எல்லாம் தெரியும்படி உடை அணிந்து வந்த பிரியங்கா சோப்ரா

கேன்ஸ் பட விழாவில் இன்று பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த கருப்பு நிற கவர்ச்சி உடை இணைய தள வாசிகளிடம் கடும் விமர்சனத்தை வாங்கி கொட்டியுள்ளது.

சினிமா துறையில் ஆஸ்கர், குளோப் விருதுகளுக்கு அடுத்து உயர்வாக கருதப்படும் விருது கேன்ஸ் திரைப்பட விருதுகள். 2019ம் ஆண்டுக்கான 75-வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் தொடங்கி உள்ளது. வருகிற 25-ந்தேதி வரை இந்த விழா நடக்கிறது. போட்டியில் சர்வதேச அளவில் 21 படங்கள் பங்கேற்கின்றன.

இவ்விழாவில் கலந்து கொண்ட ஹிந்தி நடிகைகள் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, கங்கனா ரணாவத் ஆகியோருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.

இதில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மிகவும் கவர்ச்சிகரமான உள்ளே உள்ள அனைத்தும் தெரியும் படி டிசைன் செய்யப்பட்ட கருப்பு நிற உடையை அணிந்து வந்து போஸ் கொடுத்தார். இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிரியங்காவின் உடையை பார்த்த நெட்டீசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

லக்ஷ்மிபாம் படத்தில் இருந்து விலகினார் ராகவா லாரன்ஸ்

காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக்கான லக்ஷ்மிபாம் படத்தில் இருந்து விலகுவதாக இயக்குனர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு ராகவா லாரன்ஸ், சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தமிழில் செம ஹிட் அடித்த படம் காஞ்சனா. தமிழில் இப்படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் லக்ஷ்மிபாம் என்ற பெயரில் இப்படத்தை ரீமேக் செய்கிறார் ராகவா லாரன்ஸ்.

இப்படத்தை லாரன்ஸ் இயக்க முக்கிய கதாபாத்திரங்களில் அக்ஷய் குமார், கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கின்றனர். லக்ஷமிபாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நேற்று அக்ஷய் குமார் தனது டுவிட்டர் பக்கததில் வெளியிட்டார். இந்நிலையில் இப்படத்தில் இருந்து விலகுவதாக லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

இதற்கு காரணமாய் அவர் கூறியது., மதியாதார் தலைவாசல் மிதியாதே என தமிழில் ஒரு பழமொழி உண்டு. இந்த உலகத்தில் ஒரு மனிதனுக்கு பணம், புகழை விட சுயமரியாதை மிகவும் முக்கியம். அதற்கு பங்கம் வந்துவிட்டது. அதனால் தான் லக்ஷ்மிபாம் படத்தில் இருந்து நான் விலகுகிறேன்.

நேற்று லக்ஷ்மிபாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை எனக்கு தெரியாமல் வெளியிட்டுள்ளனர். மிகவும் சுமாராக இருந்தது. இப்படத்தின் இயக்குனர் நான். எனக்கு மூன்றாவது நபர் கூறி தான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது தெரிய வேண்டியுள்ளது. இது எனக்கு மிகவும் வலியையும் வருத்தத்தையும் தந்துள்ளது.

என்னால் இப்படத்தை பாதியில் நிறுத்த முடியும். நான் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்து போடவில்லை. ஆனால் நான் அப்படி செய்யமாட்டேன். அது தொழில் தர்மமும் இல்லை. நான் அக்ஷய் குமார் சார் மீது அதிக மரியாதை வைத்துள்ளேன். நான் லக்ஷ்மிபாம் படத்தின் மொத்த ஸ்கிரிப்டையும் அவரை நேரில் சந்தித்து கொடுத்துவிட்டு படத்தில் இருந்து முழுமையாக விலகி விடுவேன் என தெரிவித்துள்ளார்.

