ஒரே ஊசியால் ஒரே கிராமத்தில் 500 பேருக்கு ஹெச்.ஐ.வி தொற்று அதிர்ச்சி செய்தி

தென் பாகிஸ்தானின் லர்கானா மாவட்டத்தில் உள்ள ராடோ டெரோ என்ற கிராமத்தில் ஹெச்.ஐ.வி கிருமிகளை கட்டுபடுத்தும் தனியார் அமைப்பு முகாம் ஒன்றை நடத்தியது.

இந்த முகாமில் அந்த கிராமத்தில் இருக்கும் குழந்தைகள் உட்பட அனைவருக்கு ஹெச்.ஐ.வி பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதைைையின் முடிவில் அந்த கிராமத்தில் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டுபிடிக்கபட்டது. இதில் ஹெச்.ஐ.வி கிருமியால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என்பது குறிப்பிடதக்கது.

இதே அமைப்பு சென்ற வாரம் அதே கிராமத்தில் சிலரிடம் மட்டும் ஹெச்.ஐ.வி பரிசோதனை செய்தது. இதில் 90 பேருக்கு ஹெச்.ஐ.வி கிருமி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் இவ்வளவு பேருக்கு எப்படி ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட்டிருக்க முடியும் என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்த போது ஒர் அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்தது.

ஆய்வின் முடிவில், ஒரே ஊசியை மறுசுழற்சிக்கு அனுப்பாமல் அதையே அனைவருக்கும் பயன்படுத்தியதன் விளைவே இத்தனை பேருக்கு ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது. ஹெச்.ஐ.வி தொற்று பரவ காரணமாய் இருந்த மருத்துவர் முசாஃபர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இதனை தொடர்ந்து தான் அந்த கிராமம் முழுக்க குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஹெச்.ஐ.வி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 500 பேருக்கு மேல் பாதிக்கபட்டிருப்பதும் தெரிய வந்தது.

நாடு முழுவதும் புதிய வாகனங்களுக்கு ஆர்.சி வழங்குவது நிறுத்தம் அதிரடி அறிவிப்பு

போலியான வாகன பதிவு எண் தட்டுகளை தடுக்கும் வகையில், கடந்த ஏப்ரல் 1ந் தேதி முதல் புதிதாக விற்பனைக்கு வரும் வாகனங்களில் உயர் பாதுகாப்பு கொண்ட பதிவெண் தட்டுகள் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டது.

பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டஉயர் பாதுகாப்பு பதிவெண் தட்டுகள் வாகனத்தை விட்டு எடுக்க முடியாத, மறு முறை பயன்படுத்த முடியாத வகையில் வாகனத்துடனே பொருத்தபட்டு வரும்.

இந்நிலையில் நாடு முழுவதும் புதிய வாகனங்களுக்கு பதிவு சான்றிதழ் (ஆர்.சி) வழங்குவது நாடு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. வாஹன் தரவு தளத்துடன் உயர் பாதுகாப்பு பதிவு எண் தட்டுகள் ஒருங்கிணைக்கபடாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள போக்குவரத்து ஆணையர் ராஜிவ் புத்தாளர் கூறியதாவது., வாகனம் பதிவு செய்வதற்கான போக்குவரத்து மெஷின் திட்டத்தின் பான் இந்தியா விண்ணப்ப முறைக்கு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை மத்திய அமைச்சகம் உத்தரவின் பேரில் தேசிய தகவல் மையம் தகவல்களை தர இன்னும் அனுமதிக்கவில்லை.

இதனால் நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகனங்களுக்கு பதிவு சான்றிதழ் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மத்திய பிரதேஷ், ஆந்திர பிரதேஷ், தெலுங்கானா மாநிலங்கள் விலக்கு. ஏனென்றால் இந்த 3 மாநிலங்களும் வாஹன் தரவு தளத்திற்கு பதில் தங்களது சொந்த மென் பொருளை பயன்படுத்துகின்றன.

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடக்கம்

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக, 2019ம் ஆண்டிற்கான ஆன் லைன் விண்ணப்ப பதிவுகள் இன்று தொடங்கி உள்ளன.

