இந்திய வீரர்களில் இர்பான் பதான் செய்த முதல் சாதனை!

இந்திய அணியின் அனுபவ ஆல் ரவுண்டர் இர்ஃபான் பதான். இவர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று பல வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாக ஐபிஎல் 2017 சீசனில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். தற்போது கிரிக்கெட் வர்ணணையாளராக பணியாற்றி வருகிறார்.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் டி20 லீக் தொடர் போன்று உலகின் மற்ற நாடுகளிலும் டி20 தொடர்கள் நடைபெற்று வருகின்றனர். இதில் கரீபியன் லீக், பிக் பேஷ் லீக், பாகிஸ்தான் பீரிமியர் லீக், ஆஃப்கானிஸ்தான் பிரீமியர் லீக், பங்களாதேஷ் பிரீமியர் லீக் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவின் ஐபிஎல் தொடரில் விளையாடினாலும், இந்திய வீரர்களை மற்ற நாடுகள் நடத்தும் டி20 லீக்கில் விளையாட அனுமதிப்பது இல்லை பிசிசிஐ. இதனால் இதுவரை எந்த இந்திய வீரரும் வெளிநாட்டு டி20 தொடரில் விளையாடியது இல்லை. ஏன் உலகின் தலை சிறந்த வீரர்களான தோனி விராட் கோலி கூட விளையாடியது இல்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு நடக்கப் போகும் கரீபியன் லீக் தொடர் ஏலத்தில் கலந்து கொள்ளும் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய ஆல் ரவுண்டர் இர்ஃபான் பதான் பெயர் இடம் பெற்றுள்ளது.

கரீபியன் லீக் தொடர் ஏலத்தில் ஏதாவது ஒரு அணி இர்ஃபான் பதானை ஏலத்தில் எடுக்கும் பட்சத்தில் வெளிநாட்டு டி20 தொடரில் விளையாடும் முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார். கரீபியன் தொடரில் விளையாட இர்ஃபான் பதானுக்கு பிசிசிஐ தடையில்லா சான்றிதழை வழங்கியதா என்ற தகவல் வெளியாகவில்லை.

உலக கோப்பை இந்திய அணியின் இரண்டு எக்ஸ் ஃபேக்டர் வீரர்கள் இவர்கள் தான் மைக்கேல் ஹோல்டிங்

வருகிற மே 30ந் தேதி இங்கிலாந்து நாட்டில் தொடங்க உள்ளது 12வது 50 ஓவர் உலக கோப்பை போட்டிகள். இத்தொடரில் இரண்டு முறை உலக சாம்பியன் அணியான இந்தியா ஜுன் 5ந் தேதி தனது முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியுடன் மோதுகிறது.

இந்த முறை உலக கோப்பையை வெல்லும் என கருதப்படும் இரண்டு அணிகளுள் ஒரு அணியாக இந்தியா உள்ளது. இந்திய அணியில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் தலை சிறந்த வீரர்களை கொண்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அணியின் பவுலிங் யூனிட் அகர வளர்ச்சி அடைந்துள்ளது. பும்ரா. சஹல், குல்தீப் ஆகியோர் பவுலிங்கில் அசத்தி வருகின்றன. அதே சமயம் பேட்டிங்கில் விராட் கோலி, ரோகித் சர்மா, தோனி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்திய அணியின் உலக கோப்பை வாய்ப்பு குறித்து வெஸ்ட் இண்டீஸ் லெஜன்ட் மைகேல் ஹோல்டிங் தெரிவித்திருப்பதாவது.,

இந்திலையில் இந்த முறை உலக கோப்பையை கைப்பற்ற இந்திய அணிக்கு முழு தகுதியும் உள்ளது. இந்திய அணியால் உலகின் எந்த மைதானத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். உலக கோப்பை இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் எக்ஸ்-ஃபேக்டராக இருப்பார்கள். அவர்கள் சிறப்பாக விளையாடினாள் உலக கோப்பையை இந்தியா நிச்சயம் வெல்லும் என அவர் தெரிவித்துள்ளார்.

லேட்டா வந்தா தோனி தரும் தண்டனை இதுதான்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மன நல பயிற்சியாளர் பேடி அப்டன். இவர் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார்.