ஆர்யா நடிப்பில் மகாமுனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

கடந்த 2011ம் ஆண்டு அருள்நிதி – இனியா நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் த்ரில்லர்  படம் மெளனகுரு. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சாந்தகுமார்.

எட்டு ஆண்டுகளுக்கு பின் தனது இரண்டாவது படத்தை இயக்கி உள்ளார் சாந்தகுமார். மகாமுனி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ஆர்யா ஹீரோவாகவும், இந்துஜா மற்றும் மஹிமா நம்பியார் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் காளி வெங்கட், ஜெயபிரகாஷ், அருள்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு, எஸ்.தமன் இசையமைத்துள்ளார். சாபு ஜோசப் எடிட்டராகப் பணிபுரிகிறார்.

இப்படத்தின் படபிடிப்பு ஏப்ரல் மாதமே முடிவடைந்த நிலையில், இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடபட்டுள்ளது. தற்போது இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் புதிய வாகனங்களுக்கு ஆர்.சி வழங்குவது நிறுத்தம் அதிரடி அறிவிப்பு

போலியான வாகன பதிவு எண் தட்டுகளை தடுக்கும் வகையில், கடந்த ஏப்ரல் 1ந் தேதி முதல் புதிதாக விற்பனைக்கு வரும் வாகனங்களில் உயர் பாதுகாப்பு கொண்ட பதிவெண் தட்டுகள் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டது.

பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டஉயர் பாதுகாப்பு பதிவெண் தட்டுகள் வாகனத்தை விட்டு எடுக்க முடியாத, மறு முறை பயன்படுத்த முடியாத வகையில் வாகனத்துடனே பொருத்தபட்டு வரும்.

இந்நிலையில் நாடு முழுவதும் புதிய வாகனங்களுக்கு பதிவு சான்றிதழ் (ஆர்.சி) வழங்குவது நாடு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. வாஹன் தரவு தளத்துடன் உயர் பாதுகாப்பு பதிவு எண் தட்டுகள் ஒருங்கிணைக்கபடாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள போக்குவரத்து ஆணையர் ராஜிவ் புத்தாளர் கூறியதாவது., வாகனம் பதிவு செய்வதற்கான போக்குவரத்து மெஷின் திட்டத்தின் பான் இந்தியா விண்ணப்ப முறைக்கு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை மத்திய அமைச்சகம் உத்தரவின் பேரில் தேசிய தகவல் மையம் தகவல்களை தர இன்னும் அனுமதிக்கவில்லை.

இதனால் நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகனங்களுக்கு பதிவு சான்றிதழ் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மத்திய பிரதேஷ், ஆந்திர பிரதேஷ், தெலுங்கானா மாநிலங்கள் விலக்கு. ஏனென்றால் இந்த 3 மாநிலங்களும் வாஹன் தரவு தளத்திற்கு பதில் தங்களது சொந்த மென் பொருளை பயன்படுத்துகின்றன.

சற்றுமுன் வெளியான தகவல் சென்னை வாசிகளுக்கு மாபெரும் இன்ப செய்தி நான்கு நாட்கள் தொடர் மழை அறிவிப்பு

கடந்த சில மாதங்களாக சென்னையில் சூரியன் சுட்டெரித்து வரும் நிலையில் வருகிற ஏப்ரல் 30ந் தேதி முதல் மே 3ந் தேதி வரை சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக நார்வே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு களமனழ காரணமாக சென்னையில் வெள்ளம் ஏற்ப்பட்டது. அதன் பிறகு 4 ஆண்டுகள் ஆகியும் மழை பெய்யவில்லை பொய்த்துவிட்டது. வட கிழக்கு பருவ மழையும் பெய்யவில்லை. இதனால் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கமும், தண்ணீர் தட்டுபாடும் அதிகரித்துவிட்டது.

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. ஆனால் சென்னையில் தூரலும், பலத்த காற்று மட்டுமே அடித்து வருகிறது.

