பதவியை பெரிதாக நினைத்திருந்தால் திமுகவுடன் கூட்டணி வைத்திருப்போம்- தங்க தமிழ்செல்வன்

மதுரையில் அமமுக  கொள்கைபரப்புச்செயலாளர் தங்க தமிழ்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


பதவியை பெரிதாக நினைத்திருந்தால் திமுகவுடன் கூட்டணி வைத்திருப்போம். 
தமிழகத்தில் ஊழல் ஆட்சியை கலைக்க சட்டப்பேரவையில் வாக்களிப்போம். அதிமுக ஆட்சிக்கு எதிராக திமுகவுடன் சேர்ந்து வாக்களித்தவர் துணை முதல்வர் ஓபிஎஸ். டிடிவி தினகரன் தலைமையில் தான் தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும்  என கூறினார்.

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து மே 23-க்கு மேல் அறிவிப்பார்

திருச்சி கே.கே. நகரில் ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


ரஜினிகாந்த் அரசியல்  பிரவேசம் குறித்து மே 23-க்கு மேல் அறிவிப்பார். ரஜினிகாந்த் அரசியலுக்கு  வருவதில் தாமதமாவது நல்லது தான். விரைவில் அவர் வருவார். ரஜினியின் பெற்றோருக்காக ரசிகர்கள்  திருச்சி கே கே நகரில்  கட்டிய நினைவு மண்டபத்தை காண அவர் வருவார் என கூறினார். 

அதை நிரூபித்தால் உடனே பதவில் இருந்து விலகுகிறேன் எடப்பாடிக்கு சவால் விட்ட துரைமுருகன்

கடந்த மார்ச் மாத இறுதியில் தி.மு.க பொருளாளர் துரை முருகன் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த தேர்தலுக்கு முன் நடந்த இந்த சோதனை தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

இதனையடுத்து சூலூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தி.மு.க பொருளாளர் துரை முருகன் வீட்டில் நடத்தப்பட்ட வருமான லரிசோதனையில் 12 கிலோ தங்கம் மற்றும் 13 கோடி ரூபாய் கைப்பற்ற பட்டதாகவும், இந்த பணம் அவருக்கு எப்படி வந்தது என மக்கள் சிந்திக்க வேண்டும் என தேர்தல் பரப்புரையில் கூறியிருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தவறான தகவல்களை கூறி வருவதாக துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் வருமான வரி சோதனையின் போது எனக்கு சொந்தமான வீட்டில் இருந்து 10 லட்சம் ரூபாய் மட்டுமே கைப்பற்றப்பட்டது. அதை வருமான வரி அதிகாரிகள் தந்த ரசீதை பார்த்தால் தெரியும். எனது வீட்டில் இருந்து 12 கிலோ தங்கம் மற்றும் 13 கோடி ரூபாய் ஏதும் கைப்பற்றவில்லை.

அப்படி கைப்பற்றியதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுவது ஜமுக்காலத்தில் வடிகட்டிய பொய். ஒரு வேளை முதல்வர் அதை நிரூபித்தால் தி.மு.க பொருளாளர் பதவி மற்றும் எதிர்கட்சி தலைவர் என்ற அரசு பதவியில் இருந்து நான் விலக தயார். அப்படி நிருபிக்க முடியவில்லை் என்றால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியில் இருந்து விலக தயாரா என சவால் லிட்டுருக்கிறார் துரைமுருகன்.

மம்தா பானர்ஜிக்கு பதிலடி தந்த மோடி அதை எனக்கு தந்தால் மகாபிரசாதம்

ஒவ்வொரு ஆண்டும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எனக்கு ரசகுல்லாவும், குர்தாக்களையும் தந்து வருகிறார் என்று சில நாட்களுக்கு முன்பு நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே குழப்பமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. இது நாள் வரை யாருக்கும் தெரியாத இந்த விஷயத்தை தேர்தல் லாபத்திற்காக மோடி பொது வெளியில் தெரிவித்ததால் மம்தா பானர்ஜி கடும் கோபம் கொண்டார்.

இதனால் இனி மோடிக்கு அனுப்பும் ரசகுல்லாவில் கல்லையும் மண்ணையும் கலந்து அனுப்புகிறேன். அதை சாப்பிட்டு அவரது பற்கள் உடையட்டும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் கொல்கத்தா அருகே சேரம்பூரில் நடந்த பாஜக தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி கூறியதாவது., கல்லும் மண்ணும் கலந்த ரசகுல்லாவை மம்தா பானர்ஜி எனக்கு தர விருப்பப் படுகிறார். கொல்கத்தா மண்ணில் பல சுதந்திர போராட்ட தியாகிகளும், பல சாதுக்களும் நடந்துள்ளனர். அந்த கல்லும் மண்ணும் கலந்த ரசகுல்லா எனக்கு கிடைத்தால் அது மகா பிராசதம்.

