சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து யுவ்ராஜ் சிங் ஓய்வு?

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவர் யுவ்ராஜ் சிங். கடந்த 2011ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது போது அத்தொடர் முழுவதும் ஆல் ரவுண்டராக ஜொலித்தவர் யுவராஜ் சிங்.

புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த பின் இந்திய அணியில் தனது இடத்தை தக்க வைத்து கொள்ள முடியாமல் தவித்தார். கடந்த 2017ம் ஆண்டு வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணியில் கடைசியாக இடம் பெற்றிருந்தார். தற்போது இந்திய அணியில் அணியில் இருந்து முழுமையாக ஓரம் கட்டப்பட்ட நிலையில், ஐபிஎல் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.

இந்நிலையில் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் பங்கேற்பதற்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து யுவ்ராஜ் சிங் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், முதல் தர மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற யுவராஜ் சிங் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக விரைவில் பிசிசிஐயிடம் பேசி முடிவு செய்ய உள்ளார். வெளிநாடுகளில் நடக்கும் டி20 தொடரில் பங்கேற்க யுவராஜ் சிங் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். கனடாவில் நடக்கும் ஜிடி20 போட்டி, அயர்லாந்து, ஹாலந்து, கரீபியன் ஆகிய நாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில் விளையாட விருப்பமாக இருப்பதால், பிசிசிஐ அனுமதியைக் கோருகிறார்.

ஒரு வேளை பிசிசிஐ வெளிநாட்டு தொடரில் விளையாட அனுமதி அளித்தால், உடனே தனது ஓய்வை அறிவிப்பார். முதல் தர கிரிக்கெட்டில் இருந்து யுவ்ராஜ் ஓய்வு பெற்றாலும், பிசிசிஐயின் பதிவு பெற்ற டி20 வீரராக தான் இருப்பார். இதனால் யுவ்ராஜ் சிங் விஷயத்தில் பிசிசிஐ விதிகளை நன்கு ஆராய வேண்டியுள்ளது.

உலக கோப்பையை இந்த அணி தான் வெல்லும் திட்டவட்டமாக தெரிவித்த கம்பீர்

அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டிகள் வருகிற மே 30ந் தேதி இங்கிலாந்து நாட்டில் நடக்க உள்ளது.

இம்முறை உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிக்கு தான் வாய்ப்பு உள்ளது எனவும், ஆஸ்ரேலியா, நியூஸ்லாந்து, வெஸ்ட் இன்டிஸ் அணிகள் உலக கோப்பையை வெல்ல கடும் சவால் அளிக்கும் அணிகள் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ஆஸ்ரேலியா அணிதான் உலக கோப்பையை வெல்லும் என கருத்து தெரிவித்துள்ளார்.

இம்முறை உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகள் அனைத்தும் ஏறக்குறைய சமபலத்தில் உள்ளன. போட்டிகள் பார்ப்பதற்கு சுவாரஷ்யமாக இருக்கும் என நினைக்கிறேன். உலக கோப்பை போட்டிகளில் விளையாட போகும் வீரர்கள் சுயநலமின்றி தங்கள் அணி வெற்றி பெற உழைக்க வேண்டும்.

என்னை பொறுத்த வரை இந்த முறை உலக கோப்பையை வெல்ல ஆஸ்ரேலியா அணிக்கு தான் அதிக வாய்ப்பு. இங்கிலாந்து இந்திய அணிகளுக்கு வாய்ப்பு இரண்டாவது தான். இந்த முறை உலக கோப்பை போட்டிகளில் ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி அதிக ரன்கலை குவிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

இதை மட்டும் செய்தால் இந்திய அணி எளிதில் வெல்லலாம் டிராவிட் கருத்து

12வது 50 ஓவர் உலக கோப்பை போட்டிகள் வரும் 30ந் தேதி இங்கிலாந்து நாட்டில் தொடங்க உள்ளன. தற்போது இத்தொடரில் பங்கேற்கும் ஒல்வொரு அணிகளும் தீவிர பயிற்சி மற்றும் திட்டமிடுதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

உலக கோப்பைக்கான இந்திய அணி வருகிற மே 22ந் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்று 25ந் தேதி நியூஸ்லாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் எதிரணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை விரைவில் அவுட் செய்தால் உலக கோப்பை இந்தியாவுக்கு தான் என தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட்.