இந்நிலையில் வருகிற 25ந் தேதி தென் மேற்கு வங்க கடலில் புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த புயல் 29ந் தேதி தமிழகம் நோக்கி வர உள்ளதாகவும், அப்போது தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

அதே போல் ஏப்ரல் 30ந் தேதி தொடங்கி மே 3ந் தேதி வரை சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக நார்வே வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.

பல மடங்கு பலமான கொல்கத்தா அணி புதிதாக ஓப்பந்தமான ஆஸ்ரேலிய வீரர்

சிவம் மாவி, கமலேஷ் நாகர்கோட்டி, அன்ரிச் நொர்டே ஆகிய மூன்று வேகப் பந்து வீச்சாளர்கள் இந்தாண்டு ஐ.பி.எல் தொடர் தொடங்கும் முன்பே காயம் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து விலகினார்கள்.

இதனைwடுத்து சிவம் மாலி மற்றும் கமலேஷ் நாகர்கோட்டிக்கு மாற்று வீரர்களாக பிரதீப் கிருஷ்ணா, சந்திப் வாரியர் என்ற இரு இந்திய வீரர்களை கொல்கத்தா அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஆனால் அன்ரிச் நொர்டேவுக்கு மாற்று வீரர் இதுவரை அறிவிக்கபடாமல் இருந்தது.

இந்நிலையில் சற்றுமுன் ஆஸ்ரேலிய வேகப் பந்து வீச்சாளர் மேட் கெல்லி அன்ரிச் நொர்டேவுக்கு மாற்று வீரராக கொல்கத்தா அணி ஒப்பந்தம் செய்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஷ லீக் தொடரில் சிறப்பாக பந்து வீசினார் என்பது குறிப்பிடதக்கது.

தற்போது கொல்கத்தா அணி முதல் 6 போட்டிகளில் நான்கை வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் மேட் கெல்லியின் வருகை கொல்கத்தா அணியின் பலத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளது.

ரோகித் சர்மாவின் காயம் குறித்து பொல்லார்ட் முக்கிய பேட்டி

நேற்று இரவு நடைபெற்ற ஐ.பி.எல் 12வது தொடரின் 24வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 197 ரன்களை குவித்தது.

இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணியில் பொல்லார்ட் 31 பந்தில் 83 ரன்களை குவித்து அதிரடி காட்ட, மும்பை அணி 20 ஓவரில் 198 ரன்களை எட்டி வெற்றி பெற்றது. புள்ளி பட்டியலிலும் 3வது இடத்தை பிடித்தது.

இப்போட்டியில், மும்பை அணியின் நடப்பு கேப்டன் ரோகித் சர்மா பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக நேற்றைய போட்டியில் பங்கேற்கவில்லை. இதனால் அவருக்கு மாற்றாக சித்தேஷ் லாட் என்ற இளம் வீரர் களம் இறக்கப்பட்டார். மும்பை அணியை அனுபவ வீரர் பொல்லார்ட் கேப்டனாக வழிநடத்தினார்.

போட்டி முடிந்து பேட்டியளித்த பொல்லார்ட் ரோகித் சர்மாவின் காயம் குறித்து கூறியதாவது., ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்டுள்ள காயம் கவலைபடும் அளவிற்கு இல்லை. சிறிய காயம் தான் விரைவில் குணமடைந்துவிடும். தற்போது ஓய்வு அளிக்கப்பட்டது முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே. அடுத்த போட்டியில் கண்டிப்பாக அவர் கேப்டனாக பங்கேற்பார். அவர் மீண்டும் அணிக்கு திரும்பும் போது கேப்டன் பதவியை அவரிடம் ஒப்படைத்து விடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

விஸ்டன் கிரிக்கெட்டர் விருதை 3வது முறையாக பெற்ற விராட் கோலி

ஒவ்வொரு ஆண்டும் சிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்தாண்டு விஸ்டன் கிரிக்கெட்டர் விருதை பெறப்போகும் வீரர்கள் பெயர்கள் வெளியாகி உள்ளது. இதனை விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக் புத்தகத்தின் எடிட்டர் வெளியிட்டுள்ளார்.