இவர் சமீபத்தில் எழுதி வெளியிட்ட “தி பேர்ஃபுட் கோச்” என்ற புத்தகத்தில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் எப்போதும் பாதுகாப்பற்ற மனநிலையை கொண்டிருந்தார் என குறிப்பிட்டு இருந்தார். இது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருந்தது.

தற்போது தோனி அணி நேர்காணல் மற்றும் பியிற்சிக்கு தாமதமாக வந்தால் என்ன தண்டனை தருவார் என கூறியுள்ளார் பேடி அப்டன்.

தோனி எந்த சூழ்நிலையிலும் அமைதியாகவும், நிலையாக இருக்கும் தன்மை உடையவர். இது தான் தோனியிடம் இருக்கும் தனித்தன்மை. தோனியை பார்த்து மற்ற அணி வீரர்களும் இதை கற்று கொள்கின்றனர்.

நான் இந்திய அணியில் மன நல பயிற்சியாளராக சேர்ந்த போது அணில் கும்ளே டெஸ்ட் அணி கேப்டன் மற்றும் தோனி ஒரு நாள் அணி கேப்டனாக இருந்தார்.

அப்போது டெஸ்ட் அணி கேப்டனாக இருந்த கும்ளே பயிற்சி மற்றும் அணி நேர்காணலுக்கு தாமதமாக வரும் வீரர்களுக்கு மட்டும் தண்டனையாக ரூ.10000 அபராதம் விதித்தார்.

இந்த யோசனையை ஒருநாள் அணியிலும் அமல்படுத்தினால் நன்றாக இருக்கும் என தோனியிடம் கூறினேன். தோனி இதனை சிறு மாற்றத்துடன் அமல்படுத்தினார். தோனி பயிற்சி மற்றும் அணி நேர்காணலுக்கு யாராவது ஒரு வீரர் தாமதமாக வந்தால், அணியில் இருக்கும் அனைவருக்கும் ரூ.10000 அபராதம் என அறிவித்தார். இப்படி செய்தால் தான் யாரும் தாமதமாக வர மாட்டார்கள் என கூறினார்.

ஐபிஎல்லில் மேட்ச் ஃபிக்சிங் நடப்பது உண்மை தான் ரங்கராஜ் பாண்டே வெளியிட்ட அதிரடி வீடியோ

2019ம் ஆண்டுக்கான ஐபிஎல் இறுதி போட்டி மே 12ந் தேதி நடந்து முடிந்தது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி 4வது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.

இப்போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றதும் மேட்ச் ஃபிக்சிங் நடந்திருக்கிறது என ரசிகர்கள் கூற தொடங்கினர். தோனிக்கு நடுவர் ரன் அவுட் வழங்கியது, ஷேன் வாட்சன் தேவையில்லாமல் ரன் ஓடி ரன் அவுட் ஆனது, ஹர்பஜன் சிங் பதில் ஷ்ரதுல் தாகூர் களம் இறக்கப்பட்டது போன்ற நிகழ்வுகள் சந்தேகத்தை வலுப்படுத்துவதாகவும் கூறினர்.

Rangaraj pandey

இந்நிலையில் பிரபல செய்தியாளரும் மற்றும் செய்தி தொகுப்பாளருமான ரங்கராஜ் பாண்டே ஐபிஎல் என்பது மேட்ச் பிக்சிங் தான் எனக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது.,

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் மேட்ச் ஃபிக்சிங் தான். போட்டியில் யார் வெற்றி பெற வேண்டும், எப்படி வெற்றி பெற வேண்டும், முதல் பந்தில் இருந்து 20வது ஓவரின் கடைசி பந்து வரை தெளிவான திரைக்கதை அமைத்து நடத்தப்படுகிறது. ஒரு போட்டி 20 ஓவர் வரை நடந்தால் மட்டுமே தான் அந்த போட்டிக்கான வர்த்தகம் பாதிக்கப்படாது.