தற்போது இங்கிலாந்து மைதானங்கள் பேட்டிங்கிற்கு உதவுமாறு தயார் செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்த முறை உலக கோப்பை போட்டிகள் அனைத்தும் அதிக ரன் குவிக்கப்படும் போட்டிகளாக இருக்கும். இது போன்ற மைதானங்களில் பவுலர்களின் பங்கு மிகவும் முக்கியதுவம் வாய்ந்தது.

எதிரணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை சாய்த்தால் இந்திய அணி எளிதில் கோப்பையை கைப்பற்றும் . இதை செய்ய இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். பும்ரா, குல்தீப், சஹல் ஆகியோர் மிடில் ஓவரில் விக்கெட் வீழ்த்துவதில் வல்லவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அணி மாறும் ராபி உத்தப்பா

கேரளா அணிக்கு தாவும் ராபின் உத்தப்பா
உள்ளூர் போட்டிகளில் கர்நாடகா அணிக்கு விளையாடிய ராபின் உத்தப்பா கருத்து வேறுபாடு காரணமாக சௌராஷ்டிரா அணிக்கு தாவினார் தற்போது அங்கிருந்து கேரளா அணிக்கு இடம் பெயர்ந்துள்ளார் இனி வரும் ரஞ்சி போட்டிகளில் கேரள அணிக்காக ராபின் உத்தப்பா விளையாடுவார் https://t.co/KzykucxZi3

இந்திய வீரர்களில் இர்பான் பதான் செய்த முதல் சாதனை!

இந்திய அணியின் அனுபவ ஆல் ரவுண்டர் இர்ஃபான் பதான். இவர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று பல வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாக ஐபிஎல் 2017 சீசனில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். தற்போது கிரிக்கெட் வர்ணணையாளராக பணியாற்றி வருகிறார்.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் டி20 லீக் தொடர் போன்று உலகின் மற்ற நாடுகளிலும் டி20 தொடர்கள் நடைபெற்று வருகின்றனர். இதில் கரீபியன் லீக், பிக் பேஷ் லீக், பாகிஸ்தான் பீரிமியர் லீக், ஆஃப்கானிஸ்தான் பிரீமியர் லீக், பங்களாதேஷ் பிரீமியர் லீக் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவின் ஐபிஎல் தொடரில் விளையாடினாலும், இந்திய வீரர்களை மற்ற நாடுகள் நடத்தும் டி20 லீக்கில் விளையாட அனுமதிப்பது இல்லை பிசிசிஐ. இதனால் இதுவரை எந்த இந்திய வீரரும் வெளிநாட்டு டி20 தொடரில் விளையாடியது இல்லை. ஏன் உலகின் தலை சிறந்த வீரர்களான தோனி விராட் கோலி கூட விளையாடியது இல்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு நடக்கப் போகும் கரீபியன் லீக் தொடர் ஏலத்தில் கலந்து கொள்ளும் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய ஆல் ரவுண்டர் இர்ஃபான் பதான் பெயர் இடம் பெற்றுள்ளது.

கரீபியன் லீக் தொடர் ஏலத்தில் ஏதாவது ஒரு அணி இர்ஃபான் பதானை ஏலத்தில் எடுக்கும் பட்சத்தில் வெளிநாட்டு டி20 தொடரில் விளையாடும் முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார். கரீபியன் தொடரில் விளையாட இர்ஃபான் பதானுக்கு பிசிசிஐ தடையில்லா சான்றிதழை வழங்கியதா என்ற தகவல் வெளியாகவில்லை.

