இந்திய வீரர்களில் இர்பான் பதான் செய்த முதல் சாதனை!

இந்திய அணியின் அனுபவ ஆல் ரவுண்டர் இர்ஃபான் பதான். இவர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று பல வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாக ஐபிஎல் 2017 சீசனில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். தற்போது கிரிக்கெட் வர்ணணையாளராக பணியாற்றி வருகிறார்.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் டி20 லீக் தொடர் போன்று உலகின் மற்ற நாடுகளிலும் டி20 தொடர்கள் நடைபெற்று வருகின்றனர். இதில் கரீபியன் லீக், பிக் பேஷ் லீக், பாகிஸ்தான் பீரிமியர் லீக், ஆஃப்கானிஸ்தான் பிரீமியர் லீக், பங்களாதேஷ் பிரீமியர் லீக் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவின் ஐபிஎல் தொடரில் விளையாடினாலும், இந்திய வீரர்களை மற்ற நாடுகள் நடத்தும் டி20 லீக்கில் விளையாட அனுமதிப்பது இல்லை பிசிசிஐ. இதனால் இதுவரை எந்த இந்திய வீரரும் வெளிநாட்டு டி20 தொடரில் விளையாடியது இல்லை. ஏன் உலகின் தலை சிறந்த வீரர்களான தோனி விராட் கோலி கூட விளையாடியது இல்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு நடக்கப் போகும் கரீபியன் லீக் தொடர் ஏலத்தில் கலந்து கொள்ளும் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய ஆல் ரவுண்டர் இர்ஃபான் பதான் பெயர் இடம் பெற்றுள்ளது.

கரீபியன் லீக் தொடர் ஏலத்தில் ஏதாவது ஒரு அணி இர்ஃபான் பதானை ஏலத்தில் எடுக்கும் பட்சத்தில் வெளிநாட்டு டி20 தொடரில் விளையாடும் முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார். கரீபியன் தொடரில் விளையாட இர்ஃபான் பதானுக்கு பிசிசிஐ தடையில்லா சான்றிதழை வழங்கியதா என்ற தகவல் வெளியாகவில்லை.

அடுத்த ஆண்டு வலிமையாக வருவோம் வாட்சன் அதிரடி பேட்டி

மே 12ந் தேதி நடைபெற்ற ஐபிஎல் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதனால் 4வது முறையாக கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை நழுவ விட்டது சென்னை அணி.

இந்தாண்டு ஐ.பி.எல் தொடர் முழுவதும் சென்னை அணியில் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பலாக அமைந்தது. ரெய்னா, ராயுடு, கேதர் ஜாதவ் போன்ற வீரர்கள் கடைசி வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

சென்னை அணி புள்ளி பட்டியலில் டாப்பில் இருந்ததற்கு தோனியின் பேட்டிங்கும், தாஹிர், ஹர்பஜன், தீபக் சாஹர் போன்றோரின் சிறப்பான பந்து வீச்சும் தான் காரணம்.

வாட்சன் தொடக்கத்தில் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தினாலும், நாக் அவுட் சுற்றின் போது சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக இறுதி போட்டியில் காயத்தை பொருட்படுத்தாமல் ரத்தம் சொட்ட விளையாடினார். இருந்தாலும் ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை.

இந்தாண்டு சென்னை அணிக்கு நிறைகளை விட குறைகளே அதிகம் இருந்தது. பேட்டிங் பீல்டிங்கில் படு சொதப்பல்.

இந்நிலையில் சி.எஸ்.கே வீரர் வாட்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது., அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வலிமையாக மீண்டும் வருவோம்.

ஐபிஎல்லில் மேட்ச் ஃபிக்சிங் நடப்பது உண்மை தான் ரங்கராஜ் பாண்டே வெளியிட்ட அதிரடி வீடியோ

2019ம் ஆண்டுக்கான ஐபிஎல் இறுதி போட்டி மே 12ந் தேதி நடந்து முடிந்தது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி 4வது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.

