மீண்டும் ஒரு இரட்டை சதம்.. வெறித்தன ஆட்டம் ஆடிய ரோஹித் ஷர்மா

ஒருநாள் போட்டியை தொடர்ந்து ரோஹித் ஷர்மா தனது முதல் இரட்டை சதத்தை டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் விளாசியுள்ளார்.

This image has an empty alt attribute; its file name is 0ac04fd9d500ded0395ca8835ee913c4-480.jpg

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் விராட் கோலி டிக்ளரை அறிவித்தார்.

முதல் இன்னிங்சில் இந்திய அணியின் இந்த இமாலய ரன் குவிப்பிற்கு முக்கிய காரணம் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா தான். சக வீரர்கள் விக்கெட்டை இழந்து வெளியேற, பொறுப்பை ஏற்றுக்கொண்ட ரோஹித் ஷர்மா நிதானமாக விளையாடி 255 பந்துகளில் 212 ரன்கள் என அபாரமான இரட்டை சதம் விளாசினார். அதில் 28 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும் அடங்கும்.

This image has an empty alt attribute; its file name is 7e4207088421ba5dd2420f7e1c814aca-480.jpg

ரோஹித் ஷர்மாவின் இந்த அபாரமான ஆட்டம் அனைத்து கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும் இந்த இரட்டை சதம் டெஸ்ட் அரங்கில் ரோஹித் ஷர்மா விளாசும் முதல் இரட்டை சதம் ஆகும். பொதுவாக அதிரடி மேல் அதிரடி காட்டி இதுவரை ஒருநாள் போட்டிகளில் 3 இரட்டை சதம் விளாசியிருக்கும் ரோஹித் ஷர்மா, இன்று தன்னால் பொறுமையாகவும் விளையாடி இரட்டை சதம் அடிக்க முடியும் என நிரூபித்துவிட்டார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.