இறுதி போட்டியில் மும்பை டெல்லி அணிகள் மோதினால் யானையுடன் எலி மோதியது போல் இருக்கும். இப்போட்டியை பார்க்க மக்கள் அதிகம் விரும்ப மாட்டார்கள். பார்வையாளர்கள் குறைவாக தான் இப்போட்டிக்கு இருக்கும். இதனால் இப்போட்டிக்கான வர்த்தகம் தானாக பாதிக்கப்படும். அதுவே சென்னை மும்பை அணிகள் மோதினாள் அதிக வர்த்தகம் மற்றும் அதிக லாபம் கிடைக்கும்.

இங்கு மேட்ச் ஃபிக்சிங் சில வீரர்களிடம் மட்டுமே சொல்லப்படுகிறது. சிலருக்கு உத்தரவு மட்டுமே பிறபிக்கப்டுகிறது. பணம் சிலருக்கு நேரடியாகவும், சதவீதமாகவும், பங்காகவும் தரப்படுகிறது. இங்கு மேட்ச் ஃபிக்சிங் குறியீடுகள் மூலம் நடக்கிறது. போட்டிகள் உண்மையாகவே நடப்பது போல் கட்டமைக்கபடுகிறது. அதுதான் ஐபிஎல் ஸ்பெஷல் எனக் கூறியுள்ளார்.

தோனி தந்த டிப்ஸ் பலமுறை தவறாக முடிந்துள்ளது குல்தீப் யாதவ் பரபரப்பு பேட்டி

தோனி தரும் டிப்ஸ் பல முறை தவறாக முடிந்துள்ளது என இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.

தற்போதைய கிரிக்கெட்டர்களில் அதிகம் கிரிக்கெட் ப்ரைன் உடையவர் தோனி. குல்தீப் யாதவ் பந்து வீசும் போது பல முறை விக்கெட் எடுக்க டிப்ஸ் கொடுத்துள்ளார் தோனி . அதன் மூலம் விக்கெட்டும் எடுத்துள்ளார் குல்தீப்.

இந்நிலையில், 2018ம் ஆண்டு சிறப்பாக விளையாடிய கிரிக்கெட்டர்களுக்கு நேற்று சியாட் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறந்த செயல் திறன் வீரருக்கான விருது குல்தீப் யாதவ்விற்கு வழங்கப்பட்டது. இவ்விருதை பெற்ற பின் தோனி குறித்து குல்தீப் யாதவ் கூறியதாவது.,

போட்டியின் போது தோனி தரும் பல டிப்ஸ் தவறாக முடிந்துள்ளது. ஆனால் அதை பற்றி தோனியிடம் கூற முடியாது. தோனி எப்போதும் ஓவர் முடிந்த பின் தான் பவுலர்களை சந்தித்து பேசுவார். நடுவில் பேச மாட்டார். எப்போதாவது தேவைப்பட்டால் மட்டுமே ஓவரின் நடுவில் தன் கருத்தை கூறுவார் என குல்தீப் தெரிவித்துள்ளார்.

மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார் தோனி இதுவரை அப்படி பார்த்ததில்லை

இதுவரை மும்பை அணியிடம் பெற்ற தோல்லிகளுக்கு பதிலடி தரும் விதமாக, நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் மும்பையை வீழ்த்தி சென்னை அணி நான்காவது முறையாக கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் கடைசி ஓவரில் 9 ரன்களை அடிக்க முடியாமல் மும்பை அணியிடம் தோல்வியடைந்தது சென்னை அணி. ஐ.பி.எல் கோப்பையை 4வது முறையாக கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ் அணி.

நேற்றைய போட்டியில் தோனி எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். இதனால் தோனியால் கடைசி வரை நின்று ஆடி அணியை வெற்றி பெற செய்ய முடியவில்லை. இதனால் போட்டி முடிந்த பின்னும், பேட்டியளித்த போதும் மிகவும் சோகமாக தெரிந்தார் தோனி. சி.எஸ்.கே அணி தோல்வியால் தோனியின் மனைவியும் கண்கலங்கினார்.

இந்நிலையில் கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ரேக்கர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது., போட்டி முடிந்த பின் தோனியிடம் பேசினேன். தோனி மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். இதற்கு முன் தோனியை பார்த்தது இல்லை. இதனை பார்த்த என் இதயம் தோனியிடம் சென்றது.