இப்போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றதும் மேட்ச் ஃபிக்சிங் நடந்திருக்கிறது என ரசிகர்கள் கூற தொடங்கினர். தோனிக்கு நடுவர் ரன் அவுட் வழங்கியது, ஷேன் வாட்சன் தேவையில்லாமல் ரன் ஓடி ரன் அவுட் ஆனது, ஹர்பஜன் சிங் பதில் ஷ்ரதுல் தாகூர் களம் இறக்கப்பட்டது போன்ற நிகழ்வுகள் சந்தேகத்தை வலுப்படுத்துவதாகவும் கூறினர்.

Rangaraj pandey

இந்நிலையில் பிரபல செய்தியாளரும் மற்றும் செய்தி தொகுப்பாளருமான ரங்கராஜ் பாண்டே ஐபிஎல் என்பது மேட்ச் பிக்சிங் தான் எனக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது.,

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் மேட்ச் ஃபிக்சிங் தான். போட்டியில் யார் வெற்றி பெற வேண்டும், எப்படி வெற்றி பெற வேண்டும், முதல் பந்தில் இருந்து 20வது ஓவரின் கடைசி பந்து வரை தெளிவான திரைக்கதை அமைத்து நடத்தப்படுகிறது. ஒரு போட்டி 20 ஓவர் வரை நடந்தால் மட்டுமே தான் அந்த போட்டிக்கான வர்த்தகம் பாதிக்கப்படாது.

இறுதி போட்டியில் மும்பை டெல்லி அணிகள் மோதினால் யானையுடன் எலி மோதியது போல் இருக்கும். இப்போட்டியை பார்க்க மக்கள் அதிகம் விரும்ப மாட்டார்கள். பார்வையாளர்கள் குறைவாக தான் இப்போட்டிக்கு இருக்கும். இதனால் இப்போட்டிக்கான வர்த்தகம் தானாக பாதிக்கப்படும். அதுவே சென்னை மும்பை அணிகள் மோதினாள் அதிக வர்த்தகம் மற்றும் அதிக லாபம் கிடைக்கும்.

இங்கு மேட்ச் ஃபிக்சிங் சில வீரர்களிடம் மட்டுமே சொல்லப்படுகிறது. சிலருக்கு உத்தரவு மட்டுமே பிறபிக்கப்டுகிறது. பணம் சிலருக்கு நேரடியாகவும், சதவீதமாகவும், பங்காகவும் தரப்படுகிறது. இங்கு மேட்ச் ஃபிக்சிங் குறியீடுகள் மூலம் நடக்கிறது. போட்டிகள் உண்மையாகவே நடப்பது போல் கட்டமைக்கபடுகிறது. அதுதான் ஐபிஎல் ஸ்பெஷல் எனக் கூறியுள்ளார்.

CSKவில் களையெடுப்பு அவசியம் பிளெமிங் அதிரடி பேட்டி

ஐ.பி.எல் 2019ன் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதனால் நான்காவது முறையாக ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ் அணி.

சி.எஸ்.கே என்றாலே வயதானவர்கள் அணி. அணியில் இருக்கும் அநேக வீரர்களுக்கும் ஏறக்குறைய 35 வயது இருக்கும். இதனால் சி.எஸ.கே அணியை ஃபாதர்ஸ் ஆர்மி, ஓல்டு டீம் என சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

இதனால் பீல்டிங்கில் மோசமாக செயல்பட்டனர் சென்னை அணியினர். ரெய்னா, வாட்சன் போன்ற வீரர்களும் பல கேட்சுகளை கோட்டைவிட்டனர். பிற வீரர்களும் தங்கள் பங்கிற்கு பல கேட்சுகளை கோட்டைவிட்டுள்ளனர்.

இந்தாண்டு சென்னை அணியில் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடிய வீரர் தோனி மட்டும் தான். ரெய்னா, வாட்சன், டுபிளசிஸ், ராயுடு போன்ற அனுபவ வீரர் ஏதாவது ஒரு ஆட்டத்தில் மட்டுமே ஜொலித்தனர்.

