அதை நிரூபித்தால் உடனே பதவில் இருந்து விலகுகிறேன் எடப்பாடிக்கு சவால் விட்ட துரைமுருகன்

கடந்த மார்ச் மாத இறுதியில் தி.மு.க பொருளாளர் துரை முருகன் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த தேர்தலுக்கு முன் நடந்த இந்த சோதனை தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

இதனையடுத்து சூலூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தி.மு.க பொருளாளர் துரை முருகன் வீட்டில் நடத்தப்பட்ட வருமான லரிசோதனையில் 12 கிலோ தங்கம் மற்றும் 13 கோடி ரூபாய் கைப்பற்ற பட்டதாகவும், இந்த பணம் அவருக்கு எப்படி வந்தது என மக்கள் சிந்திக்க வேண்டும் என தேர்தல் பரப்புரையில் கூறியிருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தவறான தகவல்களை கூறி வருவதாக துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் வருமான வரி சோதனையின் போது எனக்கு சொந்தமான வீட்டில் இருந்து 10 லட்சம் ரூபாய் மட்டுமே கைப்பற்றப்பட்டது. அதை வருமான வரி அதிகாரிகள் தந்த ரசீதை பார்த்தால் தெரியும். எனது வீட்டில் இருந்து 12 கிலோ தங்கம் மற்றும் 13 கோடி ரூபாய் ஏதும் கைப்பற்றவில்லை.

அப்படி கைப்பற்றியதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுவது ஜமுக்காலத்தில் வடிகட்டிய பொய். ஒரு வேளை முதல்வர் அதை நிரூபித்தால் தி.மு.க பொருளாளர் பதவி மற்றும் எதிர்கட்சி தலைவர் என்ற அரசு பதவியில் இருந்து நான் விலக தயார். அப்படி நிருபிக்க முடியவில்லை் என்றால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியில் இருந்து விலக தயாரா என சவால் லிட்டுருக்கிறார் துரைமுருகன்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.