அந்த தோல்விக்கு பின் மீடியாக்கள் எங்களை தீவிரவாதிகள் போல் நடத்தினர் தோனி வருத்தம்

கடந்த 2007ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை போட்டிகள் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்றது. இத்தொடரில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியிலும் இலங்கைக்கு எதிரான போட்டியிலும் படு தோல்வி அடைந்தது. இதனால் அந்த உலக கோப்பையில் லீக் சுற்றிலே வெளியேறி அதிர்ச்சி அளித்தது இந்திய அணி.

இதனால் உலக கோப்பை அணியில் இடம் பெற்ற அனைத்து வீரர்களும் மீடியாக்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டன. இத்தொடரில் இரண்டு முக்கிய போட்டிகளில் டக் அவுட் ஆனதால் தோனியும் கடுமையான விமர்சனத்தை சந்தித்தார்.

இந்நிலையில் 2007 உலக கோப்பை தோல்வி குறித்து தோனி கூறியிருப்பதாவது, இன்னும் வங்க தேசத்துக்கு எதிரான தோல்வி இன்னும் என்னை காயப்படுத்தி கொண்டு தான் உள்ளது. 2007 உலக கோப்பை தொடரில் லீக் சுற்றில் வெளியேறினோம். இத் தோல்விக்கு இந்திய வீரர்கள் யாரும் துளியும் வருத்தபட வில்லை என மக்கள் கருதினார்கள். மீடியாக்கள் எங்களை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

ஒரு விளையாட்டு வீரராக வெற்றி தோல்வி இரண்டையும் சமாளிக்க தெரிய வேண்டும். தோல்விக்கு பின் மைதானத்தில் அழுவதாலோ அல்லது ஃபிரஸ் மீட் டில் அழுவதாலோ எதுவும் நடக்க போவதில்லை.

நாங்கள் மேற்கு இந்திய தீவுகளில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தோம். அப்போது விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நாங்கள் தரையிறங்கிய உடன் மீடியா எங்களை சூழ்ந்து கொண்டது.

போலிசார் எங்களை ஒரு வேனில் ஏற்றி அங்கிருந்து அப்புறவு படுத்தினர். அந்த வேனில் நான் சேவாக் மற்றும் ஹர்பஜன் சிங் அருகில் அமர்ந்திருந்தேன். வேன் 60-70 கி.மீ வேகத்தில் சென்றது. எங்கள் வேனை துரத்தி கொண்டு மீடியாக்களின் வாகனம் வந்தது. அந்த வாகனத்தின் மேல் பெரிய விளக்குகளும் கேமராக்களும் இருந்தது. விடாமல் துரத்தி கொண்டே வந்தனர். மீடியாக்கள் எங்களை பெரிய குற்றத்தை செய்த தீவிரவாதிகளை போல துரத்தினர். ஒரு கட்டத்தில் எங்களை பிடித்து விட்டனர்.

நாங்கள் 20 நிமிடம் காவல் நிலையத்தில் இருந்தோம். மீடீயாக்கள் கலைந்த பின் நாங்கள் எங்கள் காரில் ஏறி வீடு திரும்பினோம். இந்த சம்பவம் என்னை நல்ல கிரிக்கெட்டராகவும், நல்ல குணமுடைய மனிதனாக மாற்றியது என தெரிவித்தார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.