உலக கோப்பை இந்திய அணியின் இரண்டு எக்ஸ் ஃபேக்டர் வீரர்கள் இவர்கள் தான் மைக்கேல் ஹோல்டிங்

வருகிற மே 30ந் தேதி இங்கிலாந்து நாட்டில் தொடங்க உள்ளது 12வது 50 ஓவர் உலக கோப்பை போட்டிகள். இத்தொடரில் இரண்டு முறை உலக சாம்பியன் அணியான இந்தியா ஜுன் 5ந் தேதி தனது முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியுடன் மோதுகிறது.

இந்த முறை உலக கோப்பையை வெல்லும் என கருதப்படும் இரண்டு அணிகளுள் ஒரு அணியாக இந்தியா உள்ளது. இந்திய அணியில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் தலை சிறந்த வீரர்களை கொண்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அணியின் பவுலிங் யூனிட் அகர வளர்ச்சி அடைந்துள்ளது. பும்ரா. சஹல், குல்தீப் ஆகியோர் பவுலிங்கில் அசத்தி வருகின்றன. அதே சமயம் பேட்டிங்கில் விராட் கோலி, ரோகித் சர்மா, தோனி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்திய அணியின் உலக கோப்பை வாய்ப்பு குறித்து வெஸ்ட் இண்டீஸ் லெஜன்ட் மைகேல் ஹோல்டிங் தெரிவித்திருப்பதாவது.,

இந்திலையில் இந்த முறை உலக கோப்பையை கைப்பற்ற இந்திய அணிக்கு முழு தகுதியும் உள்ளது. இந்திய அணியால் உலகின் எந்த மைதானத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். உலக கோப்பை இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் எக்ஸ்-ஃபேக்டராக இருப்பார்கள். அவர்கள் சிறப்பாக விளையாடினாள் உலக கோப்பையை இந்தியா நிச்சயம் வெல்லும் என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு வலிமையாக வருவோம் வாட்சன் அதிரடி பேட்டி

மே 12ந் தேதி நடைபெற்ற ஐபிஎல் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதனால் 4வது முறையாக கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை நழுவ விட்டது சென்னை அணி.

இந்தாண்டு ஐ.பி.எல் தொடர் முழுவதும் சென்னை அணியில் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பலாக அமைந்தது. ரெய்னா, ராயுடு, கேதர் ஜாதவ் போன்ற வீரர்கள் கடைசி வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

சென்னை அணி புள்ளி பட்டியலில் டாப்பில் இருந்ததற்கு தோனியின் பேட்டிங்கும், தாஹிர், ஹர்பஜன், தீபக் சாஹர் போன்றோரின் சிறப்பான பந்து வீச்சும் தான் காரணம்.

வாட்சன் தொடக்கத்தில் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தினாலும், நாக் அவுட் சுற்றின் போது சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக இறுதி போட்டியில் காயத்தை பொருட்படுத்தாமல் ரத்தம் சொட்ட விளையாடினார். இருந்தாலும் ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை.

இந்தாண்டு சென்னை அணிக்கு நிறைகளை விட குறைகளே அதிகம் இருந்தது. பேட்டிங் பீல்டிங்கில் படு சொதப்பல்.

இந்நிலையில் சி.எஸ்.கே வீரர் வாட்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது., அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வலிமையாக மீண்டும் வருவோம்.

இரண்டு வயது தமிழக சிறுமி உலக சாதனை பாராட்டி தள்ளும் பிரபலங்கள்

திருச்சியை சேர்ந்த 2 வயது சிறுமி ஆராதனா. சிறுமியின் பெற்றோர் சகாய விஜய் ஆனந்த்-ஜெயலட்சுமி ஆவர். சகாய விஜய் ஆனந்த் திருச்சி ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக உள்ளார்.

