இதை மட்டும் செய்தால் இந்திய அணி எளிதில் வெல்லலாம் டிராவிட் கருத்து

12வது 50 ஓவர் உலக கோப்பை போட்டிகள் வரும் 30ந் தேதி இங்கிலாந்து நாட்டில் தொடங்க உள்ளன. தற்போது இத்தொடரில் பங்கேற்கும் ஒல்வொரு அணிகளும் தீவிர பயிற்சி மற்றும் திட்டமிடுதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

உலக கோப்பைக்கான இந்திய அணி வருகிற மே 22ந் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்று 25ந் தேதி நியூஸ்லாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் எதிரணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை விரைவில் அவுட் செய்தால் உலக கோப்பை இந்தியாவுக்கு தான் என தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட்.

தற்போது இங்கிலாந்து மைதானங்கள் பேட்டிங்கிற்கு உதவுமாறு தயார் செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்த முறை உலக கோப்பை போட்டிகள் அனைத்தும் அதிக ரன் குவிக்கப்படும் போட்டிகளாக இருக்கும். இது போன்ற மைதானங்களில் பவுலர்களின் பங்கு மிகவும் முக்கியதுவம் வாய்ந்தது.

எதிரணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை சாய்த்தால் இந்திய அணி எளிதில் கோப்பையை கைப்பற்றும் . இதை செய்ய இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். பும்ரா, குல்தீப், சஹல் ஆகியோர் மிடில் ஓவரில் விக்கெட் வீழ்த்துவதில் வல்லவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

சர்ச்சையில் சிக்கிய புஜாரா வீடியோ.. கிரிக்கெட் வாழ்வின் கரும்புள்ளி வறுத்தெடுத்த டுவிட்டர்வாசிகள்

ராகுல் டிராவிட்க்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என அழைக்கப்படுபவர் இந்திய கிரிக்கெட் வீரர் சத்தீஸ்வர் புஜாரா. இவர் கிரிக்கெட் களத்தில் இந்திய வீரர்கள் விராட் கோலி, ரிஷப் பந்த் போன்றோர் எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்தாலும் சரி, இவரிடம் எதிரணி வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்தாலும் சரி சிறு புன்னகையுடன் தானுன்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். இதனால் இதுவரை எந்த சர்ச்சையிலும் புஜாரா சிக்கியது இல்லை.

இவரின் அமைதியான குணத்தாலும், சிறந்த பேட்டிங்காளும் பல இளம் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து அருகிறார். ஆனால் இன்று ரஞ்சி போட்டியில் நடந்த நிகழ்வு புஜாராவின் கிரிக்கெட் வாழ்வில் கரும்புள்ளியாக மாறிவிட்டது.

நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் செளராஷ்ட்ரா மற்றும் கர்நாடகா அணிக்கள் மோதின. இப்போட்டியில் தன் சொந்த ரஞ்சி அணியான செளராஷ்ட்ராக்காக விளையாடினார் புஜாரா.

செளராஷ்ட்ரா அணி தனது முதல் இன்னிங்ஸில் 22.5 ஒவரில் 64 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அப்போது புஜாரா 1 ரன்னில் களத்தில் இருந்தார். 23வது ஓவரின் இறுதி பந்தை அபிமன்யம் மிதுன் வீசினார். பந்து புஜாராவின் மட்டையில் பட்டு விக்கெட் கீப்பரிடம் தஞ்சமடைந்தது.

பந்து எட்ஜ் ஆனதை கவனிக்காத கள நடுவர் புஜாராவுக்கு விக்கெட் தர மறுத்துவிட்டார். விக்கெட் என்பது தெளிவாக தெரிந்தும் புஜாரா களத்தை விட்டு வெளியேறாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிகழ்வால் கர்நாடக அணி வீரர்கள் அதிருப்தி அடைந்தனர. இறுதியில் செளராஷ்ட்ரா அணி 178 ரன்கள் எடுத்திருந்த போது புஜாரா 45 ரன்னில் அபிமன்யம் மிதுன் பந்துவீச்சில் அவுட்டானார்.

புஜாரா போன்ற மூத்த கிரிக்கெட் வீரர்கள் இது போன்று நடந்து கொள்ளக் கூடாது. பல இளம் கிரிக்கெட் வீரர்கள் உங்களை போன்ற மூத்த கிரிக்கெட் வீரர்களை பார்த்து தான் கற்று கொள்ளங்கள். கள நடுவர் கவனிக்காவிட்டால் என்ன எட்ஜானால் உடனே பெவியன் செல்ல வேண்டியது தானே. இது போன்ற நிகழ்வுகள் இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரனமாகிவிடும். இது இவரது கிரிக்கெட் வாழ்வின் கரும்புள்ளி என பல இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.