நான் தோனியிடம் இருந்து இதை எதிர் பார்க்கவில்லை அதிர்ந்து போயிட்டேன் கங்குலி பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் தலை சிறந்த கேப்டன்களுள் ஒருவர் சவரவ் கங்குலி. இவர் 2003 உலக கோப்பையில் இந்திய அணியை இறுதி போட்டி வரை அழைத்து சென்றார். மேலும் 2000ம் ஆண்டு மேட்ச் பிக்சிங் புகாருக்கு பிறகு இந்திய அணியை கட்டடமைப்பும் செய்தவர்.

கங்குலி தோனியின் கேப்டன்சிபின் கீழ் ஒரு சில போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். இந்நிலையின் தோனியின் கேப்டன்சி குறித்தும், கடந்த 2008ம் ஆண்டு ஓய்வு பெறும் போது, ஆஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், கடைசி ஒரு சில ஓவர்களை மட்டும் தோனி தன்னை கேப்டனாக செயல்பட சொன்னதை பற்றி கங்குலி தற்போது கூறியுள்ளார்.

கங்குலி கூறியதாவது, தோனி கேப்டனாக செயல்பட சொன்னது 2008 ஆஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி, இந்த நிகழ்வு நடந்து 10 வருஷம் இருக்கும். கடைசி சில ஓவர் மட்டும் கேப்டனாக இருக்க சொன்னார். நான் தோனியிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை. ஒரு நொடியில் அதிர்ந்து போயிட்டேன். முதலில் மறுத்தேன். பின் அன்பு கட்டளையால் அதை செய்து கொடுத்தேன்.

NAGPUR, INDIA – NOVEMBER 10: Sourav Ganguly of India is carried by team mates VVS Laxman and Harbhajan Singh during day five of the Fourth Test match between India and Australia at Vidarbha Cricket Association Stadium on November 10, 2008 in Nagpur, India. This was Sourav Ganguly’s last Test match. (Photo by Global Cricket Ventures/BCCI via Getty Images)

தோனி எப்போது எதிரணியினர் என்ன வியூகங்கள் செய்கின்றனர் என்பதை எளிதில் கண்டுபிடித்து விடுவார். அதுதான் அவரை சிறந்த கேப்டனாக்கி உள்ளது. தோனி தன் தலைமையின் கீழ் விளையாடும் வீரர்களுக்கு அதிக சுதந்திரம் தருகிறார். வீரர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதை போட்டியின் போது செய்ய அனுமதிக்கிறார்.

தோனி போன்ற கேப்டன்களை 1, 2, 3.. என ஸ்டார் ரேட்டிங் செய்ய விரும்பவில்லை. அவர் இந்திய கிரிக்கெட் அணியின் தலை சிறந்த கேப்டன்களில் ஒருவராக எப்போதும் இருப்பார். தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் நல்ல ஃபார்மில் உள்ளார். அது இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பையில் இந்திய அணிக்கு மிகவும் உதவும்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.