வந்த வேகத்தில் 5 சிக்ஸர்கள்.. மிரண்டுபோன விராட் கோலி

இந்திய மற்றும் சௌத் ஆப்ரிக்கா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் விராட் கோலி டிக்ளரை அறிவித்தார்.

Third party image reference

அதன்படி இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங்கின் போது சில ருசிகர சம்பவங்கள் நடந்தன. அதாவது அனுபவ வீரர் ரோஹித் ஷர்மா இன்றைய ஆட்டத்தில் 212 ரன்கள் எடுத்து அபாரமான இரட்டை சதம் கடந்தார்.

Third party image reference

ஒரு கட்டத்தில் விக்கெட்டுகள் மளமளவென விழுக மிடில் ஆர்டரில் களமிறங்கிய வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ், யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு அபாரமான ஆட்டம் காட்டினார். வெறும் 10 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 சிக்ஸர்களை விளாசி மொத்தம் 30 ரன்கள் சேர்த்தார்.

Third party image reference

உமேஷ் யாதவ்வின் இந்த ஆட்டம் சௌத் ஆப்ரிக்கா வீரர்களை நடுங்க செய்தது. ஒரு கட்டத்தில் உமேஷ் யாதவ்வின் ஆட்டத்தை கண்ட விராட் கோலி தன்னை அறியாது எழுந்து நின்று அவரை உற்சாகப்படுத்தினார். இந்த சம்பவம் 3-வது டெஸ்டில் ஒரு சிறப்பான சம்பவமாக அமைந்தது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.