வங்காள மண் புனிதமானது, புத்துணர்ச்சி தருவது, உத்வேகம் தருவது. அந்த மண்ணில் இருந்து ரசகுல்லா கிடைக்க காத்திருக்கிறேன்.

கல்லnலும் மண்ணாலும் ரசகுல்லா செய்து என்னிடம் தந்தால், கொல்கத்தாவில் இருக்கும் கற்கள் அனைத்தும் என்னிடம் வந்துவிடும். திரிணாமுல் காங்கிரஸினர் செய்யும் அராஜகங்களால் மக்கள் காயம் அடைய மாட்டார்கள் என மம்தாவுக்கு மோடி பதிலடி தந்துள்ளார்.

மினிமம் சேலரி திட்டத்தை கண்டு பாஜக பயப்படுகிறது- திருநாவுக்கரசர்

ராகுல் காந்தி அறிவித்துள்ள மினிமம் சேலரி திட்டத்தை கண்டு பாஜக அரசு பயப்படுகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் குறைந்த பட்ச வருமானம் வழங்கப்படும் இந்த திட்டம் வேலை பார்க்காதவர்களுக்கும் பொருந்தும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறுகையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை அரசு திரும்பபெற வேண்டும். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அங்கு விவசாயிகள் கடன் ரத்துசெய்யப்பட்டது. சாதாரண மக்களின் குறைந்தபட்ச வருவாய் வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும். நான்கரை ஆண்டுகளாக எதுவுமே செய்யாத பாரதிய ஜனதா கட்சி ராகுல்காந்தி அறிவித்த திட்டத்தை கண்டு பயப்படுகின்றது. இதை நிறைவேற்ற முடியாது என்ற அவநம்பிக்கையை மக்களிடத்தில் பரப்ப நினைக்கின்றனர். 

தமிழகத்தில் நிறைய மாவட்டங்கள் வறட்சியில் உள்ளது. மத்திய அரசு, மாநில அரசு உடனடியாக முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது உள்ள மத்திய அரசு முழு ஆண்டு பட்ஜெட் போட முடியாது. பொய்யான, தவறான வாக்குறுதிகளை பட்ஜெட்டில் அறிவிக்க கூடாது. 

இவ்வாறு அவர் கூறினார்.


இதற்காக மூதாட்டியின் காலை தொட்டு வணங்கிய சந்திரபாபு நாயுடு

கடந்த 2014ஆம் ஆண்டு ஜுன் 2ந் தேதி ஆந்திர பிரதேஷ் மாநிலம் தெலுங்கான மற்றும் ஆந்திர பிரதேஷ் என்று இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. இதனையடுத்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு அமராவதியில் ஆந்திராவின் புதிய தலைநகரை உருவாக்கி வருகிறது. 

இந்நிலையில், அனந்தபூர் மாவட்டம் கதிரி அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார் சந்திரபாபு நாயுடு. அப்போது அங்கு வந்த 80 வயது முத்தியாலம்மா என்ற மூதாட்டி ஆந்திர தலைநகர் அமராவதியை உருவாக்க தான் சேமித்து வைத்திருந்த ஓய்வுதிய தொகை 50000க்கான காசோலையை கொடுத்தார்.

மூதாட்டியின் இந்த செயலால் மனம் நெகிழ்ந்த சந்திரபாபு நாயுடு மூதாட்டியின் காலை தொட்டு வணங்கினார்.

இதற்கு பின் பேசிய சந்திரபாபு நாயுடு., முத்தியாலம்மாவின் பண உதவி என்னை நெகிழ செய்தது. இது ஆந்திர தலைநகரை விரைவாக கட்டி முடிக்க புது உத்வேகத்தை அளித்துள்ளது. இவரது செயல் மற்றவர்களுக்கு முன்னோடியாக உள்ளது என்று இவரது சமூகப் பொறுப்புணர்வை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.

