ஒரே ஊசியால் ஒரே கிராமத்தில் 500 பேருக்கு ஹெச்.ஐ.வி தொற்று அதிர்ச்சி செய்தி

தென் பாகிஸ்தானின் லர்கானா மாவட்டத்தில் உள்ள ராடோ டெரோ என்ற கிராமத்தில் ஹெச்.ஐ.வி கிருமிகளை கட்டுபடுத்தும் தனியார் அமைப்பு முகாம் ஒன்றை நடத்தியது.

இந்த முகாமில் அந்த கிராமத்தில் இருக்கும் குழந்தைகள் உட்பட அனைவருக்கு ஹெச்.ஐ.வி பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதைைையின் முடிவில் அந்த கிராமத்தில் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டுபிடிக்கபட்டது. இதில் ஹெச்.ஐ.வி கிருமியால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என்பது குறிப்பிடதக்கது.

இதே அமைப்பு சென்ற வாரம் அதே கிராமத்தில் சிலரிடம் மட்டும் ஹெச்.ஐ.வி பரிசோதனை செய்தது. இதில் 90 பேருக்கு ஹெச்.ஐ.வி கிருமி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் இவ்வளவு பேருக்கு எப்படி ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட்டிருக்க முடியும் என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்த போது ஒர் அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்தது.

ஆய்வின் முடிவில், ஒரே ஊசியை மறுசுழற்சிக்கு அனுப்பாமல் அதையே அனைவருக்கும் பயன்படுத்தியதன் விளைவே இத்தனை பேருக்கு ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது. ஹெச்.ஐ.வி தொற்று பரவ காரணமாய் இருந்த மருத்துவர் முசாஃபர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இதனை தொடர்ந்து தான் அந்த கிராமம் முழுக்க குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஹெச்.ஐ.வி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 500 பேருக்கு மேல் பாதிக்கபட்டிருப்பதும் தெரிய வந்தது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.