வார்னருக்கு பதில் களம் இறங்கும் அதிரடி வீரர் தாக்கு பிடிக்குமா மும்பை அணி

ஐ.பி.எல் 51வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை மும்மை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது கேன் லில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

இதுவரை ஹைதராபாத் அணிக்கு கிடைத்த வெற்றி எல்லாம் டேவிட் வார்னர் மற்றும் பேர்ஸ்டோவின் பேட்டிஙகின் மூலம் கிடைத்தது. தற்போது இருவரும் உலக கோப்பை பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்ற தங்கள் நாட்டிற்கு திரும்பி உள்ளனர்.

இதனால் அந்த அணியின் பேட்டிங் கேள்வி குறியாகி உள்ளது. ஹைதராபாத் அணியில் மிடில் ஆர்டரில் மணிஷ் பாண்டே மட்டுமே ஃபார்மில் உள்ளார். கேன் வில்லியம்சன் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர்.

இந்நிலையில் வார்னர், பேர்ஸ்டோவின் பிரிவு அத்த அணியின் பேட்டிங்கை பலவீனம் அடைய செய்துள்ளது. இதனை சமாளிக்க நியூஸ்லாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் மார்டின் கப்டிலை நாளைய போட்டியில் களம் இறங்க உள்ளார். இந்த தகவலை அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.