இறந்த பின்னும் ஜெயலலிதாவின் வங்கி கணக்கு இயங்கி வருகிறது

ஜெயலலிதா இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவரது வங்கி கணக்கு தற்போது வரை செயல்பட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடலநலக்குறைவு காரணத்தால், சிகிச்சை பெறுவதற்காக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு, டிசம்பர் 5ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து அவர் வாழ்ந்த போயாஸ் தோட்ட வேதா இல்லம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிலளித்த வருமான வரித்துறை, ஜெயலலிதாவின் போயாஸ் தோட்ட வீடு மேலும் அவருக்கு சொந்தமான நான்கு சொத்துக்கள் கடந்த 2007-ஆம் ஆண்டே முடக்கப்பட்டுவிட்டது எனவும், நிலுவையில் உள்ள ரூ.16 கோடியை செலுத்தினால் முடக்கப்பட்ட சொத்துக்களை மீட்கலாம் என்றும், போயாஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றலாம் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் வாங்கி கணக்கு இன்னும் செயல்பட்டு வருவதாகவும், அவருக்கு சொந்தமான வணிகவளாகங்கள், வீட்டு வாடகை மற்றும் கோடநாடு எஸ்டேட் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் பணம் செலுத்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும், ஜெயலலிதா 2011 மற்றும் 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது, இந்த வருமான வரி நிலைவைத் தொகை குறித்த எந்த தகவல்களையும் தனது வேட்புமனுக்களில் தெரிவில்லை என்பது நினைவுக்கூறத்தக்கது.


ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க மக்களிடம் வரியை உயர்த்த வேண்டியிருக்கும்- ஜெயக்குமார்

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தில் மாற்றம் கொண்டுவர, மக்களிடம் வரியை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள மீன்வளத்துறை அலுவலக வளாகத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள மீன்வளத்துறை அலுவலகத்தை அமைச்சர் ஜெயக்குமார் இன்று திறந்து வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:-

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அரசு தனது நிலைப்பாட்டை அவர்களிடம் தெரிவித்தும் தொடர்ந்து யாருடைய தூண்டுதலின் பேரிலோ போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்.

அரசிற்கு வரக்கூடிய வருமானத்தில் ௭௧ சதவீதத்தை அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஊதியமாகவும் ஓய்வூதியமாகவும் தமிழக அரசு வழங்கி வருகிறது. எனவே அதனை புரிந்து கொண்டு தங்களது வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்த வேண்டுமானாலும் ஓய்வூதியத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அதற்காக மக்களிடம் தான் வரியை உயர்த்த வேண்டிய நிலை உள்ளது. எனவே மக்களிடம் வரியை உயர்த்தி அரசு ஊழியர்களுக்கு தர முடியுமா?

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.


அதிமுகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த ஜெயலலிதா தோழி!

ஜெயலலிதாவின் தோழியும், அதிமுகவின் உறுப்பினருமான பதர்சயீத் திடீரென அதிமுகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளார்.

சென்னை திருவல்லிகேணியை சேர்ந்த இவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பள்ளித்தோழி. இவரு ஒருமுறை திருவல்லிக்கேணியின் அதிமுக எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் பணியாற்றியவர்.

இந்நிலையில் அதிமுகவில் இருந்து விலகிய பதர்சயீத் இன்று சத்தியமூர்த்தி பவன் வந்தார். அங்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலையில் பதர்சயீத் காங்கிரசில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியில் இணைக்கப்பட்டதும் அவருக்கு மாநில செய்தி தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பதர்சயீத் கூறியதாவது:-

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் கட்டுப்பாடு இல்லை. கட்சிக்காக உழைப்பவர்களுக்கு உரிய மரியாதை இல்லை. இப்போது அங்கு பல தலைவர்கள் உருவாகி இருக்கிறார்கள். எனவே அந்த கட்சியில் இருந்து விலகினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


உலக முதலீட்டாளர் மாநாட்டில் தமிழக அரசு நாடகம் ஆடுகிறது- ஸ்டாலின்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக அரசு நாடகம் ஆடுகிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் புதன்கிழமை தொடங்கியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

இதில் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக வானூர்தி மற்றும் பாதுகாப்பு துறை தொழில் கொள்கை 2019 என்ற விளக்க கையேட்டை வெளியிட்டு பேசினார். முதலீட்டாளர்கள், தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், கூட்டமைப்புகள் மற்றும் தூதரகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் என சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தால் 3 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் தனது கருத்தை வெளியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்., “#TNGIM-2015 இல் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களையே நிறைவேற்றாத அரசு, இப்போது #TNGIM2019 என்ற நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறது”

எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

விஜயகாந்த் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு; நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாரான தேமுதிக

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தே.மு.தி.க தரப்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்கிற அறிவிப்பை விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் தங்களுக்கான கூட்டணி கட்சியை தேர்வு செய்வதில் மும்மரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக மக்கள் பலராலும் மறக்கப்பட்டிருந்த தே.மு.தி.க கட்சி கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை குழுவை அமைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது: வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அக்கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது.

