நான் வாழ்வில் உயர இவர் மட்டும் தான் காரணம் வேறு யாரும் இல்லை அஸ்வின் அதிரடி பேட்டி

நடப்பு ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருப்பவர் தமிழக வீரர் ரவிசந்திரன் அஸ்வின். இவர் பஞ்சாப் அணியில் செய்யும் சில அதிரடி மாற்றங்களும், களத்தில் அவர் செய்யும் சில தந்திரங்களும் கிரிக்கெட் விமர்சனர்களிடையே அவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்துள்ளது.

அவர் கடந்த ஒராண்டாக ஒருநாள் மற்றும் டி20க்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். அதே சமயம் தற்போதும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் ஒர் அங்கமாக உள்ளார்.

அவருக்கு 32 வயது ஆகியும் இதுவரை கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை குறைத்து கொள்ளவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் புதுமையான பந்துகளை வீசி அசத்தி வருகிறார்.

அஸ்வின் முதலில் கடந்த 2008ம் தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணியில் தான் அறிமுகமானார். அஸ்வின் 9 ஆண்டுகள் தோனி தலைமையிலான சி.எஸ்.கே மற்றும் ரைசிங் சூப்பர் ஜெயன்ட் அணியில் விளையாடி உள்ளார். தோனி தான் அஸ்வினை சர்வதேச சிரிக்கெட்டில் அறிமுகம் செய்தார்.

இந்நிலையில் தான் வாழ்கையில் உயர யார் காரணம் என்பதை அஸ்வின் தற்போது தெரிவித்துள்ளார். அதன்படி

எனது கிரிக்கெட் வாழ்வில் நான் மிகப் பெரிய உயரத்தை அடைவதற்கு தோனி பெரும் பங்கு ஆற்றியுள்ளார். சென்னை அணியில் நான் இருந்த போது என்னை எப்போதும் உற்சாகப்படுத்துவார். புதுமையான பந்துகளை கற்று கொள்ளவும், அதை களத்தில் செயல்படுத்தவும் உதவி செய்தார்.

எப்போது தோனி எனக்கு அறிவுரை வழங்கி கொண்டே இருப்பார். தவறு செய்தால் அதை சுட்டி காட்டி திருத்தவும் செய்துள்ளார். தோளி தான் என்னை வலிமை படுத்தினார் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.