இந்நிலையில் சி.எஸ்.கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியிருப்பதாவது., எங்கள் அணி மிகவும் வயதானவர்கள் அணி என்பதை புரிந்து கொண்டோம். வீரர்கள் தங்களை நிலை படுத்தி கொள்ள அவகாசம் அளித்துள்ளோம். சி.எஸ்.கே அணியில் களையெடுப்பு தேவைப்படுகிறது.

தோனி உலக கோப்பை சென்று வந்தவுடன் அடுத்த வருட தொடருக்கான புதிய சி.எஸ்.கே அணி கட்டமைக்கும் பணி தொடங்கி விடும். இந்த அணியில் அதிகம் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அதிகம் வயதான வீரர்கள் இருக்க மாட்டார்கள். சரியான கலவையில் புதிய அணி உருவாக்கப்படும் என தெரிவித்தார்.

தோனி அவுட்டா நாட் அவுட்டா அனில் கும்ளே சொன்ன பளிச் பதில்

2019ம் ஆண்டின் ஐ.பி.எல் இறுதி போட்டி நேற்று ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐ.பி.எல் கோப்பையை தட்டி சென்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

இப்போட்டியில் தோனிக்கு கொடுக்கப்பட்ட ரன் அவுட் தான் மும்பை அணி வெற்றி பெற பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

இப்போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி 149/8 ரன்களை எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 73 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. 4வது விக்கெட்டுக்கு தோனி களம் இறங்கினார்.

ஹர்திக் பாண்டியா வீசிய 12வது ஓவரின் 4வது பந்தில் தட்டி விட்டு சிங்கிள் எடுத்தார் வாட்சன். இந்த பந்தை பிடித்து மலிங்கா ரன் அவுட் செய்ய ஸ்டம்பை நோக்கி எறிய ஓவர் த்ரோவானது. இதனால் இரண்டாவது ரன் ஓடிய தோனி இஷான் கிஷனால் ரன் அவுட் செய்யப்பட்டார்.

இந்த ரன் அவுட் கள நடுவரால் மூன்றாவது நடுவரிடம் பரிசீலனைக்கு அனுப்பபட்டது. ரீப்ளேவில் தோனியின் பேட் க்ரீஸை தொடும் போது பந்து ஸ்டம்ப்பில் சரியாக அடித்தது. எத்தனை கேமரா கோணங்களில் பார்த்தாலும் தோனியின் ரன் அவுட் அவுட்டா? நாட் அவுட்டா? என தெரியவில்லை. சில நிமிடங்களுக்கு பின் மூன்றாவது நடுவர் தோனி ரன் அவுட் என தனது முடிவை அறிவித்தார். இது சென்னை ரசிகர்களுக்கு அதிருப்தியை தந்தது.

இப்போட்டி முடிந்த பின் டக் அவுட் நிகழ்ச்சியில் பேசிய அனில் கும்ளே கூறியதாவது., தோனிக்கு அவுட் கொடுத்தது நியாயமற்றது. இது போன்ற தருணங்களில் பேட்ஸ் மேன் அவுட் என்பதற்கு சரியா ஆதாரம் இல்லாத போது அல்லது அதிக குழப்பம் இருக்கும் போது பேட்ஸ் மேனுக்கு ஆதரவாக தான் நடுவர் தீர்ப்பு தர வேண்டும். தோனிக்கு நாட் அவுட் தான் நடுவர் தத்திருக்க வேண்டும். அவுட் கொடுத்து துர்திருஷ்டவசமானது என அனில் கும்ளே தெரிவித்தார்.

கோப்பையை விட்டாலும் பிரமாண்ட சாதனையை செய்த தோனி உற்சாகத்தில் ரசிகர்கள்

நேற்று இரவு நடைபெற்ற பரபரப்பான இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி 4வது முறையாக ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ் அணி.

இப்போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை சேர்த்தது. இதனையடுத்து களம் இறங்கிய சென்னை அணி சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. வாட்சன் மட்டும் கடைசி வரை போராடினார். அவர் 59 பந்தில் 80 ரன்கள் குவிந்தனர். சென்னை அணியால் 20 ஓவர் முடிவில் 148/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 1 வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை கைப்பற்ற முடியாமல் போனாலும், தினேஷ் கார்த்தியின் சாதனையை முறியடித்து புதிய சாதனை செய்துள்ளார் எம்.எஸ் தோனி.

நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா 15 ரன்கள் எடுத்திருந்த போது தீபக் சாஹர் பந்து வீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதன் மூலம் விக்கெட் கீப்பராக 132 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

இதற்கு முன் தினேஷ் கார்த்திக் 182 போட்டிகளில் 131 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். தற்போது அதை தோனி முறியடித்துள்ளார். தோனி 190 போட்டிகளில் 132 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

கோப்பையை வெல்ல போவது இந்த அணி தான் திட்டவட்டமாக கூறிய ஹெய்டன்

இன்று இரவு நடைபெற உள்ள ஐபிஎல் இறுதி போட்டியில் மூன்று முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றனர். இப்போட்டியை வென்று எந்த அணி நான்காவது முறையாக கோப்பையை வெல்ல போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

இந்நிலையில் ஐ.பி.எல் கோப்பையை இன்று யார் வெல்வார்கள் என்று கூறியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன். அவர் கூறியதாவது.,

இரு அணிகளும் இறுதி போட்டியில் விளையாட முழு தகுதி உடையவர்கள். ஆனால் இந்தாண்டு இரு அணிகளும் தங்களது சிறப்பான ஆட்டத்தை இதுவரை வெளிப்படுத்தவில்லை.

இன்றைய போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் வெற்றி பெறும். இதற்கு முன் நடந்த போட்டிகளில் சென்னை தோற்று இருக்கலாம். புள்ளி விவரங்களும் சாதகமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சென்ை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லும்.

கடந்த சில போட்டிகளாக சூர்ய குமார் யாதவ் மற்றும் ரோகித் சர்மா சிறப்பாக ஆடி லருகின்றன இன்றைய போட்டியில் இவர்கள் சென்னை அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் எதிர் பார்க்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்

ஐபிஎல் இறுதி போட்டியில் அதிரடியாக சதம் விளாசிய வீரர்கள்

இன்று நடைபெற உள்ள ஐ.பி.எல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றனர்.

இரு அணிகளும் இதுவரை தலா மூன்று முறை கோப்பையை கைப்பற்றி உள்ள நிலையில், நான்காவது முறையாக கோப்பையை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

இந்நிலையில் இதுவரை நடந்து ஐ.பி.எல் இறுதி போட்டிகளில் சதம் அடித்த வீரர்கள் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளது.

Shane watson

ஷேன் வாட்சன்: கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல் இறுதி போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி 3வது முறையாக கோப்பையை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இப்போட்டியில் சென்னை அணி வீரர் ஷேன் வாட்சன் 57 பந்துகளில் 117 ரன்களை குவித்தார். இதில் 11 பவுண்டரி மற்றும் 8 சிக்சர் அடங்கும்.

W.saha

விருத்திமான் சாஹா: கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் இறுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் வீழ்ந்தது சிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. இப்போட்டியில் பஞ்சாப் அணி தோற்றாலும், அந்த அணி வீரர் விருத்திமான் சாஹா அற்புதமாக பேட் செய்து 55 பந்தில் 115 ரன்களை குவித்தார். இதில் 10 பவுண்டரி 8 சிக்சர்கள் அடங்கும்.

டெல்லி அணிக்கு பெரிய அடி முக்கிய வீரர் திடீர் விலகல்

நடப்பு ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் நட்சத்திர பவுலர் கசிகோ ரபாடா.

அவர் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் தான் தற்போது நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதற்கான ஊதா நிற தொப்பியை வைத்துள்ளார்.

இந்நிலையில் சி.எஸ்.கே அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் காயம் காரணமாக டெல்லி அணியில் ரபாடா விளையாட வில்லை. அவருக்கு பதில் டிரென்ட் பவுல்ட் லிகளயாடினார்.

ஐ.பி.எல் தொடரை தொடர்ந்து உலக கோப்பை போட்டிகள் தொடங்க உள்ளதால், கிரிக்கெட் தென்னாப்ரிக்கா ரபாடாவின் காயம் குறித்த முழு தகவலையும் டெல்லி அணியிடம் இருந்து ஏற்கெனவே பெற்று கொண்டது.

