தமிழக ரசிகர்கள் என்னை தல என கூப்பிடுகிறார்கள் தோனி நெகிழ்சி

நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அனிகள் மோதின. இப்போட்டியில் சென்னை சூப்பர் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மேலும் புள்ளி பட்டியலிலும் முதலிடம் பிடித்தது.

இப்போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணியில் வாட்சன் 0 ரன்னில் அவுட்டானார். இதனை தொடர்ந்து டுபிளசிஸ் மற்றும் ரெய்னா இணைந்து அணியின் ஸ்கோரை உயர்தினர். டு பிளசிஸ் 39 மற்றும் ரெய்னா 59 ரன்களைில் அவுட்டாகினர். இதனையடுத்து வந்த ஜடேஜா மற்றும் தோனி ஆகியோர் பேட்டிங்கில் அதிரடி காட்டினர். தோனி 22 பந்தில் 44 ரன்னும், ஜடேஜா 10 பந்தில் 25 ரன்களை குவித்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்தது சென்னன் அணி .

இதனையடுத்து களம் இறங்கிய டெல்லி அணியினர், சென்னை அணியின் சுழற் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுதடுத்து அவுட்டாகினர். இதனால் டெல்லி அணி 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சென்னை அணி சார்பில் இம்ரான் தஹிர் 4 விக்கெட் மற்றும் ஜடேஜா 3 விக்கெட்டை எடுத்தனர்.

இப்போட்டியில் முதலில் தோனி விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோனி கேப்டனாக டாஸ் போட வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தார். இதை எதிர்பாராத சென்னை ரசிகர்கள் தோனி.. தோனி.. என கூச்சல் போட்டனர். மேலும் விசில்களை அடித்து மைதானத்தை அதிர விட்டனர் ரசிகர்கள். இந்த விசில் சந்தமும், தோனி என்ற கூச்சலும் போட்டி முடியும் வரை  குறையவில்லை. தோனி ஒவ்வொரு சிக்ஸ் அடிக்கும் போதும், ஸ்டம்பிங் செய்யும் போதும் இந்த சத்தம் அதிகரித்து கொண்டே தான் இருந்தது.

போட்டி முடிந்த பின் இதைப் பற்றி கூறிய தோனி., தமிழ்நாட்டு மக்கள் என்னை “தல” என்று அழைக்கின்றனர். அது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அவர்கள் எனக்கு மட்டுமல்ல எனது அணியினருக்கும் அதிக சப்போர்ட் தருகின்றன. நான் தமிழக மக்களை மிகவும் நேசிக்கிறேன். நான் முதலில் மைதானத்தில் நுழையும் போது விசில் சத்தம் பறந்தது. முதலில் இதை நான் சி.எஸ்.கே பாடல் என நினைத்தேன். பின் தான் தெரிந்தது அது ரசிகர்களின் ஆரவாரம் என்று. எனக்கு கிடைத்த செல்ல பெயரில் தல என்ற பெயர் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.