இவர் விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் உள்ளவர். இவர் தனது குழந்தை ஆராதைாவுக்கு கடந்த மூன்று மாதங்களாக ராக்போர்ட் வில்வித்தை கழக பயிற்சியாளர் ராஜதுரை மூலம் வில்வித்தை பயிற்சி அளித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று திருச்சி ரெயில்வே மண்டபத்தில் வில்வித்தை சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல பிரபலங்களும் கலந்து கொன்டனர்.

இப்போட்டியில் கலந்து கொண்ட 2 வயது சிறுமி ஆராதனா, 10 மீட்டர் தொலைவில் இருந்த இலக்கை நோக்கி தொடர்ந்து 1 மணி நேரம் இடைவெளியின்றி அம்புகளை எய்தார். 1 மணி நேரத்தில் 161 அம்புகளை எய்து 355 புள்ளிகளை பெற்றார். இது உலக சாதனை ஆகும். சாதனை செய்த சிறுமியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

எப்போதும் 2 வயது குழந்தைக்கு 3 மீட்டர் தான் இலக்கு நிர்ணயிக்கபடும். ஆனால் சிறுமி ஆராதனா 10 மீட்டர் இலக்கை எந்த வித சிரமம் இன்றி அம்புகளை எய்து ஆச்சர்யபடுத்தியுள்ளார்.

உலக கோப்பையில் இந்த இரு வீரர்களுக்கு பந்து வீசுவது மிக கடினம் புவனேஷ்வர் குமார் பேட்டி

தற்போதைய கிரிக்கெட் உலகில் தலைசிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருப்பவர் புவனேஷ்வர் குமார். இவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இரண்டாவது முறையாக இடம் பிடித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடர் புவனேஷ்வர் குமாருக்கு சுமாராகவே அமைந்தது. தற்போது இங்லாந்தில் நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிகளுக்கு தயாராகி வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்தில் உள்ள மைதாஙை்கள் அனைத்தும் தட்டையாக(பிளாட் பிட்ச்) பேட்ஸ்மேனுக்கு ஆதரவாக மாற்றப்பட்டுள்ளது. பிட்சில் இருந்து எந்த ஒரு உதவியும் பந்து வீச்சாளர்க்கு கிடைக்காது. இதனால் இங்கிலாந்து மைதாஙை்களில் பந்து வீசுவது என்பது மிகவும் சவாலான ஒன்று.

இந்நிலையில் இங்கிலாந்து மைதாங்களில் பந்து வீசுவது குறித்து புவனேஷ்வர் குமார் பேட்டி ஒன்றில் கூறியதாவது.,

எனக்கு இங்கிலாந்தில் பந்து வீசுவது மிகவும் பிடிக்கும். அங்கு பந்து ஸ்விங் ஆகும். அதுதான் என்பவம். ஆனால் தற்போது மைதானங்கள் தட்டையாக்கபட்டு விட்டன. பந்து வீசுவது கடினம் தான். இந்திய அணியில் உலக தரம் வாய்ந்த பவுலர்கள் உள்ளனர். எங்களால் போட்டியை தொடக்கம் முதல் முடிவு வரை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அங்குள்ள சூழ்நிலையை பார்த்து திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படும். கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் பவுலிங் மேம்பட்டு உள்ளது. இந்திய அணியின் பவுலர்கள் எந்த வகை மைதானத்திலும் சிறப்பாக செயல்பட முடியும். என்னை பொறுத்த வரை உலக கோப்பை போட்டிகளில் டேவிட் வார்னர் மற்றும் ஆன்ரே ரஸல் என்ற இரு வீரர்களுக்கு பந்து வீசுவது மிக கடினம். அவர்கள் தற்போது நல்ல ஃபார்மில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

லேட்டா வந்தா தோனி தரும் தண்டனை இதுதான்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மன நல பயிற்சியாளர் பேடி அப்டன். இவர் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார்.