இந்த ஆண்டுடன் தோனி ஓய்வு சூசகமாக பேட்டி அளித்த ரெய்னா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிரந்தர கேப்டன் எம்.எஸ் தோனி. அவர் கடந்த 10 ஆண்டுகளாக சென்னை அணியை வழிநடத்தி வருகிறார் தோனி. இதில் மூன்று முறை ஐ.பி.எல் பட்டத்தையும், இரண்டு முறை சாம்பியன் லீக் டி20 பட்டத்தையும் சி.எஸ்.கே அணிக்கு பெற்று தந்துள்ளார். அனைத்து ஐ.பி.எல் சீசன்களிலும் பிளே ஆஃப் சென்ற ஒரே அணி என்ற பெருமையையும் சி.எஸ்.கே அணிக்கு தோனி பெற்று தந்துள்ளார் தோனி.

சர்வதேச போட்டிகள் என்றாலும், ஐ.பி.எல் என்றாலும் தோனி காயம் காரணமாக ஓய்வு பெறுவது அரிது. ஆனால் நடப்பு ஐ.பி.எல் தொடரில் இரண்டு போட்டிகளில் காயம் காரணமாக ஒய்வு எடுத்துள்ளார்.

தோனி இல்லாத இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி படு மோசமாக தோல்வியடைந்தது. இந்த இரண்டு போட்டிகளிலும் ரெய்னாவின் கேப்டன்சி மோசமாக இருந்தது. இந்த தோல்விகள் மூலம் சென்னை அணியில் தோனியின் இருப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தது சென்னை அணி.

தோனி ஓய்வில் இருந்து வந்த அடுத்த போட்டியிலே டெல்லி அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. இந்நிலையில் தோனி நடப்பு ஐ.பி.எல் தொடர் முடிந்ததும் தோனி ஓய்வு பெற போவதாக ரெய்னா சூசகமாக தெரிவித்துள்ளார்.

ரெய்னா இது குறித்து கூறியதாவது., தோனிக்கு டி20 போட்டிகள் அத்துபடி. மைதானத்தை ஆராய்ந்து டாஸை தேர்ந்தெடுப்பதில் இருந்து, எந்த பவுலரை அடிக்க வேண்டும், எந்த பவுலரை அடிக்க கூடாது, எப்போது அடிக்க வேண்டும், எப்போது களம் இறங்க வேண்டும் என அனைத்தும் அவருக்கு தெரியும்.

நான் கடந்த இரண்டு ஆண்டாக பேட்டிங்கில் சிறப்பாக விளையாடுகிறேன். சென்னை அணியின் நம்பிக்கை அறிவுரையாளராக சிறப்பாக செயல்படுகிறேன். குறிப்பாக தோனி முடித்து கொள்கிறார். அடுத்த ஆண்டு முதல் என்னை வேறொரு பொறுப்பில் பார்ப்பீர்கள். தோனியின் திறமை எனக்கு தேவைப்படுகிறது. அதை நான் லளர்த்து சொன்ன வேண்டும் என தோனியின் ஓய்வு குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார்.

நான் தோனியிடம் இருந்து இதை எதிர் பார்க்கவில்லை அதிர்ந்து போயிட்டேன் கங்குலி பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் தலை சிறந்த கேப்டன்களுள் ஒருவர் சவரவ் கங்குலி. இவர் 2003 உலக கோப்பையில் இந்திய அணியை இறுதி போட்டி வரை அழைத்து சென்றார். மேலும் 2000ம் ஆண்டு மேட்ச் பிக்சிங் புகாருக்கு பிறகு இந்திய அணியை கட்டடமைப்பும் செய்தவர்.

கங்குலி தோனியின் கேப்டன்சிபின் கீழ் ஒரு சில போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். இந்நிலையின் தோனியின் கேப்டன்சி குறித்தும், கடந்த 2008ம் ஆண்டு ஓய்வு பெறும் போது, ஆஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், கடைசி ஒரு சில ஓவர்களை மட்டும் தோனி தன்னை கேப்டனாக செயல்பட சொன்னதை பற்றி கங்குலி தற்போது கூறியுள்ளார்.