தமிழகத்தில் +2 மாணவனர்களுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 1ந் தேதி தொடங்கி நடைபெற்றன. இத்தேர்வுகளுக்கான முடிவுகள் எப்ரல் 19ந் தேதி தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இத் தேர்வில் 91.3% மாணவர்கள் தேர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் +2 தேர்வில் தேர்ச்சியடைந்து, பி.இ மற்றும் பி.டெக் பொறியியல் படிப்புகள் படிக்க விரும்பும் மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள ஆன் லைன் மூலம் இன்று தொடங்கி மே 31ந் தேதி வரை விண்ணப்பிகலாம்.

அதன்படி, விண்ணப்பிக் விரும்புவோர் tneaonline.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் மாவட்ட தோறும் அமைக்கப்பட்டுள்ள கலந்தாய்வு உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதுவரை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுகளை அண்ணா பல்கலை கழகம் செய்து வந்தது. ஆனால் இந்த கல்வியாண்டு முதல் இந்த பொறுப்புகள் தொழில் நுட்ப இயக்குனர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சற்றுமுன் வெளியான தகவல் சென்னை வாசிகளுக்கு மாபெரும் இன்ப செய்தி நான்கு நாட்கள் தொடர் மழை அறிவிப்பு

கடந்த சில மாதங்களாக சென்னையில் சூரியன் சுட்டெரித்து வரும் நிலையில் வருகிற ஏப்ரல் 30ந் தேதி முதல் மே 3ந் தேதி வரை சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக நார்வே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு களமனழ காரணமாக சென்னையில் வெள்ளம் ஏற்ப்பட்டது. அதன் பிறகு 4 ஆண்டுகள் ஆகியும் மழை பெய்யவில்லை பொய்த்துவிட்டது. வட கிழக்கு பருவ மழையும் பெய்யவில்லை. இதனால் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கமும், தண்ணீர் தட்டுபாடும் அதிகரித்துவிட்டது.

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. ஆனால் சென்னையில் தூரலும், பலத்த காற்று மட்டுமே அடித்து வருகிறது.

இந்நிலையில் வருகிற 25ந் தேதி தென் மேற்கு வங்க கடலில் புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த புயல் 29ந் தேதி தமிழகம் நோக்கி வர உள்ளதாகவும், அப்போது தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

அதே போல் ஏப்ரல் 30ந் தேதி தொடங்கி மே 3ந் தேதி வரை சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக நார்வே வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.

பொள்ளாச்சி விவகாரம் இந்த இரு பெண்கள் எடுத்த அதிரடி முடிவு

பொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு உச்ச தண்டனை பெற்று தர வேண்டும் எனக் கோரி தமிழகம் முழுவதும் மக்களும், மாணவர்களும். அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்டம் நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தலர் சரத்குமார். இவரது இரு மகள்களில் ஒருவர் தமிழ் ஈழம். சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். பயின்று வருகிறார். மற்றொரு மகள் ஓவியா துடியலூர் பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்த இரு பெண்களும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை கொடூர நிகழ்வை அறிந்து நாங்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளோம்.

எனவே தங்களது பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்திருக்க அனுமதி தரவேண்டும் என்றும், பெண்கள் பாதுகாப்பிற்கு துப்பாக்கி வைத்து கொள்ள உரிமம் வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் எடுத்த இந்த முடிவிற்கு பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி சம்பவத்தை போல் நாகையில் நடந்த கொடூரம்

பொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் நாகை மாவட்டத்திலும் இளம்பெண்ணை மயக்கி ஆபாச படமெடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பேட்டை தெருவை சேர்ந்தவர் சுந்தர் வயது 23. இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ஆழியூர் தெற்கு தெருவை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் நாகையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இளம் பெண் வேலை பார்த்த கடைக்கு அடிக்கடி வந்துள்ளார் சுந்தர். இதன் மூலம் சுந்தருக்கும் இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாய் மாறியுள்ளது.

இருவரும் 1 வருடம் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து சுந்தர் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவருடன் பழகுவதை தவிர்த்து வந்துள்ளார் இளம் பெண்.

