சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து யுவ்ராஜ் சிங் ஓய்வு?

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவர் யுவ்ராஜ் சிங். கடந்த 2011ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது போது அத்தொடர் முழுவதும் ஆல் ரவுண்டராக ஜொலித்தவர் யுவராஜ் சிங்.

புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த பின் இந்திய அணியில் தனது இடத்தை தக்க வைத்து கொள்ள முடியாமல் தவித்தார். கடந்த 2017ம் ஆண்டு வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணியில் கடைசியாக இடம் பெற்றிருந்தார். தற்போது இந்திய அணியில் அணியில் இருந்து முழுமையாக ஓரம் கட்டப்பட்ட நிலையில், ஐபிஎல் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.

இந்நிலையில் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் பங்கேற்பதற்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து யுவ்ராஜ் சிங் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், முதல் தர மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற யுவராஜ் சிங் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக விரைவில் பிசிசிஐயிடம் பேசி முடிவு செய்ய உள்ளார். வெளிநாடுகளில் நடக்கும் டி20 தொடரில் பங்கேற்க யுவராஜ் சிங் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். கனடாவில் நடக்கும் ஜிடி20 போட்டி, அயர்லாந்து, ஹாலந்து, கரீபியன் ஆகிய நாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில் விளையாட விருப்பமாக இருப்பதால், பிசிசிஐ அனுமதியைக் கோருகிறார்.

ஒரு வேளை பிசிசிஐ வெளிநாட்டு தொடரில் விளையாட அனுமதி அளித்தால், உடனே தனது ஓய்வை அறிவிப்பார். முதல் தர கிரிக்கெட்டில் இருந்து யுவ்ராஜ் ஓய்வு பெற்றாலும், பிசிசிஐயின் பதிவு பெற்ற டி20 வீரராக தான் இருப்பார். இதனால் யுவ்ராஜ் சிங் விஷயத்தில் பிசிசிஐ விதிகளை நன்கு ஆராய வேண்டியுள்ளது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.