30 பந்தில் 69 ரன்கள்.. காட்டடி அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்.. பெரிய அணியை வீழ்த்தி சாதனை!

Third party image reference

நஜிபுல்லா ஜார்டானின் அதிரடியால் அனுபவம் குறைந்த ஆப்கானிஸ்தான் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

Third party image reference

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் 6 டி-20 போட்டிகள் ட்ரை-சீரிஸ் தொடரில் விளையாடி வருகிறத.இதில் நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது.

Third party image reference

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் விளாசியது. பின்னர் இதனை சேஸிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தட்டி சென்றது.

Third party image reference

இப்போட்டியில் அபாரமாக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியின் நஜிபுல்லா ஜார்டான், 6 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் என வெறும் 30 பந்துகளில் 69 ரன்கள் விளாசியதுடன் கடைசி நேரத்தில் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இவரது அதிரடி ஆட்டமே ஆப்கானிஸ்தான் அணிக்கு இமாலய ரன்களை குவிக்க காரணமாக அமைந்தது. மேலும் ஆட்டத்தின் முடிவில் நஜிபுல்லா ஜார்டான் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.