இதனால் ஆத்திரமடைந்த சுந்தர் மீண்டும் அந்த பெண்ணை தன்னுடன் பழக வைக்க திட்டம் ஒன்றை தீட்டினான். அதன்படி மீண்டும் தனது காதலியான இளம் பெண்ணிடம் சென்று சாமர்த்தியமாக பேசி மயக்கி நட்பை நீட்டித்துள்ளார்.

இந்நிலையில் காதலியிடம் நாம் காரைக்கால் கோவிலுக்கு சென்று வருவோம் என்று கூறி அழைத்துள்ளார். காதலன் மேல் இருந்த நம்பிக்கையில் அந்த இளம்பெண்ணும் சுந்தருடன் வர சம்மதித்துள்ளார்.

இதையடுத்து தனது காதலியை காரைக்கால் பகுதியில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்ற சுந்தர் அங்கு ஒரு அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது குளிர்பானம் வாங்கி வந்த சுந்தர் அதை காதலியிடம் கொடுத்துள்ளார்.

அந்த குளிர்பானத்தை குடித்த அவர் சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார். தான் குளிர்பானத்தில் கலந்து கொடுத்த மயக்க மருந்தால் காதலி மயக்கமடைந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சுந்தர் அவரிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். மேலும் அதனை தனது செல்போனில் புகைப்படமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் மயக்கம் தெளிந்து எழுந்த இளம்பெண் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்தாயா எனக் கேட்டு சத்தம் போட்டுள்ளார். அப்போது சுந்தர் தன் செல்போனில் பதிவு செய்த பதிவுகளை காட்டி மிரட்டியதோடு வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தால் இளம்பெண் மீண்டும் சுந்தரிடம் பேசுவதை நிறுத்தி விட்டாராம். ஆனால் தன் செல்போனில் தெரியாமல் எடுத்த படத்தை பற்றி இளம்பெண்ணிடம் கூறி அடிக்கடி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

கொலை மிரட்டலால் அதிர்ச்சியும், தன்னை ஆபாசமாக படம் எடுத்து வைத்துள்ளதை அறிந்து அவமானமும் அடைந்த இளம்பெண் உடனடியாக இதுபற்றி கீழ்வேளூர் போலீசில் புகார் அளித்தார்.

இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்களை வாலிபர் சுந்தர் கூறியதாக தெரியவருகிறது. பல பெண்களிடம் காதலிப்பது போல் நடித்து அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடூரத்தின் உச்சம்! பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒரு உண்மை வெளியானது!

இளம் பெண்களை காதல் வளையில் விழவைத்த திருநாவுக்கரசுக்கு உதவியாக இருந்த தோழி யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்களை கதற கதற பலாத்காரம் செய்த வீடியோ ஒன்று அண்மையில் வெளியானது. அதில் பெண்களில் அழுகுரல்கள் கேட்டதை அடுத்து தமிழகமே கொந்தளிப்பில் இருந்தது இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதன் பெயரில் எங்களை இவ்வாறு செய்ய சொன்னதே திருநாவுக்கரசு தான் என்று வாக்குமூலம் அளித்தனர். இதனை அடுத்து தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசை போலீசார் தேடி ஆந்திர மாநிலத்தில் கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் நான்கு பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

இந்த கும்பலின் தலைவராக இருந்த திருநாவுக்கரசு பற்றி தற்போது ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன. திருநாவுக்கரசு வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் கல்லூரியில் படிக்கும்போதே கைநிறைய பணம் ஆகியவற்றைக் கொண்டு எளிதில் பெண்களை காதல் வளையில் சிக்கவைத்து விடுவாராம். கடந்த ஆண்டுகளுக்கு முன்பு இவரது தோழி மூலம் இவருக்கு இளம் பெண்களுடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது.

தனது பேச்சு திறமையால் பலரையும் மயக்கிய இவர் முகநூல் மூலமாக ஏராளமான பெண்களின் செல்போன் எண்களை பெற்றுள்ளாராம். அவ்வாறு தன்னுடைய வளையில் விழுந்த இளம் பெண்களை மயக்கி சொகுசு காரில் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு அழைத்து சென்று அங்கு தனிமையான இடத்தில் பாலியல் சிலுமிசங்களை செய்வார்.

