ஐபிஎல் சிறந்த அணி தோனிக்கு இடமில்லை புறக்கணிப்பு

2019ம் ஆண்டின் ஐ.பி.எல் தொடர் இன்று நடைபெறும் இறுதி போட்டியுடன் நிறைவடைகிறது. இப்போட்டியில் ஐ.பி.எல் வரலாற்றில் ஜாம்பாவான் அணிகளாக கருதப்படும்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் தனது ஐ.பி.எல் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார்.

இந்த அணிக்கு சன் ரைசர்ஸ் அணி பேட்ஸ்மேன் டேவிட் வார்னரை கேப்டனாக நியமித்துள்ளார் சேவாக். மேலும் நடப்பு தொடரில் சிறப்பாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ, ஹர்திக் பாண்டியா மற்றும் ரபாடா ஆகியோரையும் தனது அணியில் தேர்வு செய்துள்ளார்.

இந்த ஆண்டு ஐ.பி.எல்லில் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் அபாரமாக செயல்பட்டு வரும் தோனிக்கு சேவாக் தனது அணியில் இடம் தராமல் புறக்கணித்துள்ளார் சேவாக். தோனிக்கு பதில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் மற்றும் ஃபினிசராக ஆன்ரே ரஸலை தேர்வு செய்துள்ளார்.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இம்ரான் தாஹிருக்கும் சேவாக் தனது அணியில இடம் தரவில்லை. அந்த இடத்தில் ராகுல் சாஹர் மற்றும் ஸ்ரேயாஷ் கோபால் என்ற இரு புதிய லெக் ஸ்பின்னர்களை தேர்வு செய்துள்ளார்.

விரேந்தர் சேவாக் ஐ.பி.எல் லெவன்:
ஷிகார் தவன், ஜானி பேர்ஸ்டோ, கே.எல்.ராகுல், டேவிட் வார்னர் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஆன்ரே ரஸல், ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஷ் கோபால், கசிகோ ரபாடா, ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.