கங்குலி கூறியதாவது, தோனி கேப்டனாக செயல்பட சொன்னது 2008 ஆஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி, இந்த நிகழ்வு நடந்து 10 வருஷம் இருக்கும். கடைசி சில ஓவர் மட்டும் கேப்டனாக இருக்க சொன்னார். நான் தோனியிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை. ஒரு நொடியில் அதிர்ந்து போயிட்டேன். முதலில் மறுத்தேன். பின் அன்பு கட்டளையால் அதை செய்து கொடுத்தேன்.

NAGPUR, INDIA – NOVEMBER 10: Sourav Ganguly of India is carried by team mates VVS Laxman and Harbhajan Singh during day five of the Fourth Test match between India and Australia at Vidarbha Cricket Association Stadium on November 10, 2008 in Nagpur, India. This was Sourav Ganguly’s last Test match. (Photo by Global Cricket Ventures/BCCI via Getty Images)

தோனி எப்போது எதிரணியினர் என்ன வியூகங்கள் செய்கின்றனர் என்பதை எளிதில் கண்டுபிடித்து விடுவார். அதுதான் அவரை சிறந்த கேப்டனாக்கி உள்ளது. தோனி தன் தலைமையின் கீழ் விளையாடும் வீரர்களுக்கு அதிக சுதந்திரம் தருகிறார். வீரர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதை போட்டியின் போது செய்ய அனுமதிக்கிறார்.

தோனி போன்ற கேப்டன்களை 1, 2, 3.. என ஸ்டார் ரேட்டிங் செய்ய விரும்பவில்லை. அவர் இந்திய கிரிக்கெட் அணியின் தலை சிறந்த கேப்டன்களில் ஒருவராக எப்போதும் இருப்பார். தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் நல்ல ஃபார்மில் உள்ளார். அது இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பையில் இந்திய அணிக்கு மிகவும் உதவும்.

டெல்லிக்கு எதிரான போட்டியில் தோனி இல்லை புதிய கேப்டன் இவர்தான்

ஐ.பி.எல் லீக் போட்டிகளின் முடிவில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சி.எஸ்.கே அணி, புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்க வேண்டும் என்றால் அடுத்தடுத்து வரும் இரண்டு போட்டிகளை கட்டாயம் வென்றே ஆக வேண்டும். இதற்கு நாளை நடைபெறும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டி மிகவும் முக்கியமானது.

இந்நிலையில் இப்போட்டிக்கு தயாராகும் வகையில் இன்று சென்னை அணியினர் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டனர். இப்பயிற்சியில் முந்தைய போட்டியில் விளையாடாத பாப்-டு-பிளசிஸ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.

அதே சமயம் முந்தைய போட்டியில் காய்சல் காரணமாக விளையாடத தோனி வலை பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை. தோனிக்கு பதில் தமிழக வீரர் ஜகதீசன் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டார். இதனால் தோனி நாளைய போட்டியிலும் ஓய்வெடுப்பார் என தெரிய வருகிறது.

Mumbai: Chennai Super Kings batsmen Faf du Plessis and Suresh Raina during an IPL-2015 match between Mumbai Indians and Chennai Super Kings at Wankhede Stadium, in Mumbai, on April 17, 2015. (Photo: Nitin Lawate/IANS)

இதனால் நாளைய டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ரெய்னா கேப்டனாக செயல்படவே அதிக வாய்ப்பு உள்ளது. ஒரு வேளை ரெய்னா கேப்டனாக வேண்டாம் என தோனி முடிவெடுத்தால் பாப் டு பிளசிஸ் சி.எஸ்.கே அணிக்கு கேப்டனாக இருப்பார்.

இந்த இரண்டு பேர் ஆடினால் தான் சி.எஸ்.கே அணிக்கு கோப்பை திட்டவட்டமாக தெரிவித்த அஜித் அகர்கர்

நடப்பு ஐ.பி.எல் தொடரின் முதல் பாதியில் சி.எஸ்.கே அணி தொடர் வெற்றிகளை பெற்று அசத்தியது. அதுவே இரண்டாவது பாதியில் கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

இதற்கு காரணம் அந்த அணியின் மிடில் ஆர்டர் தான். சி.எஸ்.கே அணியின் நட்சத்திர வீரர்கள் ரெய்னா மற்றும் ராயுடு ஆகியோர் பெரிதாக ஏதும் ஆட வில்லை.