அவ்வாறு செய்யும்போது அவருடைய நண்பர்கள் அதனை வீடியோ எடுத்து விடுவர் பின்னர் இந்த வீடியோவை காட்டி அந்த பெண்களை மிரட்டி தன்னுடைய பண்ணை வீட்டுக்கு வரவழைப்பார். அங்கு கும்பலாக சேர்ந்து பலாத்காரம் செய்து அத்தனையும் வீடியோவாக எடுத்து அந்த பெண்களை மிரட்டியுள்ளனர் இவ்வாறு இவர் பல பெண்களுடன் பழகுவதற்கு இவருடைய தோழி தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது அவர் தான் தனக்கு தெரிந்த பெண்களின் செல்போன் எண்களை வழங்கியதாக கூறப்படுகிறது.

பல பெண்களின் வாழ்க்கை சீரழிந்து போனதற்கு ஒரு பெண்ணும் காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களை பற்றி நீங்கள் திட்ட நினைத்தால் கமெண்டில் தாராளமாக திட்டலாம்.


பொள்ளாச்சி விவகாரம் தமிழக அரசின் மீது சந்தேகத்தை எழுப்பிய திருமாவளவன்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலிசார் விசாணை செய்து லந்தது. இந்நிலையில் இந்த வழக்கை இனி சி.பி.ஐ விசாரிக்கும் என்று தமிழக அரசு நேற்று முன்தினம் முடிவு செய்து, அதற்காக அதிகாரபூர்வ அரசாணையை இன்று வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பேட்டி அளித்த திருமாவளவன் கூறியதாவது, இந்த வழக்கை முதலில் சி.பி.சி.ஐ.டி மூலம் விசாரணை நடத்தப்படும் என அறிவித்த தமிழக அரசு, திடீரென்று சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைத்துள்ளது. தமிழக அரசின் இந்நடவடிக்கை சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

பொள்ளாச்சி சம்பவம் குறித்து நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தியும், பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 15) ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

பொள்ளாச்சி விவகாரம் முக்கிய வீடியோவை வெளியிட்ட ரங்கராஜ் பாண்டே

பொள்ளாச்சியில் சமூக வலைதளங்கள் மூலமாக மாணவிகள், இளம்பெண்களை ஏமாற்றி காதல் வலையில் வீழ்த்தி, சீரழித்த வழக்கில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு (வயது 27), அவருடைய நண்பர்கள் என்ஜினீயர் சபரிராஜன் (27), சதீஷ் (27) மற்றும் வசந்தகுமார் (27) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது. 

இந்த வழக்கு தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது குறித்து ரங்கராஜ் பாண்டே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை சீரழித்த வழக்கில் நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகிய 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 4 பேரிடம் இருந்த கைப்பற்றப்பட்ட ஃபோட்டோ மற்றும் வீடியோக்கள் மூலம் இவர்கள் தான் இதை செய்துள்ளார்கள் என்றும், இந்த செயலை தொடர்ந்து பல வருடங்களாக செய்து வாருகின்றனர் என உறுதிபட தெரிய வருகிறது.

இந்த கும்பலால் நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப் பட்டிருந்தும், இதுவரை ஒரே ஒரு பெண் மட்டுமே பிப்ரவரி 24ந் தேதி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் தமிழக காவல் துறை பெண்ணை மானபங்கம் படுத்துதல் இந்தியன் தண்டனை சட்டம் 354 ‘ஏ’, பெண்ணின் துகில் (ஆனட) உறிதல் இந்தியன் தண்டனை சட்டம் 354 ‘பி’, வழிப்பறி இந்தியன் தண்டனை சட்டம் 392, பெண்ணை ஆபாசமாக படம் எடுத்தல் தொழில்நுட்ப சட்டம் 66 ‘இ’ ஆகிய 4 பிரிவுகளில் வலுவாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

இவர்களுக்கு அதிகபட்ச தண்டனை உறுதி. இருந்தாலும் இவர்கள் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் பெற்றோர் அனுமதியுடன் காவல் நிலைwத்தில் இவர்கள் மீது தனி தனியாக புகார் அளிக்க முன் வர வேண்டும்.

இதன் மூலம் இந்த வழக்கில் சம்மந்தபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு உச்சபட்ச தண்டனை பெற்று தர முடியும் என கேட்டு கொண்டுள்ளார்.