தற்போது ரபாடாவின் காயத்தை முழுமையாக ஆராய்ந்த கிரிக்கெட் தென்னாப்ரிக்கா, அவரது காயம் மிகவும் மோசமாக உள்ளதாகவும். உலக கோப்பை அணியில் அவர் இருப்பதால் காயம் விரைவில் குணமடைய உடனே தென்னாப்ரிக்கா திரும்ப வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் எஞ்சிய ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடாமல் டெல்லி அணியை விட்டு தாயகம் திரும்புகிறார் ரபாடா. ரபாடாவின் இழப்பு தற்போது டெல்லி அணிக்கு புதிய சிக்கல் உருவாகி உள்ளது.

இந்த ஆண்டுடன் தோனி ஓய்வு சூசகமாக பேட்டி அளித்த ரெய்னா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிரந்தர கேப்டன் எம்.எஸ் தோனி. அவர் கடந்த 10 ஆண்டுகளாக சென்னை அணியை வழிநடத்தி வருகிறார் தோனி. இதில் மூன்று முறை ஐ.பி.எல் பட்டத்தையும், இரண்டு முறை சாம்பியன் லீக் டி20 பட்டத்தையும் சி.எஸ்.கே அணிக்கு பெற்று தந்துள்ளார். அனைத்து ஐ.பி.எல் சீசன்களிலும் பிளே ஆஃப் சென்ற ஒரே அணி என்ற பெருமையையும் சி.எஸ்.கே அணிக்கு தோனி பெற்று தந்துள்ளார் தோனி.

சர்வதேச போட்டிகள் என்றாலும், ஐ.பி.எல் என்றாலும் தோனி காயம் காரணமாக ஓய்வு பெறுவது அரிது. ஆனால் நடப்பு ஐ.பி.எல் தொடரில் இரண்டு போட்டிகளில் காயம் காரணமாக ஒய்வு எடுத்துள்ளார்.

தோனி இல்லாத இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி படு மோசமாக தோல்வியடைந்தது. இந்த இரண்டு போட்டிகளிலும் ரெய்னாவின் கேப்டன்சி மோசமாக இருந்தது. இந்த தோல்விகள் மூலம் சென்னை அணியில் தோனியின் இருப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தது சென்னை அணி.

தோனி ஓய்வில் இருந்து வந்த அடுத்த போட்டியிலே டெல்லி அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. இந்நிலையில் தோனி நடப்பு ஐ.பி.எல் தொடர் முடிந்ததும் தோனி ஓய்வு பெற போவதாக ரெய்னா சூசகமாக தெரிவித்துள்ளார்.

ரெய்னா இது குறித்து கூறியதாவது., தோனிக்கு டி20 போட்டிகள் அத்துபடி. மைதானத்தை ஆராய்ந்து டாஸை தேர்ந்தெடுப்பதில் இருந்து, எந்த பவுலரை அடிக்க வேண்டும், எந்த பவுலரை அடிக்க கூடாது, எப்போது அடிக்க வேண்டும், எப்போது களம் இறங்க வேண்டும் என அனைத்தும் அவருக்கு தெரியும்.

நான் கடந்த இரண்டு ஆண்டாக பேட்டிங்கில் சிறப்பாக விளையாடுகிறேன். சென்னை அணியின் நம்பிக்கை அறிவுரையாளராக சிறப்பாக செயல்படுகிறேன். குறிப்பாக தோனி முடித்து கொள்கிறார். அடுத்த ஆண்டு முதல் என்னை வேறொரு பொறுப்பில் பார்ப்பீர்கள். தோனியின் திறமை எனக்கு தேவைப்படுகிறது. அதை நான் லளர்த்து சொன்ன வேண்டும் என தோனியின் ஓய்வு குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார்.

வெற்றிக்கு இவர்தான் காரணம் திட்டவட்டமாக அறிவித்த ரோகித் சர்மா

நேற்று நடைபெற்ற 51வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சூப்பர் ஓவர் முறையில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.

