கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு தடை? பி.சி.சி.ஐ மூத்த அதிகாரி தகவல்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஓனர்களில் ஒருவர் நெஸ் வாடியா. இவர் சமீபத்தில் கோடை விடுமுறையை கொண்டாட ஜப்பான் சென்றார். அங்கு அவர் போதை பொருட்களை வைத்திருந்த குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது ஜப்பான் நீதி மன்றம்.

இதனால் தற்போது அந்த அணிக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஐ.பி.எல் தொடரில் இருந்து நீக்கப்படும் என பி.சி.சி ஐ.-இன் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் விதிமுறை :
எந்த ஒரு அணியின் உரிமையாளரோ அல்லது  அதிகாரிகளோ அணியின் பெயருக்கோ, ஐ.பி.எல் தொடருக்கோ, பி.சி.சி.ஐ-இன் பெயருக்கு பங்கம் விளைவிக்கும் படி வெளி உலகில் செயல்படக் கூடாது. அப்படி நடந்து கொண்டால் அந்த அணி ஐ.பி.எல் தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வாய்ப்பு உள்ளது.

இதற்கு சிறந்த உதாரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிகள் தான். அந்த அணியை சேர்ந்த நிர்வாகிகள் குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோர் ஐ.பி.எல் போட்டிகளில் பெட்டிங்கில் ஈடுபட்டனர். குற்றம் நிருபிக்க பட்டதால் இரு அணிகளும் இரண்டு ஆண்டு ஐ.பி.எல் விளையாட தடை விதிக்கப்பட்டது.

தற்போது அதே நிலைதான் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் ஏற்ப்பட்டுள்ளது.  இருந்தாலும் முதலில் ஐ.பி.எல் விதிமுறைகளின்படி, இந்த விவகாரம் முதலில் விசாரணை ஆணையத்துக்கு அனுப்பப்படும். அதன்பின் பி.சி.சி.ஐ குறைதீர்ப்பு அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு தண்டணை முடிவு செய்யப்படும்.

இது குறித்து பி.சி.சி.ஐ மூத்த அதிகாரி கூறியதாவது., தவறு செய்த போது பிற அணிகளுக்கு என்ன நடந்ததோ அதே தான் பஞ்சாப் அணிக்கும். நெஸ் வாடியா மீது ஜப்பான் நீதிமன்றத்தின் தீர்ப்பு அந்த அணிக்கு நிச்சயம் சஸ்பெண்ட் பெற்று தரும் என்றார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.