உடை மாற்றும் பெண்ணை ரகசியமாய் வீடியோ எடுத்த ஹாஸ்பிடல் வார்டு பாய்..

தனியார் மருத்துவமனையில் பெண் நோயாளி உடை மாற்றுவதை ஹாஸ்பிடல் வார்டு பாய் படம்பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் சாஸ்சூன் சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை பார்த்து வரும் லகேஷ் லாஹு உட்டேகர்(25), கடந்த சனிக்கிழமை இரவு, எம்.ஆர்.ஐ மையத்திற்கு அருகே உள்ள அறையில் பெண் நோயாளி உடைமாற்றிக் கொண்டிருந்ததை செல்போனில் படம் பிடித்துள்ளான்.

கடும் வயிற்றுவலி காரணமாக கடந்த 4 நாட்களுக்கு முன்பாக உள்நோயாளிப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு சனிக்கிழமை மதியம் டாக்டர்கள் சோதனை நடத்தினர். அதனை தொடர்ந்து எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இதையடுத்து வார்டு பாய் அப்பெண்ணிடம் அருகிலுள்ள அறையில் உடை மாற்றிக் கொள்ளுமாறு கூறியுள்ளார். அதன்பேரில் அங்கு சென்ற பெண், டேபிளில் செல்போன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனே செல்போனை எடுத்து பார்க்கையில், வீடியோ கேமரா ஆன் செய்யப்பட்டு இருந்துள்ளது. அதுவரை நடந்தவை அனைத்தும் செல்போனில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உடனே அப்பெண் கூச்சலிட்டதால், அதிகாரிகள் ஓடி வந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வார்டு பாய் லகேஷ் லாஹு உட்டேகர்(25) கைது செய்யப்பட்டான்.

பின்னர் இதுகுறித்து அறிக்கையை வெளியிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம்., வார்டு பாய் லகேஷ் லாஹு உட்டேகர் மருத்துவமனை ஊழியர் அல்ல. தனியார் ஏஜென்சி மூலம் ஒப்பந்த அடிப்படையில் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஏஜென்சிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அவர்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, மற்ற மருத்துவமனைகளுக்கும் ஏஜென்சி குறித்து எச்சரிக்கை அளிக்கப்படும். எங்களுக்கு நோயாளிகளின் நலன் தான் முதலில் முக்கியம். சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு நேர்ந்த துயரத்திற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.


தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும்- உயர்நீதிமன்றம் அதிரடி

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது.

டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுப்பதாக கன்னியாகுமரியை  சேர்ந்த ரஷீத் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியில் பொதுமக்களின் குடியிருப்புக்கு மத்தியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. மேலும் அந்த பகுதியில் பள்ளிகளும் உள்ளன.

டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் போதையில் தகராறு செய்கிறார்கள். இதனால் அந்த பகுதி பெண்களுக்கும், மாணவிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு குறித்த விசாரணை நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது.

இதையடுத்து தீர்ப்பளித்த நீதிபதிகள், விளவங்கோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றுவது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பதில் அளிக்க வேண்டும் என்று கூறினர்.

மேலும், நாளை (30-ந்தேதி) மகாத்மா காந்தி நினைவுநாளையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை அடுத்த மாதம் 18-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


மாணவர்களின் எதிர்காலத்திற்காக ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்- அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 22-ஆம் தேதியில் இருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றோடு 6-வது நாளாக தொடர்ந்து வரும் இந்த வேலைநிறுத்ததால், அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி மிகவும் பாதிப்படைந்துள்ளது.

இந்த நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் வேலைநிறுத்தத்திற்கு தடை கோரி லோகநாதன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தத்தால் மாணவர்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி அமர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், ‘‘அரசின் நிதிநிலை தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. சட்ட ரீதியாக அணுகாமல் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வீதியில் இறங்கி போராடுகிறீர்கள். நீங்கள் தற்போது குறிப்பிட்டுள்ள விவகாரம் தொடர்பாக புதிதாக உத்தரவு ஏதும் பிறக்க முடியாது’’ என்று தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இந்த வழக்கு மீதான மறு விசாரணை வருகிற பிப்ரவரி 18-ஆம் தேதி மீண்டும் அமர்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆசிரியர்களின் இந்த வேலைநிறுத்த போராட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் இன்று பேட்டியெடுத்த போது அவர் கூறியதாவது:-

அரசின் கஷ்டங்களை ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆசிரியர்கள் அனைவரும் தங்களுடைய பணிகளுக்கு திரும்ப வேண்டும். வருகிற பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதிக்கு பிறகு பொதுத்தேர்வுகள் வருகிறது. ஆகவே மாணவர்களுடைய எதிர்காலத்தை மனதில் கொண்டு ஆசிரியர்கள் வேலைக்கு திரும்ப வேண்டும் என்று கூறினார்.

