மம்தா பானர்ஜிக்கு பதிலடி தந்த மோடி அதை எனக்கு தந்தால் மகாபிரசாதம்

ஒவ்வொரு ஆண்டும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எனக்கு ரசகுல்லாவும், குர்தாக்களையும் தந்து வருகிறார் என்று சில நாட்களுக்கு முன்பு நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே குழப்பமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. இது நாள் வரை யாருக்கும் தெரியாத இந்த விஷயத்தை தேர்தல் லாபத்திற்காக மோடி பொது வெளியில் தெரிவித்ததால் மம்தா பானர்ஜி கடும் கோபம் கொண்டார்.

இதனால் இனி மோடிக்கு அனுப்பும் ரசகுல்லாவில் கல்லையும் மண்ணையும் கலந்து அனுப்புகிறேன். அதை சாப்பிட்டு அவரது பற்கள் உடையட்டும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் கொல்கத்தா அருகே சேரம்பூரில் நடந்த பாஜக தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி கூறியதாவது., கல்லும் மண்ணும் கலந்த ரசகுல்லாவை மம்தா பானர்ஜி எனக்கு தர விருப்பப் படுகிறார். கொல்கத்தா மண்ணில் பல சுதந்திர போராட்ட தியாகிகளும், பல சாதுக்களும் நடந்துள்ளனர். அந்த கல்லும் மண்ணும் கலந்த ரசகுல்லா எனக்கு கிடைத்தால் அது மகா பிராசதம்.

வங்காள மண் புனிதமானது, புத்துணர்ச்சி தருவது, உத்வேகம் தருவது. அந்த மண்ணில் இருந்து ரசகுல்லா கிடைக்க காத்திருக்கிறேன்.

கல்லnலும் மண்ணாலும் ரசகுல்லா செய்து என்னிடம் தந்தால், கொல்கத்தாவில் இருக்கும் கற்கள் அனைத்தும் என்னிடம் வந்துவிடும். திரிணாமுல் காங்கிரஸினர் செய்யும் அராஜகங்களால் மக்கள் காயம் அடைய மாட்டார்கள் என மம்தாவுக்கு மோடி பதிலடி தந்துள்ளார்.

இதற்காக மூதாட்டியின் காலை தொட்டு வணங்கிய சந்திரபாபு நாயுடு

கடந்த 2014ஆம் ஆண்டு ஜுன் 2ந் தேதி ஆந்திர பிரதேஷ் மாநிலம் தெலுங்கான மற்றும் ஆந்திர பிரதேஷ் என்று இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. இதனையடுத்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு அமராவதியில் ஆந்திராவின் புதிய தலைநகரை உருவாக்கி வருகிறது. 

இந்நிலையில், அனந்தபூர் மாவட்டம் கதிரி அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார் சந்திரபாபு நாயுடு. அப்போது அங்கு வந்த 80 வயது முத்தியாலம்மா என்ற மூதாட்டி ஆந்திர தலைநகர் அமராவதியை உருவாக்க தான் சேமித்து வைத்திருந்த ஓய்வுதிய தொகை 50000க்கான காசோலையை கொடுத்தார்.

மூதாட்டியின் இந்த செயலால் மனம் நெகிழ்ந்த சந்திரபாபு நாயுடு மூதாட்டியின் காலை தொட்டு வணங்கினார்.

இதற்கு பின் பேசிய சந்திரபாபு நாயுடு., முத்தியாலம்மாவின் பண உதவி என்னை நெகிழ செய்தது. இது ஆந்திர தலைநகரை விரைவாக கட்டி முடிக்க புது உத்வேகத்தை அளித்துள்ளது. இவரது செயல் மற்றவர்களுக்கு முன்னோடியாக உள்ளது என்று இவரது சமூகப் பொறுப்புணர்வை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.

முன்னாள் முதல்வர் வீட்டில் திடீர் சிபிஐ சோதனை..

ஹரியான மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பூபீந்தர் சிங் ஹூடாவின் சொந்த வீட்டில் மத்திய புலனாய்வு துறையினர் திடீர் ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் ஹூடா முதலமைச்சராக இருந்தபோது காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான பத்திரிகை அலுவலகம் மற்றும் சோனியாவின் மருமகன் ராபர்ட் வத்ராவின் நிறுவனத்துக்கு அரசு நிலம் விதிகளுக்கு புறம்பாக ஒதுக்கப்பட்டது.இந்த வழக்கத மத்திய புலனாய்வு துறை விசாரித்து வருகிறது.

இந்த புகாரை அடிப்படையாக கொண்டு ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் பூபீந்தர் சிங் ஹூடாவின் சொந்த வீடு மற்றும் டெல்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய புலனாய்வு துறை சோதனை செய்து வருகிறது.

கானல 8.30க்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்- கிரண்பேடி

புதுச்சேரி மாநிலத்தின் கவர்னராக செயல்பட்டு வரும் கிரண்பேடி பாராளுமன்ற தேர்தலில் மட்டுமல்ல இனி எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட போவதில்லை என தெரிவித்துள்ளார்.

புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்ட கிரண் பேடி., ஆய்வு முடிந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நான் கடந்த ஒரு வருடமாக ஆந்திர மாநிலத்தின் கவர்னராக பணியாற்றி வருவதாக வதந்திகள் கிளம்புகின்றன.

பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, இனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். இனி நிர்வாகியாக மட்டுமே செயல்பட விரும்புகிறேன்.
இவ்வாறு கிரண்பேடி தெரிவித்துள்ளார்.