மூன்று அதிரடி மாற்றங்களுடன் புதிய உலக கோப்பை இங்கிலாந்து அணி அறிவிப்பு

12வது 50 ஓவர் உலக கோப்பை போட்டிகள் வரும் மே 30ந் தேதி தொடங்கி ஜூலை 14 ந் தேதி வரை இங்கிலாந்து நாட்டில் நடைபெற உள்ளது. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட அதிகாரப்பூர்வ இறுதி இங்கிலாந்து அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

இதில் மூன்று முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சமீப காலமாக லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ஜோஃப்ரா ஆர்ச்சர் அணியில் இடம் பெற்றுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு நாள் தொடரில் மோசமாக ஆடிய டேவிட் வில்லி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதே போல் தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸுக்கு மாற்றாக ஜேம்ஸ் வின்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். அணியில் மூன்றாவது ஸ்பின்னராக லியம் டேவ்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலக கோப்பை 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி: இயான் மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், ஜேம்ஸ் வின்ஸ், ஜானி பே்ர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், லியம் டேவ்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், லியம் பிளங்கெட், கிறிஸ் வோக்ஸ், மொயீம் அலி, அடில் ரஷித், டாம் கர்ரன், மார்க் வுட்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.