மேலும், தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியதற்கு, அமைச்சர் செங்கோட்டையன் அதனை முதல்வருடன் கலந்து பேசிய பின்புதான் என்னவென்று தெரியும் என்று கூறினார்.


சற்றுமுன் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால் மட்டுமே ஸ்டிரைக் வாபஸ் பெறப்படும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அதிரடியாக தெரிவித்துள்ளனர்.

புதிதாக கொண்டுவரப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 22-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் பெரும் அவதியடைந்தனர். மேலும் அரசு பணிகள் தொய்வடைந்தன. போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து அமைச்சர் ஜெயக்குமார் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடியாது. ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் பணிக்கு உடனடியாக திரும்பாவிட்டால் துறை ரீதியான நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமாரின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் ஜாக்டோ ஜியோவின் மாயவன் கூறுகையில்,

நாங்கள் புதிய கோரிக்கைகள் எதுவும் கேட்கவில்லை. ஏற்கெனவே அமலில் இருந்த திட்டத்தை அமல்படுத்த கோருகிறோம். இதனால் அரசுக்கு செலவு அதிகரிக்காது.

எனவே ஜெயக்குமாரின் அறிக்கையை ஏற்க முடியாது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால் மட்டுமே வேலை நிறுத்தத்தை வாபஸ் செய்வோம் என மாயவன் தெரிவித்துள்ளார்.


போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை பாயும்- அமைச்சர் ஜெயக்குமார்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனே பணிக்கு திரும்பாவிட்டால் துறை ரீதியான நடவடிக்கை பாயும் என தமிழக பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதிதாக கொண்டுவரப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 22-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி மிகவும் பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வோம் என ஜெயலலிதா கூறவில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த சாத்தியக் கூறுகள் உள்ளதா என ஆராயப்படும் என்றுதான் ஜெயலலிதா கூறினார்.

மேற்கு வங்க மாநிலத்தைத் தவிர மத்திய அரசும் பிற மாநிலங்களும் புதிய ஓய்வூதிய திட்டத்தையே பின்பற்றுகின்றன. எனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த இயலாது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களை விட அதிக ஊதியம் பெறுகின்றனர் என்பதை உணர வேண்டும்.

கல்விக்கும் பணிக்கும் இடையூறு போராட்டங்கள் நடத்துவதை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள். இல்லாவிட்டால் பணிக்கு செல்லாதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவது சாத்தியமில்லை. அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களும் நிதியை செலவிட்டு விட்டால் மக்கள் திட்டங்களுக்கு நிதியில்லாமல் போகும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி! கூடவே ஒரு நிபந்தனை.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம் கூடவே ஒரு நிபந்தனையையும் விதித்துள்ளது.

தூத்துக்குடி மக்களின் போராட்டத்தை அடுத்து, தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளுடன் மீண்டும் திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து ஆலையை திறக்கவும் ஆலைக்கு மின்சாரம் வழங்கவும் அனுமதி கோரி வேதாந்த நிறுவனம் சார்பில் தமிழக அரசுக்கு மனு அனுப்பப்பட்டது. அனால் இந்த மனுக்குறித்து தமிழக அரசு எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும், ஆலையை திறக்க உத்தரவிடுவதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்து வருகிறது என வேதாந்தா நிறுவனம் கூறியிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது, வேதாந்தா நிறுவனம் சார்பு தரப்பு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்., தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்றும், ஆலைக்கு தமிழக அரசு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றும் கூறியது.

மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை., ஆலை பராமரிப்பு மற்றும் நிர்வாக ரீதியிலான பணிகளுக்காக மட்டுமே மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.