இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்? கங்குலி பரபரப்பு பேட்டி

தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராய் இருப்பவர் ரவி சாஸ்த்திரி . இவரது ஒப்பந்தம் வருகிற உலக கோப்பை தொடருடன் முடிவடைகிறது. இதனையடுத்து இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் நடப்பு ஐ.பி.எல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. அந்த அணி 12 போட்டிகளில் 8ல் வெற்றி கண்டுள்ளது. புள்ளி பட்டியலில் முதலிடமும் பிடித்துள்ளது.

அந்த அணியின் தொடர் வெற்றிக்கு முக்கிய காரணம் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தான். பயிற்சியாளராக பாண்டிங்கின் செயல்பாடுகளை பார்த்த இந்திய ரசிகர்கள் பலரும், அவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வர வேண்டும் என சமூக வலைதளங்களின் கருத்து தெரிவித்தனர்.

இது குறித்து பேசிய கங்குலி கூறியதாவது., ரிக்கி பாண்டிங்கிற்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வர முழு தகுதி உள்ளது. அவர் பயிற்சியாளராக வர வேண்டும் என்றால் 8 முதல் 9 மாதங்கள் வரை தனது குடும்பங்களை விட்டு தனியாக இந்தியாவில் இருக்க வேண்டி வரும்.

அதற்கு அவர் தயாராக இருக்கிறாரா என்று தெரியவில்லை. அவர் தயார் என்றால் நானே அவரை பயிற்சியாளராக நியமிக்க பரிந்துரை செய்கிறேன். மேலும் அவர் பாண்டிங் உடனான நட்பு குறித்து பேசியதாவது. நாங்கள் இருவரும் தற்போது நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம். இருவரும் எதிரிகள் போல் இருந்தது ஒரு காலம். தற்போது அதெல்லாம் மாறி விட்டது. அவர் உண்மையிலே டெல்லி அணியை மாற்றி காட்டி விட்டார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.