ரெய்னா இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 243 ரன்களையும், சராசரி 20 மற்றும் 120 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியுள்ளார். அதே போல் ராயுடு 12 போட்டிகளில் விளையாடி 213 ரன்களையும், சராசரி 17.5 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 89 மட்டுமே வைத்துள்ளார்.

தொடர்ந்து ராயுடு மற்றும் ரெய்னா மீது நம்பிக்கை வைத்து அடுத்தடுத்து வாய்ப்புகளை தருகின்றனர் தோனி மற்றும் பிளெமிங். ஆனால் இதுவரை வாய்ப்பை அவர்கள் பயன்படுத்தி கொள்ளவில்லை.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜித் அகர்கர் கூறியதாவது., சி.எஸ்.கே அணி ஐ.பி.எல் கோப்பையை வெல்ல அந்த அணியில் தோனி மட்டும் இருந்தால் போதாது. அந்த அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரெய்னா மற்றும் ராயுடு ஆகியோர் தங்களது பொறுப்பை உணர்ந்து ஆட வேண்டும்.

இவர்களது மோசமான ஆட்டம் வாட்சன் மற்றும் டுபிளசில் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ராயுடு மற்றும் ரெய்னா சிறப்பாக ஆடினால் மற்ற பேட்ஸ்மேன்கள் மீதான அழுத்தம் குறையும். அவர்களும் சிறப்பாக ஆடுவார்கள். சி.எஸ்.கே அணியும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.

நாயுடுவை கிண்டல் செய்த இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா

12வது உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை சமீபத்தில் அறிவித்தது பி.சி.சி.ஐ. இதில் நான்காம் வரிசை வீரராக அம்பத்தி ராயுடுவுக்கு பதில் தமிழக வீரர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார்.

விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டதற்கு அவர் பேட்டிங், பீல்டிங், பவுலிங் என த்ரி டைமன்சனல் (3டி) வீரர் என பி.சி.சி.ஐ தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.

உலக கோப்பையில் இடம் பெறாத அம்பத்தி ராயுடு தனது டிவிட்டர் பக்கத்தில் “நான் உலக கோப்பை போட்டிகளை வீட்டில் இருந்து பார்க்க புதிய 3டி கண்ணாடிகளை ஆர்டர் செய்துள்ளதாக கிண்டலாக பதிலிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று மும்பை அணிக்கு எதிரான போட்டியில் காய்சல் காரணமாக தோனி பங்கேற்கவில்லை. இதனால் நேற்றைய போட்டியில் சென்னை அணியை ரெய்னா கேப்டனாக வழிநடத்தினார். மேலும் அம்பத்தி ராயுடு விக்கெட் கீப்பராக செயல்பட்டார். இதன் மூலம் ஐ.பி.எல் தொழில் கீப்பராகவும் கால் தடம் பதித்தார் ராயுடு.

இதை பார்த்த இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அம்பத்தி ராயுடுவை கிண்டல் செய்து பதிவு ஒன்றை போட்டுள்ளது. அதில் ” ராயுடு தோனி இல்லத்தால் விக்கெட் கீப்பிங் செய்துள்ளார். அவர் தனது ஆட்டத்திற்கு மற்றொரு டைமன்சனை சேர்த்திருக்கிறார் என்றும், கூடவே ஒரு சிரிப்பு எமோஜியை சேர்த்து கிண்டல் செய்துள்ளார்.

