ரோகித் சர்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த ஹர்பஜன் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா இன்று ஏப்ரல்-30 தனது 32வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

ரோஹித் சர்மா இதுவரை மூன்று முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐ.பி.எல் கோப்பையை பெற்று தந்துள்ளார். இதனால் அவரது பிறந்த நாளுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த பலரும் தற்போது அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரரும், தற்போது சி.எஸ்.கே அணிக்கு விளையாடி வருபவருமான ஹர்பஜன் சிங், மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு டுவிட்டர் மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, எனது சகோதரன் ரோகித் சர்மாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்வில் எல்லா இன்பங்களும் உனக்கு கிடைக்கட்டும். கடவுள் உன்னை ஆசிர்வதிப்பார் என அவர் பதிவிட்டுள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.