லக்ஷ்மிபாம் படத்தில் இருந்து விலகினார் ராகவா லாரன்ஸ்

காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக்கான லக்ஷ்மிபாம் படத்தில் இருந்து விலகுவதாக இயக்குனர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு ராகவா லாரன்ஸ், சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தமிழில் செம ஹிட் அடித்த படம் காஞ்சனா. தமிழில் இப்படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் லக்ஷ்மிபாம் என்ற பெயரில் இப்படத்தை ரீமேக் செய்கிறார் ராகவா லாரன்ஸ்.

இப்படத்தை லாரன்ஸ் இயக்க முக்கிய கதாபாத்திரங்களில் அக்ஷய் குமார், கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கின்றனர். லக்ஷமிபாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நேற்று அக்ஷய் குமார் தனது டுவிட்டர் பக்கததில் வெளியிட்டார். இந்நிலையில் இப்படத்தில் இருந்து விலகுவதாக லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

இதற்கு காரணமாய் அவர் கூறியது., மதியாதார் தலைவாசல் மிதியாதே என தமிழில் ஒரு பழமொழி உண்டு. இந்த உலகத்தில் ஒரு மனிதனுக்கு பணம், புகழை விட சுயமரியாதை மிகவும் முக்கியம். அதற்கு பங்கம் வந்துவிட்டது. அதனால் தான் லக்ஷ்மிபாம் படத்தில் இருந்து நான் விலகுகிறேன்.

நேற்று லக்ஷ்மிபாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை எனக்கு தெரியாமல் வெளியிட்டுள்ளனர். மிகவும் சுமாராக இருந்தது. இப்படத்தின் இயக்குனர் நான். எனக்கு மூன்றாவது நபர் கூறி தான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது தெரிய வேண்டியுள்ளது. இது எனக்கு மிகவும் வலியையும் வருத்தத்தையும் தந்துள்ளது.

என்னால் இப்படத்தை பாதியில் நிறுத்த முடியும். நான் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்து போடவில்லை. ஆனால் நான் அப்படி செய்யமாட்டேன். அது தொழில் தர்மமும் இல்லை. நான் அக்ஷய் குமார் சார் மீது அதிக மரியாதை வைத்துள்ளேன். நான் லக்ஷ்மிபாம் படத்தின் மொத்த ஸ்கிரிப்டையும் அவரை நேரில் சந்தித்து கொடுத்துவிட்டு படத்தில் இருந்து முழுமையாக விலகி விடுவேன் என தெரிவித்துள்ளார்.

‘இந்தியன் 2’ – வில்லன் வேடத்தில் அக்‌ஷய்குமார்?

கமல்ஹாசன் நடித்து 1996-ல் வெளியாகி வசூல் குவித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் ‘இந்தியன்-2’ என்ற பெயரில் தயாராகிறது. 

இதில் கமல்ஹாசன் வயதான தோற்றத்திலும், இளமையாகவும் வருகிறார். வெளிநாட்டு மேக்கப் கலைஞர்களை வைத்து வயதான தோற்றத்தை உருவாக்கி உள்ளனர்.

இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் இறுதி காட்சி வெளிநாட்டில் முடிவடையும். இரண்டாம் பாகம் தைவானில் தொடங்கி இந்தியாவுக்கு வருவதுபோல் திரைக்கதை அமைத்துள்ளனர். தைவான் காட்சிகளில் பே சூஸி நடிக்கிறார்.

இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரிடம் பேசி வருகிறார்கள். இவர் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக வந்தார். இதனால் வட இந்தியாவிலும் படம் நல்ல வசூல் பார்த்தது. இந்தியன்-2 படத்தில் நடிப்பது குறித்து இன்னும் அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனாலும் படக்குழுவினர் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள்.