11 போட்டிகள் முடிந்தும் இதை மட்டும் நாங்கள் செய்யவே இல்லை வருத்தப்படும் ரெய்னா

நேற்று இரவு சேப்பாக் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர் கொண்டது மும்பை இந்தியன்ஸ் அணி. இப்போட்டியில் தோனி மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு தரப்பட்டு, முரளி விஜய் மற்றும் துருவ் ஷோரே ஆகியோர் சென்னை அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் 15 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனையடுத்து இணைந்த ரோகித் சர்மா மற்றும் லீவிஸ் ஜோடி அணியின் ஸ்கோரை அடித்து ஆடி உயர்த்தியது. இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 75 ரன்களை சேர்த்தது. ரோகித் சர்மா 67 ரன்னிலும், லீவிஸ் 32 ரன்னிலும் அவுட்டாகினர். மேலும் அந்த அணிக்கு ஹந்திக் பாண்டியா 23 ரன்னும் மற்றும் பொல்லார்ட் 13 ரன்னும் சேர்த்தனர். இதனால் அந்த அணி 20 ஒவர் முடிவில் 155/4 ரன்களை எடுத்தது.

இதனையடுத்து களம் இறங்கிய சென்னை அணி தொடக்கம் முதலே மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. சென்னை அணியில் முரளி விஜய்யை தவிர மற்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க எண்ணில் அவுட்டாகி சென்றனர். சென்னை அணியில் அதிகபட்சமாக முரளி விஜய் 38, மிட்செல் சாண்ட்னர் 20, பிராவோ 22 ரன்களை சேர்த்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகியதால் சென்னை அணி 17.4 ஓவரில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இப்போட்டியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை அணி.

போட்டி முடிந்த பின் தோல்வி குறித்து சென்னை அணி கேப்டன் ரெய்னா கூறியது., இந்த மைதானத்தில் 155 என்பது எளிதில் சேஸ் செய்ய கூடியது. இன்று மும்பை அணியினர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். எங்கள் அணி ஒவ்வொரு 2 -3 ஓவர்களுக்கும் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தது. இது தான் எங்கள் அணியின் தோல்விக்கு காரணம்.

இதுவரை 11 போட்டிகளில் ஆடி விட்டோம். இதுவரை ஒரு பேட்டிங் யூனிட்டாக சிறப்பாக செயல்படவில்லை. இன்றும் சொதப்பி விட்டோம். இது எனக்கு வருத்தம் அளிக்கிறது. மீண்டும் அனைவரும் கலந்து பேச வேண்டும என அவர் தெரிவித்தார்.

கதிகலங்கி நிற்கும் சி.எஸ்.கே மும்பை அணியில் இடம் பெறும் அதிரடி இடக்கை வீரர் யுவ்ராஜ் சிங்

இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இரண்டாவது முறையாக மோத உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. இதற்கு முன் இவ்விரு அணிகளும் மோதிய போது 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது மும்பை அணி.

மும்பை அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி ஆறில் வெற்றியையும், நான்கில் தோல்வியையும் அடைந்து புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்கு குவிண்டன் டி காக் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இரு பேட்ஸ்மேன்கள் மட்டுமே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 10 போட்டிகளில் டிகாக் 378 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 241 ரன்களை அடித்துள்ளனர்.

தொடர்ந்து அந்த அணிக்கு மிடில் ஆர்டர் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் இந்த ஆண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளில், எஸ்.ஆர்.ஹெச் அணியுடன் 25 பந்தில் 21 ரன், ஆர்.சி.பி அணியுடன் 29 பந்தில் 29 ரன், எஸ்.ஆர்.ஹெச் அணியுடன் 21 பந்தில் 25 ரன், கே.கே.ஆர் அணியுடன் 11 பந்தில் 5 ரன் மட்டுமே எடுத்துள்ளார்.

Yuvraj singh

இதனால் இன்றைய போட்டியில் மிடில் ஆர்டர் பேட்டிங்கை வலுப்படுத்த சூர்ய் குமார் யாதவ் நீக்கப்பட்டு, யுவ்ராஜ் சிங் அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எதிர்பார்க்கப்படும் மும்பை அணி: ரோகித் ஷர்மா, குவிண்டன் டி காக், யுவ்ராஜ் சிங், க்ருணால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, கைரான் பொல்லார்ட், மயங்க் மார்கண்டே, ராகுல் சஹர், பென் கட்டிங், லசித் மலிங்கா, ஜஸ்பிரித் பும்ரா.