இவர் சமீபத்தில் எழுதி வெளியிட்ட “தி பேர்ஃபுட் கோச்” என்ற புத்தகத்தில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் எப்போதும் பாதுகாப்பற்ற மனநிலையை கொண்டிருந்தார் என குறிப்பிட்டு இருந்தார். இது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருந்தது.

தற்போது தோனி அணி நேர்காணல் மற்றும் பியிற்சிக்கு தாமதமாக வந்தால் என்ன தண்டனை தருவார் என கூறியுள்ளார் பேடி அப்டன்.

தோனி எந்த சூழ்நிலையிலும் அமைதியாகவும், நிலையாக இருக்கும் தன்மை உடையவர். இது தான் தோனியிடம் இருக்கும் தனித்தன்மை. தோனியை பார்த்து மற்ற அணி வீரர்களும் இதை கற்று கொள்கின்றனர்.

நான் இந்திய அணியில் மன நல பயிற்சியாளராக சேர்ந்த போது அணில் கும்ளே டெஸ்ட் அணி கேப்டன் மற்றும் தோனி ஒரு நாள் அணி கேப்டனாக இருந்தார்.

அப்போது டெஸ்ட் அணி கேப்டனாக இருந்த கும்ளே பயிற்சி மற்றும் அணி நேர்காணலுக்கு தாமதமாக வரும் வீரர்களுக்கு மட்டும் தண்டனையாக ரூ.10000 அபராதம் விதித்தார்.

இந்த யோசனையை ஒருநாள் அணியிலும் அமல்படுத்தினால் நன்றாக இருக்கும் என தோனியிடம் கூறினேன். தோனி இதனை சிறு மாற்றத்துடன் அமல்படுத்தினார். தோனி பயிற்சி மற்றும் அணி நேர்காணலுக்கு யாராவது ஒரு வீரர் தாமதமாக வந்தால், அணியில் இருக்கும் அனைவருக்கும் ரூ.10000 அபராதம் என அறிவித்தார். இப்படி செய்தால் தான் யாரும் தாமதமாக வர மாட்டார்கள் என கூறினார்.

ஐபிஎல்லில் மேட்ச் ஃபிக்சிங் நடப்பது உண்மை தான் ரங்கராஜ் பாண்டே வெளியிட்ட அதிரடி வீடியோ

2019ம் ஆண்டுக்கான ஐபிஎல் இறுதி போட்டி மே 12ந் தேதி நடந்து முடிந்தது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி 4வது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.

இப்போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றதும் மேட்ச் ஃபிக்சிங் நடந்திருக்கிறது என ரசிகர்கள் கூற தொடங்கினர். தோனிக்கு நடுவர் ரன் அவுட் வழங்கியது, ஷேன் வாட்சன் தேவையில்லாமல் ரன் ஓடி ரன் அவுட் ஆனது, ஹர்பஜன் சிங் பதில் ஷ்ரதுல் தாகூர் களம் இறக்கப்பட்டது போன்ற நிகழ்வுகள் சந்தேகத்தை வலுப்படுத்துவதாகவும் கூறினர்.

Rangaraj pandey

இந்நிலையில் பிரபல செய்தியாளரும் மற்றும் செய்தி தொகுப்பாளருமான ரங்கராஜ் பாண்டே ஐபிஎல் என்பது மேட்ச் பிக்சிங் தான் எனக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது.,

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் மேட்ச் ஃபிக்சிங் தான். போட்டியில் யார் வெற்றி பெற வேண்டும், எப்படி வெற்றி பெற வேண்டும், முதல் பந்தில் இருந்து 20வது ஓவரின் கடைசி பந்து வரை தெளிவான திரைக்கதை அமைத்து நடத்தப்படுகிறது. ஒரு போட்டி 20 ஓவர் வரை நடந்தால் மட்டுமே தான் அந்த போட்டிக்கான வர்த்தகம் பாதிக்கப்படாது.

