அடுத்த ஆண்டு வலிமையாக வருவோம் வாட்சன் அதிரடி பேட்டி

மே 12ந் தேதி நடைபெற்ற ஐபிஎல் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதனால் 4வது முறையாக கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை நழுவ விட்டது சென்னை அணி.

இந்தாண்டு ஐ.பி.எல் தொடர் முழுவதும் சென்னை அணியில் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பலாக அமைந்தது. ரெய்னா, ராயுடு, கேதர் ஜாதவ் போன்ற வீரர்கள் கடைசி வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

சென்னை அணி புள்ளி பட்டியலில் டாப்பில் இருந்ததற்கு தோனியின் பேட்டிங்கும், தாஹிர், ஹர்பஜன், தீபக் சாஹர் போன்றோரின் சிறப்பான பந்து வீச்சும் தான் காரணம்.

வாட்சன் தொடக்கத்தில் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தினாலும், நாக் அவுட் சுற்றின் போது சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக இறுதி போட்டியில் காயத்தை பொருட்படுத்தாமல் ரத்தம் சொட்ட விளையாடினார். இருந்தாலும் ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை.

இந்தாண்டு சென்னை அணிக்கு நிறைகளை விட குறைகளே அதிகம் இருந்தது. பேட்டிங் பீல்டிங்கில் படு சொதப்பல்.

இந்நிலையில் சி.எஸ்.கே வீரர் வாட்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது., அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வலிமையாக மீண்டும் வருவோம்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.