தோனியால் பிளே ஆஃப் வாய்ப்பை இழக்கும் மும்பை அணி அதிர்ச்சியில் மும்பை ரசிகர்கள்

சி.எஸ்.கே அணியை தவிர மற்ற அணிகளுக்கு இனி நடைபெற உள்ள ஒவ்வொரு ஐ.பி.எல் லீக் போட்டியும் ஏறக்குறைய நாக் அவுட் போட்டி தான். எந்த அணி அடுத்து வரும் போட்டிகளில் தோல்வி அடைகிறதோ அந்த அணியின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு கேள்வி குறிதான்.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளை தவிர மற்ற அணிகள் அனைத்தும் 11போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் சென்னை அணி மட்டும் தான் 8 வெற்றிகளுடன் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. இரண்டாம் இடத்தில் இருக்கும் டெல்லி அணி இனி வரும் 3 போட்டியில் ஒன்றை வென்றால் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துவிடும்.

ஆனால் மூன்றாம் இடத்தில் இருக்கும் மும்பை அணி இனி வரும் நான்கு போட்டிகளில் இரண்டை கட்டாயம் வென்றே தீர வேண்டும். அந்த நான்கு போட்டிகளில் கொல்கத்தா அணியுடன் இரண்டு போட்டியிலும், ஹைதராபாத் அணியுடன் ஒரு போட்டியிலும், சென்னை அணியுடன் ஒரு போட்டியிலும் மோத உள்ளது.

ஒரு வேளை இன்று நடக்கும் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியிடம் ரோகித் தலைமையிலான மும்பை அணி தோல்வியடைந்தால் மும்பை அணியின் பிளே ஆஃப் சுற்று கேள்வி குறி தான். அடுத்து வரும் மூன்றில் இரண்டு போட்டியில் வெற்றி பெற வேண்டும்.

ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தாலும், எவ்வளவு பெரிய அணியையும் எளிதில் வீழ்த்தும் வல்லமை படைத்தவை. மேலும் அந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற அடுத்தடுத்த போட்டிகளில் கட்டாயம் வெல்ல வேண்டும்.

எனவே மும்பை அணி அடுத்து வரும் மூன்றில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெறுவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. இதனால் இன்றைய சென்னைக்கு எதிரான போட்டியில் மும்பை கண்டிப்பாக மும்பை வெற்றி பெற்றே ஆக வேண்டும். ஒரு வேளை தோனி தலைமையிலான சென்னை அணியிடம் மும்பை அணி தோல்வி அடைந்தால் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றை இழக்கும் அபாயம் உள்ளது.

இன்னும் மோசமாக மாறினால் உடனே ஐ.பி.எல்-லில் இருந்து ஓய்வு தோனி அதிரடி அறிவிப்பு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது தோனியின் முதுகு பகுதியில் சதை பிடிப்பு ஏற்ப்பட்டது. இதனால் ஹைதராபாத் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் தோனியால் விளையாட முடியாத நிலை ஏற்ப்பட்டது.

தற்போது சதைப்பிடிப்பு சற்று நீங்கி உள்ள நிலையில் பெங்களுர் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான அடுத்தடுத்த இரு போட்டிகளில் தோனி தொடர்ந்து விளையாடி உள்ளார்.

இந்நிலையில் நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் ஆளாய் நுழைந்து விட்டது சென்னை அணி.

இந்நிலையில் தனது காயம் குறித்து தோனி இன்று பேட்டியில் கூறியதாவது., நான் தற்போது காயத்துடன் தான் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறேன். தற்போது சதைப் பிடிப்பு அவ்வளவு மோசமாக இல்லை. அதனால் விளையாட முடிகிறது. ஒரு வேளை சதை பிடிப்பு மோசமாகும் நிலை ஏற்ப்பட்டால், உலக கோப்பை போட்டிகளை கருத்தில் கொண்டு ஒரு சில ஐ.பி.எல் போட்டிளில் இருந்து ஓய்வு எடுத்து கொள்வேன். எனக்கு ஐ பி எல் எவ்வளவு முக்கியமோ அதே அளவு உலக கோப்பை போட்டிகளும் முக்கியம் என அவர் தெரிவித்துள்ளார்.