அதில் இந்தாண்டின் தலை சிறந்த முன்னனி கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தலை சிறந்த முன்னனி கிரிக்கெட் வீராங்கனை ஸ்ருமிதி மந்தனா மற்றும் தலை சிறந்த முன்னனி டி20 வீரர் ரஷீத் கான் என குறிப்பிடபட்டுள்ளது.

விராட் கோலி விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் விருதை தொடர்ந்து 3வது முறையாகவும், ரஷீத் கான் தொடர்ந்து 2வது முறையாக மற்றும் ஸ்ருமிதி மந்தனா முதல் முறையாககவும் பெருகின்றனர்.

இல் விருதுகளை பெறப்போகும் விராட் கோலி மற்றும் ஸ்ருமதி மந்தனா ஆகியோருக்கு பல முன்னாள் வீரர்களும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

10 ஆண்டு கால நெஹ்ராவின் சாதனைய முறியடித்து தீபக் சாஹர் புதிய சாதனை

நேற்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடியில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதனையடுத்து 109 என்ற எளிய இலக்கை துரத்திய சென்னை அணி, 17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்களை எடுத்தது. இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல் தொடரில் தனது 5வது வெற்றியை பதிவு செய்தது. மேலும் புள்ளி பட்டியலிலும் முதல் இடத்திற்கு சென்றது சென்னை அணி.

கடந்த 2009ம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி ஆஷிஷ் நெஹ்ரா, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் 19 டாட் பால்களை வீசி சாதனை புரிந்தார். இந்த சாதனை 10 ஆண்டுகளாக முறியடிக்கபடாமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வீரர் தீபக் சாஹர் 20 டாட் பால்களை வீசி நெஹ்ராவின் சாதனை முறியடித்துள்ளார்.

கொல்கத்தாவை செமயா கலாய்த்து டுவிட் போட்ட சி.எஸ்.கே அணி

பெங்களுர் அணிக்கு எதிரான போட்டியை வெற்றி பெற்ற கொல்கத்தா அணி “மூணு நாள்ல மீட் பண்ணலாம்” என டுவிட் போட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நேரடியாக சவால் விட்டது.

இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணியில் கிறிஸ் லின் (0), ராபி உத்தப்பா (11), தினேஷ் கார்த்திக் (19), நிதிஷ் ராணா (0) என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகினர். ஒரு முனையில் சூழ்நிலையை உணர்ந்து ஆடிய ரஸல் 44 பந்தில் 50 ரன்களை குவித்தார்.

இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 17. 2 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. கொல்கத்தாவை 7 விக்கெட் வித்திசயத்தில் வீழ்த்தியது சென்னை.

இந்த வெற்றிக்கு பின், புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது சென்னை அணி . அதே சமயம் முதல் இடத்தில் இருந்த கொல்கத்தா அணி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொல்கத்தா அணி போட்ட டுவிட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ” உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி” என கிண்டலாய் சி.எஸ்.கே. டுவிட் செய்துள்ளது. தற்போது டுவிட் வைரலாகி வருகிறது.

ஐ.பி.எல்லை வைத்து கோலியை எடை போடாதீர்கள் திலிப் வெங்சர்க்கார் கருத்து

உலகின் தலை சிறந்த வீரராக இருக்கும் விராட் கோலி கடந்த 3 மூன்று மாதங்களாக கேப்டனாக பல சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்ரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணியின் கேப்டனாக இழந்தார் லிராட் கோலி. அதனை தொடந்து ஐ.பி.எல் தொடரில் கோலி வழி நடத்தும் பெங்களுர் அணி முதல் 6 போட்டிகளில் தோற்று ஏறக்குறைய பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது.