இப்போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குவிண்டன் டி காக் 69 ரன்களை சேர்த்தார்.

இதனையடுத்து களம் இறங்கிய ஹைதராபாத் அணியில் மார்டின் கப்டில், சஹா, வில்லியம்சன், விஜய் சங்கர் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து அவுட்டாகினர். இருந்தாலும் மனீஷ் பாண்டே மற்றும் நபி ஆகியோர் கடைசி வரை போராடினர். கடைசி ஓவரில் ஹைதராபாத் வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.

முதல் மூன்று பந்தில் 8 ரன்களை சேர்த்தனர் பாண்டே மற்றும் நபி ஜோடி. நான்காவது பந்தில் நபி அவுட்டாகினார். 5 பந்தில் 2 ரன்களை எடுத்த பாண்டே, கடைசி பந்தில் சிக்ஸ் விளாசினார். இதனால் போட்டி டை ஆனது.

இதனையடுத்து பும்ரா வீசிய சூப்பர் ஓவரில் ஹைதராபாத் அணி வெறும் 8 ரன்களே சேர்த்தது. இதனையடுத்து களம் இறங்கிய மும்பை அணி ரஷீத் கானின் முதல் மூன்று பந்திலே 9 ரன்களை எடுத்தது. இதன் மூலம் போட்டியை சூப்பர் ஓவர் மூலம் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

போட்டி முடிந்த பின் பேசிய ரோகித் சர்மா கூறியது., இந்த மைதானத்தில் 162 என்பது சுமாரான ஸ்கோர் தான். வெற்றி பெற இது போதாது என தெரியும். இருந்தாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்தால் வெற்றி பெற்று விடலாம் என நினைத்தோம். இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் வீசிய 8 ஓவர் தான் மிகவும் முக்கியமானது. அவர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள்.

இப்போட்டியில் நாங்கள் வெற்றி பெற காரணம் பும்ராவின் சிறப்பான பந்து வீச்சு தான். அவர் எந்த அழுத்தமான சூழ்நிலையிலும் பதற்றம் அடைவதில்லை. தெளிவான மனநிலையில் இருக்கிறார். ஒவ்வொரு போட்டியிலும் மும்பை அணிக்காக சிறப்பாக செயல்படுகிறார். இப்போட்டியின் வெற்றி அவரால் தான் கிடைத்தது. சூப்பர் ஓவரை அருமையாக வீசினார் என்றார்.

நான் வாழ்வில் உயர இவர் மட்டும் தான் காரணம் வேறு யாரும் இல்லை அஸ்வின் அதிரடி பேட்டி

நடப்பு ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருப்பவர் தமிழக வீரர் ரவிசந்திரன் அஸ்வின். இவர் பஞ்சாப் அணியில் செய்யும் சில அதிரடி மாற்றங்களும், களத்தில் அவர் செய்யும் சில தந்திரங்களும் கிரிக்கெட் விமர்சனர்களிடையே அவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்துள்ளது.

அவர் கடந்த ஒராண்டாக ஒருநாள் மற்றும் டி20க்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். அதே சமயம் தற்போதும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் ஒர் அங்கமாக உள்ளார்.

அவருக்கு 32 வயது ஆகியும் இதுவரை கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை குறைத்து கொள்ளவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் புதுமையான பந்துகளை வீசி அசத்தி வருகிறார்.

அஸ்வின் முதலில் கடந்த 2008ம் தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணியில் தான் அறிமுகமானார். அஸ்வின் 9 ஆண்டுகள் தோனி தலைமையிலான சி.எஸ்.கே மற்றும் ரைசிங் சூப்பர் ஜெயன்ட் அணியில் விளையாடி உள்ளார். தோனி தான் அஸ்வினை சர்வதேச சிரிக்கெட்டில் அறிமுகம் செய்தார்.

