ஆர்யா நடிப்பில் மகாமுனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

கடந்த 2011ம் ஆண்டு அருள்நிதி – இனியா நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் த்ரில்லர்  படம் மெளனகுரு. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சாந்தகுமார்.

எட்டு ஆண்டுகளுக்கு பின் தனது இரண்டாவது படத்தை இயக்கி உள்ளார் சாந்தகுமார். மகாமுனி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ஆர்யா ஹீரோவாகவும், இந்துஜா மற்றும் மஹிமா நம்பியார் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் காளி வெங்கட், ஜெயபிரகாஷ், அருள்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு, எஸ்.தமன் இசையமைத்துள்ளார். சாபு ஜோசப் எடிட்டராகப் பணிபுரிகிறார்.

இப்படத்தின் படபிடிப்பு ஏப்ரல் மாதமே முடிவடைந்த நிலையில், இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடபட்டுள்ளது. தற்போது இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.