இறுதி போட்டியில் மும்பை டெல்லி அணிகள் மோதினால் யானையுடன் எலி மோதியது போல் இருக்கும். இப்போட்டியை பார்க்க மக்கள் அதிகம் விரும்ப மாட்டார்கள். பார்வையாளர்கள் குறைவாக தான் இப்போட்டிக்கு இருக்கும். இதனால் இப்போட்டிக்கான வர்த்தகம் தானாக பாதிக்கப்படும். அதுவே சென்னை மும்பை அணிகள் மோதினாள் அதிக வர்த்தகம் மற்றும் அதிக லாபம் கிடைக்கும்.

இங்கு மேட்ச் ஃபிக்சிங் சில வீரர்களிடம் மட்டுமே சொல்லப்படுகிறது. சிலருக்கு உத்தரவு மட்டுமே பிறபிக்கப்டுகிறது. பணம் சிலருக்கு நேரடியாகவும், சதவீதமாகவும், பங்காகவும் தரப்படுகிறது. இங்கு மேட்ச் ஃபிக்சிங் குறியீடுகள் மூலம் நடக்கிறது. போட்டிகள் உண்மையாகவே நடப்பது போல் கட்டமைக்கபடுகிறது. அதுதான் ஐபிஎல் ஸ்பெஷல் எனக் கூறியுள்ளார்.

தோனி தந்த டிப்ஸ் பலமுறை தவறாக முடிந்துள்ளது குல்தீப் யாதவ் பரபரப்பு பேட்டி

தோனி தரும் டிப்ஸ் பல முறை தவறாக முடிந்துள்ளது என இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.

தற்போதைய கிரிக்கெட்டர்களில் அதிகம் கிரிக்கெட் ப்ரைன் உடையவர் தோனி. குல்தீப் யாதவ் பந்து வீசும் போது பல முறை விக்கெட் எடுக்க டிப்ஸ் கொடுத்துள்ளார் தோனி . அதன் மூலம் விக்கெட்டும் எடுத்துள்ளார் குல்தீப்.

இந்நிலையில், 2018ம் ஆண்டு சிறப்பாக விளையாடிய கிரிக்கெட்டர்களுக்கு நேற்று சியாட் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறந்த செயல் திறன் வீரருக்கான விருது குல்தீப் யாதவ்விற்கு வழங்கப்பட்டது. இவ்விருதை பெற்ற பின் தோனி குறித்து குல்தீப் யாதவ் கூறியதாவது.,

போட்டியின் போது தோனி தரும் பல டிப்ஸ் தவறாக முடிந்துள்ளது. ஆனால் அதை பற்றி தோனியிடம் கூற முடியாது. தோனி எப்போதும் ஓவர் முடிந்த பின் தான் பவுலர்களை சந்தித்து பேசுவார். நடுவில் பேச மாட்டார். எப்போதாவது தேவைப்பட்டால் மட்டுமே ஓவரின் நடுவில் தன் கருத்தை கூறுவார் என குல்தீப் தெரிவித்துள்ளார்.

CSKவில் களையெடுப்பு அவசியம் பிளெமிங் அதிரடி பேட்டி

ஐ.பி.எல் 2019ன் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதனால் நான்காவது முறையாக ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ் அணி.

சி.எஸ்.கே என்றாலே வயதானவர்கள் அணி. அணியில் இருக்கும் அநேக வீரர்களுக்கும் ஏறக்குறைய 35 வயது இருக்கும். இதனால் சி.எஸ.கே அணியை ஃபாதர்ஸ் ஆர்மி, ஓல்டு டீம் என சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

இதனால் பீல்டிங்கில் மோசமாக செயல்பட்டனர் சென்னை அணியினர். ரெய்னா, வாட்சன் போன்ற வீரர்களும் பல கேட்சுகளை கோட்டைவிட்டனர். பிற வீரர்களும் தங்கள் பங்கிற்கு பல கேட்சுகளை கோட்டைவிட்டுள்ளனர்.