இந்நிலையில் தான் வாழ்கையில் உயர யார் காரணம் என்பதை அஸ்வின் தற்போது தெரிவித்துள்ளார். அதன்படி

எனது கிரிக்கெட் வாழ்வில் நான் மிகப் பெரிய உயரத்தை அடைவதற்கு தோனி பெரும் பங்கு ஆற்றியுள்ளார். சென்னை அணியில் நான் இருந்த போது என்னை எப்போதும் உற்சாகப்படுத்துவார். புதுமையான பந்துகளை கற்று கொள்ளவும், அதை களத்தில் செயல்படுத்தவும் உதவி செய்தார்.

எப்போது தோனி எனக்கு அறிவுரை வழங்கி கொண்டே இருப்பார். தவறு செய்தால் அதை சுட்டி காட்டி திருத்தவும் செய்துள்ளார். தோளி தான் என்னை வலிமை படுத்தினார் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

தோனியின் அபார கீப்பிங் திறமைக்கு இதுதான் காரணமாம் தோனியே சொல்லிட்டாரு

நேற்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் சென்னை மைதானத்தில் நடைபெறும் குவாலிஃபயர் முதல் போட்டியில் விளையாடுவதை உறுதி செய்துள்ளது சென்னை அணி.

நேற்றைய போட்டியில் தோனி தனது பேட்டிங்கில் 22 பந்தில் 44 ரன்களை குவித்து அசத்தினார். மேலும் கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு ஸ்டம்பிங் செய்து எதிரணியை நிலை குலைய செய்தார்.

இந்த ஸ்டம்பிங் நடந்து ஜடேஜாவின் 12லது ஓவரில் தான். அந்த ஓவரின் 4வது பந்தில் கிறிஸ் மோரிஸையையும், 6வது பந்தில் ஸ்ரேயாஷ் ஐயரையைும் ஸ்டம்பிங் செய்தார். இந்த ஸ்டம்பிங் செய்ய தோனி எடுத்து கொண்ட நேரம் 1 நொடிக்கும் குறைவு.

போட்டி முடிந்த பின் தோனியின் கீப்பிங் ரகசியம் என்று கேட்கபபட்டது., இதற்கு பதிலளித்த தோனி. எனது கீப்பிங் திறமை டென்னிஷ் பால் கிரிக்கெட்டின் மூலம் வந்தது. அங்கு தான் திறமையை வளர்த்து கொண்டேன்.

கீப்பிங்கில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்கள் அடிப்படை விஷயங்களை தெளிவாக கற்று கொள்ள வேண்டும். எப்போதும் அதனுடனே ஒட்டியிருக்க வேண்டும். இல்லையென்றால் அடிக்கடி தவறு செய்வீர்கள் என தோனி கூறியுள்ளார்.

இதை யாராலும் செய்ய முடியாது ஆனால் தோனி செய்தார் ரெய்னா அதிரடி பேட்டி

நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 80 ரன்கள் வித்தியாத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி . மேலும் இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.

இப்போட்டியில் முதலில் சென்னை அணி பேட் செய்தது. தொடக்கத்தில் வாட்சன் 0வில் அவுட்டானாலும். ரெய்னா மற்றும் டு பிளசிஸ் ஆகியோர் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். ரெய்னா 59 மற்றும் டுபிளசிஸ் 39 ரன்கள் அடித்து அவுட்டாகினர், இருந்தாலும் சென்னை அணி 15 ஓவர் முடிவில் 100 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

இதனையடுத்து களமிறங்கிய தோனி டெல்லி அணியின் பந்து வீச்சை சிதறடித்தார். 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சருடன் 22 பந்தில் 44 ரன்களை குவித்தார். தோனியின் கடைசி கட்ட அதிரடியால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 179/4 ரன்களை குவித்தது.

இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி சென்னை அணியின் சுழற்பந்து வீச்சில் 16.2 ஓவரில் 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டெல்லி அணி பேட்டிங்கின் போது ரவீந்திர ஜடேஜாவின் ஒரே ஒலரில் ஸ்ரேயாஷ் ஐயர் மற்றும் கிறிஸ் மோரிஸை அடுத்தடுத்து மின்னள் வேகத்தில் ஸ்டம்பிங் செய்தார் தோனி . இது சென்னை அணியின் லெற்றியை உறுதி செய்தது.