இதனால் பல முன்னாள் வீரர்களும் லிராட் கோலியின் கேப்டன்சியை விமர்சனம் செய்ய ஆரமித்து விட்டனர். கம்பீர் விராட் கோலியை அப்பிரண்டீஸ் கேப்டன் என விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் விராட் கோலியை இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ரோகித் சர்மாவை புதிய கேப்டனாக நியமிக்கும் படி பல கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது கருத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஐ.பி.எல் போட்டிகளை கொண்டு விராட் கோலியின் கேப்டன்சியை எடை போட வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கார் பேட்டியளித்துள்ளார்.

விராட் கோலி மிகச் சிறந்த பேட்ஸ்மேன். அவர் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் பேட்டிகளில் நல்ல ஃபார்மில் உள்ளார். அவர் உலகின் தலை சிறந்த கேப்டன்களுள் ஒருவர்.

ஐ.பி.எல் போட்டிகளை வைத்து விராட் கோலியின் பேட்டிங்கையும், கேப்டன்சியையும் எடை போடக் கூடாது. அவர் ஒருநாள் மற்றும் உலக கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார்.

உலகப் கோப்பைக்கான இந்திய அணி 4ம் வரிசை வீரரை ஐ.பி.எல் போட்டிகள் கொண்டு தேர்வு செய்வது தவறானது. அந்த இடத்திற்கு அனுபவ வீரர் அஜங்கியா ரகானே அல்லது கே.எல் ராகுலை நியமிப்பதே நல்லது என தெரிவித்துள்ளார்.

நேருக்கு நேர் மோதியதில் யார் சிறந்தவர்கள் சென்னையா கொல்கத்தாவா

இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தனது சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. இப்போட்டி சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.

புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் மோதுவதால் இப்போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே சமயம் ஆன்ரே ரஸலை சமாளிக்க தோனி என்ன கள வியூகம் வைத்திருக்கிறார் என்பதை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

ஆன்ரே ரஸல், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் சென்னை அணியின் பந்து வீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடியை தருவார்கள். அதே சமயம் சென்னை அணியின் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், தீபக் சாஹ்ர் ஆகியோர் கொல்கத்தா அணி பேட்ஸ் மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள்.

இன்றைய போட்டியில் இரு அணிகளிலும் எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது..

நேருக்கு நேர்: இதுவரை இரு அணிகளும் 21 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் 12 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 8 முறை கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு இரண்டு போட்டிகளில் இவ்விரு அணிகளும் மோதின. ஒன்றில் கொல்கத்தாவும், மற்றொன்றில் சென்னையும் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் வரலாற்றில் டாப் 3 காமெடி டான்ஸ் நிகழ்வுகள் வீடியோ

கடந்த 2008ம் ஆண்டு தொடங்கிய ஐ..பி.எல் தொடரை இந்தாண்டு வரை வெற்றிகரமாக நடத்தி வருகிறது பி.சி.சி.ஐ. இந்த 12 ஆண்டுகளில் எக்கசக்க சாதனைகள், சர்ச்சைகள், சண்டைகள், பல உணர்ச்சிபூர்வ நிகழ்வுகளை நாம் பார்த்திருப்போம்.

அந்த வகையில் ஐ.பி.எல் வரலாற்றில் சிறந்த மூன்று காமெடி டான்ஸ்  நிகழ்வுகள் கீழே தரப்பட்டுள்ளது.

விராட் கோலி பnங்கரா டான்ஸ்:

கடந்த 2015ம் ஆண்டு நடந்த லீக் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது பெங்களுர் அணி. போட்டிக்கு முடிந்த பின் ஓய்வறையில் விராட் கோலி, கிறிஸ் கெய்ல் மற்றும் மந்தீப் சிங்குடன் இணைந்து பாங்கரா டான்ஸ் ஆடி வெற்றியை கொண்டாடினார். இது ஐ.பி.எல்லில் மிகச் சிறந்த காமெடி நிகழ்வாக பதிவாகியுள்ளது.

தோனி டான்ஸ்:

கடந்த 2011ம் ஆண்டு புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்காக விளையாடினார் தோனி . அப்போது சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஓய்வறையில் விளம்பரம் ஒன்றிற்கு தோனி டான்ஸ் ஆடி காட்டுவார். இந்த வீடியோ அப்போது வைரலானது.