இந்தாண்டு சென்னை அணியில் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடிய வீரர் தோனி மட்டும் தான். ரெய்னா, வாட்சன், டுபிளசிஸ், ராயுடு போன்ற அனுபவ வீரர் ஏதாவது ஒரு ஆட்டத்தில் மட்டுமே ஜொலித்தனர்.

இந்நிலையில் சி.எஸ்.கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியிருப்பதாவது., எங்கள் அணி மிகவும் வயதானவர்கள் அணி என்பதை புரிந்து கொண்டோம். வீரர்கள் தங்களை நிலை படுத்தி கொள்ள அவகாசம் அளித்துள்ளோம். சி.எஸ்.கே அணியில் களையெடுப்பு தேவைப்படுகிறது.

தோனி உலக கோப்பை சென்று வந்தவுடன் அடுத்த வருட தொடருக்கான புதிய சி.எஸ்.கே அணி கட்டமைக்கும் பணி தொடங்கி விடும். இந்த அணியில் அதிகம் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அதிகம் வயதான வீரர்கள் இருக்க மாட்டார்கள். சரியான கலவையில் புதிய அணி உருவாக்கப்படும் என தெரிவித்தார்.

மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார் தோனி இதுவரை அப்படி பார்த்ததில்லை

இதுவரை மும்பை அணியிடம் பெற்ற தோல்லிகளுக்கு பதிலடி தரும் விதமாக, நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் மும்பையை வீழ்த்தி சென்னை அணி நான்காவது முறையாக கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் கடைசி ஓவரில் 9 ரன்களை அடிக்க முடியாமல் மும்பை அணியிடம் தோல்வியடைந்தது சென்னை அணி. ஐ.பி.எல் கோப்பையை 4வது முறையாக கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ் அணி.

நேற்றைய போட்டியில் தோனி எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். இதனால் தோனியால் கடைசி வரை நின்று ஆடி அணியை வெற்றி பெற செய்ய முடியவில்லை. இதனால் போட்டி முடிந்த பின்னும், பேட்டியளித்த போதும் மிகவும் சோகமாக தெரிந்தார் தோனி. சி.எஸ்.கே அணி தோல்வியால் தோனியின் மனைவியும் கண்கலங்கினார்.

இந்நிலையில் கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ரேக்கர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது., போட்டி முடிந்த பின் தோனியிடம் பேசினேன். தோனி மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். இதற்கு முன் தோனியை பார்த்தது இல்லை. இதனை பார்த்த என் இதயம் தோனியிடம் சென்றது.

தோனிக்கு ரன் அவுட் கொடுத்த மூனாவது அம்பயருக்கு சாபமிட்ட 7 வயது சிறுவன்

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் 12வது சீசனின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. இதன் மூலம் 4வது முறையாக ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றியது மும்பை அணி.

நேற்றைய போட்டியில் தோனி இஷான் கிஷனால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதனை ரீப்ளேவில் பார்த்த மூன்றாவது நடுவர் தோனி அவுட் என தீர்ப்பு கொடுத்தார்.

மூன்றாவது நடுவரின் தீர்ப்பை பார்த்த சென்னை ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். மேலும் தோனி நாட் அவுட் என்றும், நடுவரின் தீர்ப்பு தவறானது என்றும் சென்னை அணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தோனி அவுட் குறித்து 7 வயது சிறுவன் அழுது கொண்டே பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

இந்த வீடியோவில், அச்சிறுவன் தோனி அவுட்டே இல்லை என்றும் சும்மானா அவுட்டுன்னு கொடுக்கறான். மூனாவது அம்பயர் தூக்கு மாட்டி செத்துடுவான் என்றும் அழுது கொண்டே கூறும் போது அச்சிறுவன் தாய் சமாதானப்படுத்துகிறார்.