இதை யாராலும் செய்ய முடியாது ஆனால் தோனி செய்தார் ரெய்னா அதிரடி பேட்டி

நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 80 ரன்கள் வித்தியாத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி . மேலும் இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.

இப்போட்டியில் முதலில் சென்னை அணி பேட் செய்தது. தொடக்கத்தில் வாட்சன் 0வில் அவுட்டானாலும். ரெய்னா மற்றும் டு பிளசிஸ் ஆகியோர் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். ரெய்னா 59 மற்றும் டுபிளசிஸ் 39 ரன்கள் அடித்து அவுட்டாகினர், இருந்தாலும் சென்னை அணி 15 ஓவர் முடிவில் 100 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

இதனையடுத்து களமிறங்கிய தோனி டெல்லி அணியின் பந்து வீச்சை சிதறடித்தார். 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சருடன் 22 பந்தில் 44 ரன்களை குவித்தார். தோனியின் கடைசி கட்ட அதிரடியால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 179/4 ரன்களை குவித்தது.

இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி சென்னை அணியின் சுழற்பந்து வீச்சில் 16.2 ஓவரில் 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டெல்லி அணி பேட்டிங்கின் போது ரவீந்திர ஜடேஜாவின் ஒரே ஒலரில் ஸ்ரேயாஷ் ஐயர் மற்றும் கிறிஸ் மோரிஸை அடுத்தடுத்து மின்னள் வேகத்தில் ஸ்டம்பிங் செய்தார் தோனி . இது சென்னை அணியின் லெற்றியை உறுதி செய்தது.

போட்டி முடிந்த பின் நிருபர்களுக்கு பேட்டியளித்த ரெய்னா கூறியதாவது. தோனி செய்த இரண்டு ஸ்டம்பிங்கும் மிகவும் அபாரமானது. மின்னல் வேகத்தில் செய்தார். ஸ்டம்புக்கு பின்னாள் இருந்து பந்து என்ன வேகத்தில் வருகிறது, எவ்வளவு திரும்ப போகிறது என்பதை தோனி எளிதில் கணித்து விடுகிறார். இது போன்ற வேகத்தில் ஸ்டம்பிங்கை யாராலும் செய்ய முடியாது. ஆனால் தோனி இதை செய்கிறார். அதற்கு தோனியின் திறனும் பயிற்சியும் தான் கை கொடுக்கிறது. தோனியின் பேட்டிங்கும் அபாரமாக இருந்தது. காய்சலில் இருந்து திரும்பி வந்து இப்படி பவராக ஆடுவது எளிதல்ல. தோனியுடன் இணைந்து பேட்டிங் செய்வது மிகவும் சுலபமானது என அவர் தெரிவித்தார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.