மீண்டும் இந்திய அணியில் தோனி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தேர்வுக்குழு தலைவர்

முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோணி மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.

Image result for ind vs ban 2019 series

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான தொடரை முடித்துக்கொண்ட இந்திய அணி, அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான டி-20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது.

Third party image reference

இந்நிலையில் இதில் டி-20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. அதில் முன்னாள் கேப்டன் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. சமீபத்தில் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற கங்குலி, தோனிக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு தருவதாக கூறியிருந்தார். அப்படியிருந்தும் தோனி அணியில் இடம்பெறாமல் போனது அனைவருக்கும் அதிர்ச்சியை தந்தது.

Third party image reference

இந்நிலையில் இதுகுறித்து பேசிய இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், “அடுத்த வருடம் துவங்கும் டி-20 உலகக்கோப்பை தொடருக்காக இளம் வீரர் ரிஷாத் பாண்ட்டை தயார் செய்து வருகிறோம். எனவே அனைத்து விதமான போட்டிகளிலும் அவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும். தோனியை நாங்கள் இரண்டாவது ஆப்ஷனாகவே வைத்திருக்கிறோம். ஒருவேளை நேரம் வந்தால் தோனி மீண்டும் அணியில் சேர்க்கப்படுவார்.” என்றார் அவர்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.