிஸ்தான் அணி தோற்கடித்தது இல்லை. ஆனால் 2017ம் ஆண்டு சாம்பியன் டிரோபி தொடர் இறுதி போட்டியில் இந்திய அணியை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

இந்நிலையில் ஜூன் 16ந் தேதி நடைபெறும் உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வெல்லும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, நான் பாகிஸ்தான் அணியை பல ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். சில போட்டிகளில் தோல்வி அடைந்த பிறகும் மனம் தளராமல் போராடி தொடரை வெற்றி பெறும் அளவிற்கு அந்த அணி வல்லமை பெற்றுள்ளது.

இது வரை பாகிஸ்தான் உலக கோப்பையில் இந்திய அணியை தோற்கடித்தது இல்லை. பாகிஸ்தான் அணி 2017 சாம்பியன் ட்ரோபியில் இந்தியாவை வீழ்த்திய தன்னம்பிக்கையில் இம்முறை உலக கோப்பை போட்டிகளில் களம் இறங்கும். அதனால் எளிதில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தும்.

அதே போல் சாம்பியன் ட்ரோபி தோல்விக்கு இந்திய அணி பதிலடி தர நினைக்கும் இதனால் ஜூன் 16ந் தேதி உலக கோப்பை போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.