கிரிக்கெட்டில் உடைக்க முடியாத ஒரே சாதனை இதுதான்..

பாகிஸ்தான் கிரிக்கெட் உலகின் நட்சத்திர வீரரும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனுமாக இருந்தவர் தான் ஷாகித் அப்ரிடி. இவரை எல்லோரும் செல்லமாக “பூம் பூம் அப்ரிடி” என்றுதான் அழைப்பார்கள்.

அதற்கு காரணம் அப்ரிடி சிக்ஸர்களை விளாசுவதில் மிகவும் கை தேர்ந்தவர். அசாதாரமாக சிக்ஸர்களை விளாசும் இவர், உலகில் எந்த வீரரும் இன்றுவரை உடைக்க முடியாத சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார்.

Third party image reference

அதாவது 2013-ல் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி மிகவும் தடுமாறி வந்ததது. அந்நேரம் ஆட்டத்தில் களமிறங்கிய அப்ரிடி சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை விளாசி தள்ளினார் அதில் அவர் அடித்த ஒரு சிக்ஸர் அதிக பட்சமாக 158 மீட்டர் தூரம் சென்றது. அதாவது பந்து மைதானத்தை விட்டே வெகுதூரம் சென்று விழுந்தது.

Third party image reference

அப்போட்டியில் அப்ரிடி 7 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் என 48 பந்துகளில் 88 ரன்கள் விளாசுவார். எனினும் சக வீரர்கள் ஜொலிக்க தவறியதால், அப்போட்டியில் பாகிஸ்தான் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்கும். எனினும் அப்ரிடியின் அந்த மிரட்டலான சிக்ஸர் இன்றுவரை உலகசாதனை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.