தோனி அவுட்டா நாட் அவுட்டா அனில் கும்ளே சொன்ன பளிச் பதில்

2019ம் ஆண்டின் ஐ.பி.எல் இறுதி போட்டி நேற்று ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐ.பி.எல் கோப்பையை தட்டி சென்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

இப்போட்டியில் தோனிக்கு கொடுக்கப்பட்ட ரன் அவுட் தான் மும்பை அணி வெற்றி பெற பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

இப்போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி 149/8 ரன்களை எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 73 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. 4வது விக்கெட்டுக்கு தோனி களம் இறங்கினார்.

ஹர்திக் பாண்டியா வீசிய 12வது ஓவரின் 4வது பந்தில் தட்டி விட்டு சிங்கிள் எடுத்தார் வாட்சன். இந்த பந்தை பிடித்து மலிங்கா ரன் அவுட் செய்ய ஸ்டம்பை நோக்கி எறிய ஓவர் த்ரோவானது. இதனால் இரண்டாவது ரன் ஓடிய தோனி இஷான் கிஷனால் ரன் அவுட் செய்யப்பட்டார்.

இந்த ரன் அவுட் கள நடுவரால் மூன்றாவது நடுவரிடம் பரிசீலனைக்கு அனுப்பபட்டது. ரீப்ளேவில் தோனியின் பேட் க்ரீஸை தொடும் போது பந்து ஸ்டம்ப்பில் சரியாக அடித்தது. எத்தனை கேமரா கோணங்களில் பார்த்தாலும் தோனியின் ரன் அவுட் அவுட்டா? நாட் அவுட்டா? என தெரியவில்லை. சில நிமிடங்களுக்கு பின் மூன்றாவது நடுவர் தோனி ரன் அவுட் என தனது முடிவை அறிவித்தார். இது சென்னை ரசிகர்களுக்கு அதிருப்தியை தந்தது.

இப்போட்டி முடிந்த பின் டக் அவுட் நிகழ்ச்சியில் பேசிய அனில் கும்ளே கூறியதாவது., தோனிக்கு அவுட் கொடுத்தது நியாயமற்றது. இது போன்ற தருணங்களில் பேட்ஸ் மேன் அவுட் என்பதற்கு சரியா ஆதாரம் இல்லாத போது அல்லது அதிக குழப்பம் இருக்கும் போது பேட்ஸ் மேனுக்கு ஆதரவாக தான் நடுவர் தீர்ப்பு தர வேண்டும். தோனிக்கு நாட் அவுட் தான் நடுவர் தத்திருக்க வேண்டும். அவுட் கொடுத்து துர்திருஷ்டவசமானது என அனில் கும்ளே தெரிவித்தார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.