ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கவின் -லாஸ்லியா…

தி வால் சோ ல முகினும், தர்சனும் கலந்துருக்காங்க இதுக்கான ப்ரோமோ நேத்து வெளியாச்சு. அதுல நடந்த விஷயங்களை பாத்திருப்போம். இந்த நிலைல இப்போ ரெண்டாவது ப்ரோமோ வெளிவந்துருக்கு. இதுல நடந்த விஷயங்களை பத்தி இப்போ பாப்போம்.

நம்ம தர்சன் தொடர்ந்து வின் பன்னீட்டே போராரு. அடுத்ததா முகென் சாரி மச்சானு தர்சன் கிட்ட சொல்றாரு. ம.க.ப தர்சன் கிட்ட 3 பால முகின் கிட்ட குடுக்கிறீயேடா அப்டீன்னு சொல்றாரு. நண்பனை நம்பி குடுக்கலாமுன்னு தர்சன் சொல்றாரு.

அடுத்து வால்-ல கிரீன் லைட் எரியுது. முகினும் தர்சனும் பிரியங்கா மற்றும் ம.க.பா-வ பாத்து டான்ஸ் ஆட ஆரம்பிக்கிறாங்க. இந்த ப்ரோமோ வெளியான உடனே பலரும் சொல்லக்கூடியது என்னனா கவினும்-லாஸ்லியாவும் கலந்துக்கிட்ட இன்னும் நல்லா இருக்கும்னுதான்.

சோ ரசிகர்கள் எதிர்பாத்தபடி கவினும் லாஸ்லியாவும் வந்தா அன்னிக்கு டீ.ஆர்.பி வேற லெவல்ல இருக்கும். நீங்க கவினும்-லாஸ்லியாவும் வரணும்னு நினைக்கிறீங்களா.

அதிர்ச்சி.. இனி டிவி ரிமோட் உங்களுக்கு கிடையாது

பிக் பாஸ்-3 வனிதா இப்போ சன் டிவி-ல டெலிகாஸ்ட் ஆகுற சந்திரலேகா சீரியல்ல நடிக்கப்போறாங்க. சும்மாவே நம்ம அம்மாவும், பாட்டியும் ரிமோட்ட தரமாட்டாங்க, இதுல சண்டைக்கு பேர் போன வனிதா வராங்கன்னு தெரிஞ்சா அவ்ளோதான். வனிதாவை வைரதுக்காகவே சீரியல் பாக்க ஆரம்பிச்சுருவாங்க.

“இன்னிக்கு இந்த வனிதா சந்திராவை என்னபாடு படுத்த போறாளோ..நாசமாப்போக” இதுமாதிரி அடிக்கடி உங்க வீட்டுல இனி கேக்கும். நைட் போட்டதையே காலையில போட்டாலும் உங்களுக்கு ரிமோட் கிடைக்காது.

பிக் பாஸ்-3 சூடு பிடிக்க இவங்கதான் முக்கிய காரணம். இவங்க போட்ட சண்டையால பற்பல உண்மைகள் வெளியேறிருக்கு. விஜய் டிவி-க்கு இவங்களால டி.ஆர்.பி ஏர்ன-மாதிரி இனி சன் டிவிக்கும் டி. ஆர்.பி ஏறப்போகுது. லேட்டஸ்டா இவங்க சந்திரலேகா டீமோட சேந்து போட்டோஸ் வெளியிட்டருக்காங்க. இவங்க சீரியலுக்கு வர்றதாபத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க.

அதிர்ச்சி.. ஹன்சிகாவின் தற்போதைய நிலமை என்ன தெரியுமா?

தனுஷ் நடிப்பில் உருவான 2011-ல் திரையில் வந்த மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி.

Image result for hansika motwani latest pics

நடிகை மும்தாஜ் எப்படி “கட்டிப்புடி” பாடலின் மூலம் பிரபலமானாரோ, அப்படியே தான் ஹன்சிகாவும் “சில்லாக்ஸ் சில்லாக்ஸ்” பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் காலூன்றிவிட்டார். இதையடுத்து ஹன்சிகாவிற்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது.