பிராவோ போலிங்கர் டான்ஸ்:

கடந்த 2011ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பெங்களுர் அணியை வீழ்த்திய பின், சென்னை வீரர்கள் பிராவோ மற்றும் போலிங்கர் ஆகியோர் மைதானத்தில் டான்ஸ் ஆடுவார்கள்.

இந்திய அணியின் 4வது வீரர் இவர்தான் உண்மையை போட்டுடைத்த ரோஹித் சர்மா

12வது உலக கோப்பை போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் வருகிற மே 30ந் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இத்தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஜூன் 5ந் தேதி தென்னாப்ரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்நிலையில் இன்று உலக கோப்பைக்கான இந்திய அணி வருகிற ஏப்ரல் 15ந் தேதி அறிவிக்கப்படும் என பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

ஆனால் யார் அந்த 4வது வீரர் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது இதற்கான விடையை இந்திய அணியின் துணை கேப்பன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

பேட்டியின் போது அவர் கூறியதாவது, உலக கோப்பையில் இந்திய அணியின் 4வது வரிசை வீரர் தேர்வில் அம்பத்தி ராயுடு, தினேஷ் காந்திக், ஸ்ரேயாஷ் ஐயர் மற்றும் விஜய் சங்கர் பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. ராயுடு தனக்கு கிடைத்த வாய்ப்புகளை வீணடித்துவிட்டார்.

தற்போது ஐ.பி.எல் போட்டிகளில் விஜய் சங்கர் மற்றும் ஸ்ரேயாஷ் ஐயர் மட்டும் தான் சூழ்நிலையை உணர்ந்து விளையாடி வருகின்றனர். இவர்கள் இருவரில் ஒருவரை நான் தேர்வு செய்ய உள்ளோம். இது குறித்து நானும் கோலியும் தேர்வு குழுவிடம் பேசி வருகிறோம்.

அதே சமயம் பேக் அப் லிக்கெட் கீப்பர் குறித்து இன்னும் குழப்பம் நீடிக்கிறது. யார் என்று முடிவு செய்ய படவில்லை என தெரிவித்துள்ளார்.

ஆன்ரே ரஸலை நான் தான் அவுட் செய்ய போறேன் சவால் விட்ட ஹர்பஜன் சிங்

நாளை நடைபெற உள்ள ஐ.பி.எல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர் கொள்கிறது.

இப்போட்டியில் சென்னை அணிக்கு சவாலாக இருக்க போவது ஆன்ரே ரஸல் தான். இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ள ரஸல் 207 ரன்களை குவித்துள்ளார். இந்த சீசனில் அவரது ஸ்ரைக் ரேட் 269 ஆகும். பெத் ஓலர்களில் மிக அபாயகரமான வீரராக உள்ளார்.

ஆன்ரே ரஸலை சென்னை அணி எப்படி சமாளிக்க போகிறது? உங்களுக்கு ரஸ்லை பார்த்தால் பயமாக இல்லையா என்ற கேள்வி ஹர்பஜன் சிங்கிடம் கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது.

ரஸல் போன்ற வீரர்களின் விக்கெட்டை எடுப்பதற்கு தான் சென்னை அணி என்னை வைத்துள்ளது. 20 வருடங்களுக்கு மேல் நான் டாப் லெவல் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். இதுவரை எந்த வீரரையும் பார்த்து பயந்தது இல்லை.

எனக்கு ரஸலை பார்த்து பயம் ஒன்றும் இல்லை. அவரை வீழ்த்த என்னிடம் திட்டம் உள்ளது. மேலும் எங்களிடம் தோனி உள்ளார். தோனியின் கள வியூகத்தை தாண்டி ரஸலால் விளையாட முடியாது . அவரது விக்கெட்டை நாளை நான் தான் வீழ்த்த போறேன் என தெரிவித்துள்ளார்.