போட்டி முடிந்த பின் நிருபர்களுக்கு பேட்டியளித்த ரெய்னா கூறியதாவது. தோனி செய்த இரண்டு ஸ்டம்பிங்கும் மிகவும் அபாரமானது. மின்னல் வேகத்தில் செய்தார். ஸ்டம்புக்கு பின்னாள் இருந்து பந்து என்ன வேகத்தில் வருகிறது, எவ்வளவு திரும்ப போகிறது என்பதை தோனி எளிதில் கணித்து விடுகிறார். இது போன்ற வேகத்தில் ஸ்டம்பிங்கை யாராலும் செய்ய முடியாது. ஆனால் தோனி இதை செய்கிறார். அதற்கு தோனியின் திறனும் பயிற்சியும் தான் கை கொடுக்கிறது. தோனியின் பேட்டிங்கும் அபாரமாக இருந்தது. காய்சலில் இருந்து திரும்பி வந்து இப்படி பவராக ஆடுவது எளிதல்ல. தோனியுடன் இணைந்து பேட்டிங் செய்வது மிகவும் சுலபமானது என அவர் தெரிவித்தார்.

தமிழக ரசிகர்கள் என்னை தல என கூப்பிடுகிறார்கள் தோனி நெகிழ்சி

நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அனிகள் மோதின. இப்போட்டியில் சென்னை சூப்பர் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மேலும் புள்ளி பட்டியலிலும் முதலிடம் பிடித்தது.

இப்போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணியில் வாட்சன் 0 ரன்னில் அவுட்டானார். இதனை தொடர்ந்து டுபிளசிஸ் மற்றும் ரெய்னா இணைந்து அணியின் ஸ்கோரை உயர்தினர். டு பிளசிஸ் 39 மற்றும் ரெய்னா 59 ரன்களைில் அவுட்டாகினர். இதனையடுத்து வந்த ஜடேஜா மற்றும் தோனி ஆகியோர் பேட்டிங்கில் அதிரடி காட்டினர். தோனி 22 பந்தில் 44 ரன்னும், ஜடேஜா 10 பந்தில் 25 ரன்களை குவித்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்தது சென்னன் அணி .

இதனையடுத்து களம் இறங்கிய டெல்லி அணியினர், சென்னை அணியின் சுழற் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுதடுத்து அவுட்டாகினர். இதனால் டெல்லி அணி 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சென்னை அணி சார்பில் இம்ரான் தஹிர் 4 விக்கெட் மற்றும் ஜடேஜா 3 விக்கெட்டை எடுத்தனர்.

இப்போட்டியில் முதலில் தோனி விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோனி கேப்டனாக டாஸ் போட வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தார். இதை எதிர்பாராத சென்னை ரசிகர்கள் தோனி.. தோனி.. என கூச்சல் போட்டனர். மேலும் விசில்களை அடித்து மைதானத்தை அதிர விட்டனர் ரசிகர்கள். இந்த விசில் சந்தமும், தோனி என்ற கூச்சலும் போட்டி முடியும் வரை  குறையவில்லை. தோனி ஒவ்வொரு சிக்ஸ் அடிக்கும் போதும், ஸ்டம்பிங் செய்யும் போதும் இந்த சத்தம் அதிகரித்து கொண்டே தான் இருந்தது.

போட்டி முடிந்த பின் இதைப் பற்றி கூறிய தோனி., தமிழ்நாட்டு மக்கள் என்னை “தல” என்று அழைக்கின்றனர். அது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அவர்கள் எனக்கு மட்டுமல்ல எனது அணியினருக்கும் அதிக சப்போர்ட் தருகின்றன. நான் தமிழக மக்களை மிகவும் நேசிக்கிறேன். நான் முதலில் மைதானத்தில் நுழையும் போது விசில் சத்தம் பறந்தது. முதலில் இதை நான் சி.எஸ்.கே பாடல் என நினைத்தேன். பின் தான் தெரிந்தது அது ரசிகர்களின் ஆரவாரம் என்று. எனக்கு கிடைத்த செல்ல பெயரில் தல என்ற பெயர் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.