Third party image reference

அப்படியே ஹன்சிகாவும் எங்கேயும், காதல் ஒரு கல் ஒரு கண்ணாடி, புலி, பிரியாணி, ஆம்பள, அரண்மனை, துப்பாக்கி முனை, குலேபகாவாலி என அடுக்கடுக்காக பல படங்களில் நடித்து வந்தார். எனினும் அவருக்கு எந்த படமும் கைகொடுக்காததால் தற்போது ஹன்சிகா சினிமாவை விட்டு ஒதுங்கியே உள்ளார்.

இந்நிலையில் நடிகை ஹன்சிகா குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகை ஹன்சிகா இனி தமிழில் வெளியாகும் வெப் சீரிஸ் களில் நடிக்க உள்ளாராம். இந்த தகவல் அதிகாரபூர்வமா வெளிவந்துள்ளது. அதேபோல் தற்போது தமிழ் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளும் வெப் சீறிஸ்களில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

சற்றுமுன் தர்சனின் அம்மா நிலை ஐயோ பாவம்.. பிக்பாசில் நடந்த பச்சை துரோகம்..

பிக்பாசில் இருந்து தர்சன் வெளியேற்ற பட்டதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அவரது அம்மாவும் தங்கையும் தங்களது சோகத்தை பகிர்ந்துள்ளார்.

இந்த சீசன்ல டைட்டில் வின்னர் பட்டம் வெல்ல முழு தகுதி உடையவர் தர்சன். ஆரம்பத்திலிருந்தே ரொம்ப உண்மையா விளையாண்டவர். பிறரை பற்றி புறம்கூறாதவர். ரொம்ப நேர்மையா விளையாண்டவர்.

வனிதாவின் அராஜகத்தை தட்டிக்கேட்ட முதல் ஆண். அப்படியிருக்கும் போது தர்சன் வெளியேற்றப்பட்டது பற்றி அவரது அம்மா மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் லெஸ்லியா வெளியேற்ற பட்டிருக்கலாம் என்ற குழப்பமும் உள்ளது. எந்த ஒரு போட்டியாளரும் வெளியேறும்போது ரசிகர்கள் அழுத்ததில்லை, தர்சன் வெளியேறும்போது ரசிகர்கள் கண்ணீருடன் சென்றனர். ஆனால் அதனை வெளிக்காட்டாமல் தர்சன் சிரித்தமுகத்துடன் விடைபெற்றார்.

அபிராமிடம் இதுபற்றி கேட்டபோது “தர்சன் மிகவும் உண்மையானவன் – அவனது அம்மா மிகவும் ஜாலியான டைப். அவன் வெளியேற்ற பட்டது தர்சனின் அம்மாவை அளவுக்கு அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அவனது தங்கையும் மிகுந்த வேதனை அடைந்துள்ளார்.”என்று கூறியுள்ளார்.

தர்சன் வெளியேற இவர்தான் முக்கிய காரணம்.. யார் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் தர்சன் வெளியேற்ற பட்டார்.இதற்கு பல காரணம் சொல்ல பட்டாலும்,உண்மையான காரணம் பற்றி சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகி உள்ளது.

Third party image reference

அதை பற்றி பார்க்கலாம்,கடைசியாக இருந்த போட்டியாளர்கள் யார் யார் என்றால் ,தர்சன் இலங்கையிலிருந்து வந்தவர்.பல விளம்பரங்களின் மூலம் பிரபலம் ஆனவர்.அடுத்ததாக லெஸ்லியா இவரும் இலங்கையை சேர்ந்தவர்,அடுத்ததாக முகில் – மலேசியா நாட்டை சேர்ந்தவர்,

Third party image reference

கடைசி போட்டியாளர் நம்ம சாண்டி-தமிழ்நாட்டை சேர்ந்தவர்.சரி இதில் தர்சனை வெளியேற்ற காரம்தான் என்ன என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கும் நிலையில் வனிதா இதை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

எத்தனையோ முறை வனிதாவுக்கு தர்சனுக்கும் மோதல்கள்,சண்டைகள் வந்துள்ளது.அனாலும் அவர் வீட்டுக்குள் இல்லததால் அவரின் உள்குத்து காரணம் அல்ல.

