உலக கோப்பையில் மிகவும் ஆபத்தான அணி இதுதான் பிரைன் லாரா எச்சரிக்கை

அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த 50 ஓவர் உலக கோப்பை போட்டிகள் வருகிற மே 30ந் தேதி தொடங்க உள்ளது. 27 ஆண்டுகளுக்கு பின் இம்முறை உலக கோப்பையில் ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மோத உள்ளன.

இம்முறை உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிகளில் ஒன்று தான் வெல்லும் என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. பேலும் மேற்கு இந்திய தீவுகள், ஆஸ்ரேலியா, நியூஸ்லாந்து போன்ற அணிகள் கடும் சாவால் அளிக்கும் எனவும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் ஆஸ்ரேலியா அணி தான் மிகவும் ஆபத்தான அணியாக இருக்கும் என மேற்கு இந்திய அணியின் லெஜன்ட் பிரைன் லாரா கூறியுள்ளார். அவர் கூறி உள்ளதாவது.,

வார்னர் மற்றும் ஸ்மித்தின் வருகை அந்த அணிக்கு வலு சேர்த்துள்ளது. அவர்களின் நிலைதன்மை மற்றும் ஃபார்ம் சிறப்பாக உள்ளது. சமீபத்தில் ஆஸ்ரேலியா அணி சிறப்பாக விளையாடி உள்ளது. தற்போது உள்ள ஆஸ்ரேலிய அணி 1999 மற்றும் 2003ல் உள்ள அணி போன்று வலிமையானதாக இல்லாவிட்டாலும், அவர்களை குறைத்து எடை போட முடியாது. அவர்கள் நடப்பு சாம்பியன். உலக கோப்பை என்று வந்து விட்டால் அந்த அணி மிகவும் ஆபத்தான அணியாக மாறிவிடும். இந்த முறையில் அப்படித்தான் இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.