பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் இரண்டு வயது மகள் திடீர் மரணம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் 27 வயதான பேட்ஸ்மேன் அஷிப் அலி. இவரது இரண்டு வயது மகன் நூர் பாத்திமா புற்று நோயால் பாதிக்க பட்டிருப்பதாகவும், மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்ல உள்ளதாகவும் கடந்த ஏப்ரல் 22ந் தேதி டுவிட் செய்திருந்தார் அஷிப் அலி.

கடந்த ஒரு மாத காலமாக நூர் பாத்திமாவுக்கு அமெரிக்காவில் உள்ள பிரபல புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று நூர் பாத்திமா புற்றுநோய் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். தன் மகள் இறந்த செய்தியை கேட்ட அஷிப் அலி தற்போது மனம் உடைந்து உள்ளார். உடனடியாக இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஷிப் அலி தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி போட்டியில் 54 ரன்களை குவித்திருந்தார். இந்நிலையில் தன் மகன் இறந்த செய்தியை கேட்ட அஷிப் அலி இங்கிலாந்தில் இருந்து உடனடியாக அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்.