Third party image reference

மொத்தம் மூன்று நாட்டை சார்ந்த போட்டியாளர்களை பைனலுக்கு கொண்டு வரப்போகிறார்கள்,இதில் முகில்-மலைசியா, சாண்டி-தமிழ்நாட்டுக்கு. இலங்கைகு லெஸ்லியாவா -தர்சனா ,என்ற நிலையில்,தர்சன் வெளியேற்ற பட்டார்.எனவே முழுக்க முழுக்க பார்வையாளர்களை அதிகமாக்க வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் செய்த சதியா? இல்லை யார் காரணம் என்பது முடிவில் தெரியும்.

எல்லாம் தெரியும்படி உடை அணிந்து வந்த பிரியங்கா சோப்ரா

கேன்ஸ் பட விழாவில் இன்று பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த கருப்பு நிற கவர்ச்சி உடை இணைய தள வாசிகளிடம் கடும் விமர்சனத்தை வாங்கி கொட்டியுள்ளது.

சினிமா துறையில் ஆஸ்கர், குளோப் விருதுகளுக்கு அடுத்து உயர்வாக கருதப்படும் விருது கேன்ஸ் திரைப்பட விருதுகள். 2019ம் ஆண்டுக்கான 75-வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் தொடங்கி உள்ளது. வருகிற 25-ந்தேதி வரை இந்த விழா நடக்கிறது. போட்டியில் சர்வதேச அளவில் 21 படங்கள் பங்கேற்கின்றன.

இவ்விழாவில் கலந்து கொண்ட ஹிந்தி நடிகைகள் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, கங்கனா ரணாவத் ஆகியோருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.

இதில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மிகவும் கவர்ச்சிகரமான உள்ளே உள்ள அனைத்தும் தெரியும் படி டிசைன் செய்யப்பட்ட கருப்பு நிற உடையை அணிந்து வந்து போஸ் கொடுத்தார். இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிரியங்காவின் உடையை பார்த்த நெட்டீசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

லக்ஷ்மிபாம் படத்தில் இருந்து விலகினார் ராகவா லாரன்ஸ்

காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக்கான லக்ஷ்மிபாம் படத்தில் இருந்து விலகுவதாக இயக்குனர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு ராகவா லாரன்ஸ், சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தமிழில் செம ஹிட் அடித்த படம் காஞ்சனா. தமிழில் இப்படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் லக்ஷ்மிபாம் என்ற பெயரில் இப்படத்தை ரீமேக் செய்கிறார் ராகவா லாரன்ஸ்.

இப்படத்தை லாரன்ஸ் இயக்க முக்கிய கதாபாத்திரங்களில் அக்ஷய் குமார், கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கின்றனர். லக்ஷமிபாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நேற்று அக்ஷய் குமார் தனது டுவிட்டர் பக்கததில் வெளியிட்டார். இந்நிலையில் இப்படத்தில் இருந்து விலகுவதாக லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

இதற்கு காரணமாய் அவர் கூறியது., மதியாதார் தலைவாசல் மிதியாதே என தமிழில் ஒரு பழமொழி உண்டு. இந்த உலகத்தில் ஒரு மனிதனுக்கு பணம், புகழை விட சுயமரியாதை மிகவும் முக்கியம். அதற்கு பங்கம் வந்துவிட்டது. அதனால் தான் லக்ஷ்மிபாம் படத்தில் இருந்து நான் விலகுகிறேன்.

