இன்றைய போட்டியில் அவர் தான் அச்சுறுத்தலாக இருப்பார் ஸ்டீபன் பிளெமிங் பேட்டி

இன்று நடைபெறும் 50வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர் கொள்கிறது ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி .

இரு அணிகளும் ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவுள்ள நிலையில், இன்றைய போட்டி புள்ளி பட்டியலில் யார் முதலிடத்தில் நீடிக்க போகிறார்கள் என்பதை உறுதி செய்யும்.

இந்நிலையில் இப்போட்டி குறித்து சி.எஸ்.கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது., மும்பை அணிக்கு எதிரான தோல்வி சென்னை அணிக்கு தேவையானது தான். இது நாங்கள் சுதாரித்து கொள்ளும் நேரம். முந்தைய போட்டியில் இருந்து நிறைய விஷயங்களை கற்றுள்ளோம்.

தோனியின் உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது. ஒரு வேளை இன்றைய போட்டியில் அவர் விளையாடவில்லை என்றால், அவருக்கான மாற்று வீரர் எங்களிடம் உள்ளார்.

முந்தைய போட்டியில் தோனியின் கடைசி நேர விலகலே தோல்விக்கு காரணமாய் அமைந்தது. தோனி இல்லாத போட்டியில் மூத்த வீரர்கள் சிறப்பாக ஆட வேண்டும். ஆனால் அவர்கள் இதுவரை சிறப்பாக ஆட வில்லை என்பது வருத்தமளிக்கிறது.

டெல்லி அணி தற்போது தரமான அணியாக உள்ளது. அந்த அணியின் பவுலர் ரபாடா உச்ச கட்ட ஃபார்மில். அவர் தான் இன்று சென்னை வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என நினைக்கிறேன். இன்றைய போட்டியில் வெற்றி பெற டெல்லி அணியின் மிடில் ஆர்டர் விக்கெட்டுகளை விரைவில் எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.