குழுவில் தே.மு.தி.க. அவைத் தலைவர் வி. இளங்கோவன் கொள்கை பரப்புச்செயலாளர் அழகாபுரம் ஆர். மோகன்ராஜ் துணைச் செயலாளர்களான ப.பார்த்தசாரதி ஏ.எஸ்.அக்பர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்று விஜய காந்த் அறிவித்துள்ளார். ஆக மொத்தத்தில் தேமுதிகவும் கூட்டணியுடன் களமிறங்க முடிவு செய்துள்ளதை இந்த அறிவிப்பு தெளிவுப்படுத்தி உள்ளது.


முன்னாள் முதல்வர் வீட்டில் திடீர் சிபிஐ சோதனை..

ஹரியான மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பூபீந்தர் சிங் ஹூடாவின் சொந்த வீட்டில் மத்திய புலனாய்வு துறையினர் திடீர் ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் ஹூடா முதலமைச்சராக இருந்தபோது காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான பத்திரிகை அலுவலகம் மற்றும் சோனியாவின் மருமகன் ராபர்ட் வத்ராவின் நிறுவனத்துக்கு அரசு நிலம் விதிகளுக்கு புறம்பாக ஒதுக்கப்பட்டது.இந்த வழக்கத மத்திய புலனாய்வு துறை விசாரித்து வருகிறது.

இந்த புகாரை அடிப்படையாக கொண்டு ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் பூபீந்தர் சிங் ஹூடாவின் சொந்த வீடு மற்றும் டெல்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய புலனாய்வு துறை சோதனை செய்து வருகிறது.

கானல 8.30க்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்களுக்கு பாடம் நடத்திய அதிமுக எம்.எல்.ஏ

ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ அர்ஜுன் மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

புதிதாக கொண்டுவரப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நேற்று முன்தினம் தொடங்கி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

இன்றோடு 3-வது நாளாக நீடிக்கும் இந்த வேலை நிறுத்தத்தால் பள்ளி மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று கோவா கெம்பட்டி காலனியில் அங்கன்வாடி மையத்துக்கு கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அர்ஜூனன் சென்றிருந்தார். அப்போது அங்கு யாரும் ஆசிரியர்கள் இல்லாததால் குழந்தைகளுக்கு இவரே பாடம் நடத்தினார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது.


ஜெயலலிதாவின் சொத்துக்கள் முடக்கம்; வருமான வரித்துறை அதிரடி!

ஜெயலலிதாவின் சொத்துக்கள் வருமான வரித்துறையினரால கடந்த 2007-ஆம் ஆண்டிலேயே முடக்கப்பட்டுவிட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயாஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்திருந்தது. இந்த நிலையில் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் தற்போது இரு வேறு கருத்துக்கள் நிலவு வருகின்றன.

இந்நிலையில், ஜெயலலிதாவின் இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்ற வருமான வரித் துறையின் பதிலை உயர்நீதிமன்றம் கேட்டது. அதை தொடர்ந்து ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை 2007-ஆம் ஆண்டே முடக்கி வைத்துள்ளோம், என வருமான வரித் துறை தனது பதில் மனுவில் இன்று பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளது.

Image result for poyas garden house

வருமானத்துறை மனுவில் தெளிவாக கூறப்பட்டுள்ளதாவது:-

ரூ.10.13 கோடி சொத்து வரியும், ரூ. 6.62 கோடி வருமான வரியும் நிலுவையில் உள்ளதால் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம், ஹைதராபாத்தில் உள்ள வீடு, சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள கடை உள்பட 4 சொத்துகள் 2007-ஆம் ஆண்டே முடக்கப்பட்டுள்ளது.

இந்த வரி பாக்கியை செலுத்திவிட்டால் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்ற ஆட்சேபம் இல்லை என வருமான வரித் துறை தனது பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கியை யார் செலுத்தப் போகிறார்கள்?, என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், இதுகுறித்த பதிலை தமிழக அரசு இன்னும் 2 வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.


இனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்- கிரண்பேடி

புதுச்சேரி மாநிலத்தின் கவர்னராக செயல்பட்டு வரும் கிரண்பேடி பாராளுமன்ற தேர்தலில் மட்டுமல்ல இனி எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட போவதில்லை என தெரிவித்துள்ளார்.

புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்ட கிரண் பேடி., ஆய்வு முடிந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நான் கடந்த ஒரு வருடமாக ஆந்திர மாநிலத்தின் கவர்னராக பணியாற்றி வருவதாக வதந்திகள் கிளம்புகின்றன.

பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, இனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். இனி நிர்வாகியாக மட்டுமே செயல்பட விரும்புகிறேன்.
இவ்வாறு கிரண்பேடி தெரிவித்துள்ளார்.