நேற்று லக்ஷ்மிபாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை எனக்கு தெரியாமல் வெளியிட்டுள்ளனர். மிகவும் சுமாராக இருந்தது. இப்படத்தின் இயக்குனர் நான். எனக்கு மூன்றாவது நபர் கூறி தான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது தெரிய வேண்டியுள்ளது. இது எனக்கு மிகவும் வலியையும் வருத்தத்தையும் தந்துள்ளது.

என்னால் இப்படத்தை பாதியில் நிறுத்த முடியும். நான் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்து போடவில்லை. ஆனால் நான் அப்படி செய்யமாட்டேன். அது தொழில் தர்மமும் இல்லை. நான் அக்ஷய் குமார் சார் மீது அதிக மரியாதை வைத்துள்ளேன். நான் லக்ஷ்மிபாம் படத்தின் மொத்த ஸ்கிரிப்டையும் அவரை நேரில் சந்தித்து கொடுத்துவிட்டு படத்தில் இருந்து முழுமையாக விலகி விடுவேன் என தெரிவித்துள்ளார்.

ஆர்யா நடிப்பில் மகாமுனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

கடந்த 2011ம் ஆண்டு அருள்நிதி – இனியா நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் த்ரில்லர்  படம் மெளனகுரு. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சாந்தகுமார்.

எட்டு ஆண்டுகளுக்கு பின் தனது இரண்டாவது படத்தை இயக்கி உள்ளார் சாந்தகுமார். மகாமுனி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ஆர்யா ஹீரோவாகவும், இந்துஜா மற்றும் மஹிமா நம்பியார் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் காளி வெங்கட், ஜெயபிரகாஷ், அருள்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு, எஸ்.தமன் இசையமைத்துள்ளார். சாபு ஜோசப் எடிட்டராகப் பணிபுரிகிறார்.

இப்படத்தின் படபிடிப்பு ஏப்ரல் மாதமே முடிவடைந்த நிலையில், இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடபட்டுள்ளது. தற்போது இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவே அதிரும் அறிவிப்பு பாகுபலியோடு இணையும் சமுத்திரகனி

கடந்த 2017ம் ஆண்டு ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 2 படம் இந்தியா முழுவதும் பட்டி தொட்டி எங்கும் செம ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து ராஜமெளலியின் அடுத்த படம் யாருடன் எப்போது வெளிவரும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

கடந்த 2 வருடமாக எந்த படத்தையும் இயக்காமல் ஓய்வில் இருந்த ராஜமெளலி நேற்று தனது அடுத்த படத்தின் அதிகாரயூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தான் இயக்கும் அடுத்த படத்திற்கு “ஆர் ஆர் ஆர்” என தற்காலிக பெயரை சூட்டி உள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். மேலும் அலியா பட் மற்றும் ஆங்கில நடிகை டைசி எட்கர் ஜோன்ஸ் நடிக்க உள்ளனர்.

இப்படத்தில் பாகுபலி படத்தில் கட்டப்பாவை போல் கதைக்கு முதுகெழும்பாய் இருக்கும் கதாபாத்திரத்தில் சமுத்திரகனி நடிக்க உள்ளார்.

மேலும் இப்படம் 250 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளது என்றும், இந்த படம் 2020 ஜுலை 30ந் தேதி இந்தியா முழுக்க தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் பல மொழிகளில் வெளியாக உள்ளது.

மதம் மாறிய டி.ஆர் மகன் அதிர்ச்சியில் திரை உலகம்

தான் இயக்கும் படங்களில் அடுக்கு மொழி வசனங்களாலும், தங்கை சென்டிமென்டாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர். இவரது இரண்டாவது மகன் குறளரசன்.

இவர் தனது அண்ணன் சிம்புவின் வாலு படத்தின் மூலம் இசை அமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். ஆனால் இவரால் தனது அப்பா, அண்ணன் போல் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்.

இந்நிலையில் குறளரசன் தன் அப்பா டி.ராஜேந்தர் மற்றும் அம்மா உஷா இஸ்லாம் மதகுருமார்கள் முன்னிலையில் இஸ்லாம் மதத்தை தழுவினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இது குறித்து பேசிய டி.ராஜேந்தர், நான் எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையை உடையவன். அதனால் குறளரசன் எண்ணத்திற்கு மதிப்பு அளித்து இதற்கு சம்மதித்தேன் என்றார்.

மார்ச்சில் தொடங்கும் ரஜினியின் அடுத்த படம்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்காக ரஜினி 90 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார்.

பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கயுள்ளார் என்பது தெரிந்ததே. இதன் படப்பிடிப்பு எப்போது என்பதில் பல்வேறு செய்திகள் வெளியாகின. தற்போது மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளது படக்குழு. இதற்காக 90 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் ரஜினி.

முதலாவதாக சென்னையில் படப்பிடிப்பை தொடங்கி, அதனைத் தொடர்ந்து ஐதராபாத், மும்பை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெறவுள்ளது. இதற்காக ரஜினியுடன் நடிக்க உள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.


விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக உள்ளவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். சமீபகாலமாக சரியாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவருக்கு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பேராண்மை, புறம்போக்கு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் இயக்கும் இந்த படத்திற்கு ‘லாபம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்க உள்ளார்.

சிம்புவை நேரில் சென்று வாழ்த்திய தனுஷ்..

சென்னையில் தனது பிறந்தநாளை கொண்டாடிய சிம்புவிற்கு தனுஷ், ஜெயம் ரவி, யாஷிகா ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த வாரம் சிம்பு நடித்த “வந்தா ராஜாவாதான் வருவேன்” படம் வெளியானதையடுத்து இன்று தனது பிறந்தநாளை கிண்டியில் உள்ள ஒரு விடுதியில் வைத்து கொண்டாடிய சிம்பு தனது நெருங்கிய நண்பர்களையும் சினிமா நட்சத்திரங்களையும் அழைத்திருந்தார். இது பிறந்தநாளோடு கூடிய படத்தின் வெற்றியையும் கொண்டாடும் வகையில் அமைந்தது.

பிறந்தநாள் விழாவில் நடிகர்கள் தனுஷ், ஜெயம் ரவி, மஹத், ஹரீஷ் கல்யாண், நடிகைகள் யாஷிகா, ஐஸ்வர்யா தத்தா ஆகியோரும் கலந்துகொண்டனர். எஸ்.டி.ஆர் என எழுதப்பட்டிருந்த கேக்கை சிம்பு வெட்டியவுடன், தனுஷ் உள்ளிட்டவர்களுக்கு ஊட்டினார். இந்த வீடியோவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று நடக்கவிருக்கும் இளையராஜா 75 இரண்டாம் நாள் இசை நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 


தமிழையடுத்து மலையாளத்தில் நுழையும் கிருஷ்ணா..

தமிழில் வளர்ந்துவரும் நடிகர் கிருஷ்ணா அடுத்ததாக மலையாளத்தில் அறிமுகமாகயுள்ளார்.

தமிழில் கழுகு, வன்மம், வானவராயன் வல்லவராயன் ஆகிய படங்களில் நடித்த நடிகர் கிருஷ்ணா கடைசியாக தனுஷ் உடன் சேர்ந்து “மாரி 2” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அவரது நடிப்பில் அடுத்ததாக `கழுகு 2′ படம் ரிலீசாக இருக்கிறது. இதில் கிருஷ்ணா ஜோடியாக பிந்து மாதவியும், முக்கிய கதாபாத்திரத்தில் காளி வெங்கட்டும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், கிருஷ்ணா அடுத்ததாக மலையாள சினிமாவில் அறிமுகமாகவிருக்கிறார். சுனில் கரியட்டுகரா இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியதாக கிருஷ்ணா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். `பிக்காசோ’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஷேக் அஃப்சல் தயாரிக்கிறார். படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது.