இந்திய வீரர்களில் இர்பான் பதான் செய்த முதல் சாதனை!

இந்திய அணியின் அனுபவ ஆல் ரவுண்டர் இர்ஃபான் பதான். இவர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று பல வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாக ஐபிஎல் 2017 சீசனில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். தற்போது கிரிக்கெட் வர்ணணையாளராக பணியாற்றி வருகிறார்.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் டி20 லீக் தொடர் போன்று உலகின் மற்ற நாடுகளிலும் டி20 தொடர்கள் நடைபெற்று வருகின்றனர். இதில் கரீபியன் லீக், பிக் பேஷ் லீக், பாகிஸ்தான் பீரிமியர் லீக், ஆஃப்கானிஸ்தான் பிரீமியர் லீக், பங்களாதேஷ் பிரீமியர் லீக் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவின் ஐபிஎல் தொடரில் விளையாடினாலும், இந்திய வீரர்களை மற்ற நாடுகள் நடத்தும் டி20 லீக்கில் விளையாட அனுமதிப்பது இல்லை பிசிசிஐ. இதனால் இதுவரை எந்த இந்திய வீரரும் வெளிநாட்டு டி20 தொடரில் விளையாடியது இல்லை. ஏன் உலகின் தலை சிறந்த வீரர்களான தோனி விராட் கோலி கூட விளையாடியது இல்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு நடக்கப் போகும் கரீபியன் லீக் தொடர் ஏலத்தில் கலந்து கொள்ளும் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய ஆல் ரவுண்டர் இர்ஃபான் பதான் பெயர் இடம் பெற்றுள்ளது.

கரீபியன் லீக் தொடர் ஏலத்தில் ஏதாவது ஒரு அணி இர்ஃபான் பதானை ஏலத்தில் எடுக்கும் பட்சத்தில் வெளிநாட்டு டி20 தொடரில் விளையாடும் முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார். கரீபியன் தொடரில் விளையாட இர்ஃபான் பதானுக்கு பிசிசிஐ தடையில்லா சான்றிதழை வழங்கியதா என்ற தகவல் வெளியாகவில்லை.

உலக கோப்பை இந்திய அணியின் இரண்டு எக்ஸ் ஃபேக்டர் வீரர்கள் இவர்கள் தான் மைக்கேல் ஹோல்டிங்

வருகிற மே 30ந் தேதி இங்கிலாந்து நாட்டில் தொடங்க உள்ளது 12வது 50 ஓவர் உலக கோப்பை போட்டிகள். இத்தொடரில் இரண்டு முறை உலக சாம்பியன் அணியான இந்தியா ஜுன் 5ந் தேதி தனது முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியுடன் மோதுகிறது.

இந்த முறை உலக கோப்பையை வெல்லும் என கருதப்படும் இரண்டு அணிகளுள் ஒரு அணியாக இந்தியா உள்ளது. இந்திய அணியில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் தலை சிறந்த வீரர்களை கொண்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அணியின் பவுலிங் யூனிட் அகர வளர்ச்சி அடைந்துள்ளது. பும்ரா. சஹல், குல்தீப் ஆகியோர் பவுலிங்கில் அசத்தி வருகின்றன. அதே சமயம் பேட்டிங்கில் விராட் கோலி, ரோகித் சர்மா, தோனி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்திய அணியின் உலக கோப்பை வாய்ப்பு குறித்து வெஸ்ட் இண்டீஸ் லெஜன்ட் மைகேல் ஹோல்டிங் தெரிவித்திருப்பதாவது.,

இந்திலையில் இந்த முறை உலக கோப்பையை கைப்பற்ற இந்திய அணிக்கு முழு தகுதியும் உள்ளது. இந்திய அணியால் உலகின் எந்த மைதானத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். உலக கோப்பை இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் எக்ஸ்-ஃபேக்டராக இருப்பார்கள். அவர்கள் சிறப்பாக விளையாடினாள் உலக கோப்பையை இந்தியா நிச்சயம் வெல்லும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர் வெற்றிகளுக்கு காரணம் இதுதான் டிவில்லியர்ஸ் அதிரடி பேட்டி

நேற்று இரவு நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர் கொண்டது சிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. இப்போட்டியில் பெங்களுர் அணி 17 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலில் களம் இறங்கிய பெங்களுர் அணிக்கு விராட் கோலி 13 ரன்னில் அவுட்டாக, பார்த்திவ் பட்டேல் அதிரடி தொடக்கம் தந்தார். இதனால் அந்த அணி முதல் 6 ஓவரில் 70 ரன்களை குவித்தது. பாத்திவ் பட்டேல் 24 பந்தில் 43 ரன்களை குவித்து அவுட்டானார்.

பவர் பிளே முடிந்த பின்னர் குறுகிய இடைவெளியில் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது பெங்களுர் அணி. இதனால் டிவில்லியர்ஸ் மற்றும் மர்க்கஸ் ஸ்டாய்னிஸ் நிதான ஆட்டம் ஆட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதனால் பெங்களுர் அணி 17 ஓவரில் 138 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் கடைசி 3 ஓவரில் நிதானம் காட்டிய டிவில்லியர்ஸ் மற்றும் ஸ்டாய்னிஷ் ருத்ர தாண்டவம் ஆடினர். ஒவ்வொரு பந்தையும் பவுண்டரி லைனுக்கு வெளியே பறக்க விட்டனர். குறிப்பாக ஷமியின் ஒரு ஓவரில் பந்தை மைதானத்தின் கூரைக்கு மேல் அனுப்பினார் டிவில்லியர்ஸ்.

கடைசி 3 ஓவரில் மட்டும் 64 ரன்களை குவித்தது பெங்களுர் அணி. இதனால் அணியின் ஸ்கோர் 202 ரன்களை எட்டியது. டிவில்லியர்ஸ் 82, ஸ்டாய்னிஸ் 46 ரன்னில் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து களம் இறங்கிய பஞ்சாப் அணியில் மிகவும் எதிர்பார்த்த கெய்ல் 23 ரன்கள், கே.எல் ராகுல் 42 ரன்களில் அவுட்டாகினர். அந்த அணியில் எந்த வீரரும் நிலைத்து நின்று பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இதனால் அந்த அணியால் 20 ஓவர் முடிவில் 185 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பெங்களுர் அணி. இந்த வெற்றி மூலம் பிளே ஆஃப் சுற்றின் வாய்ப்பை தக்க வைத்துள்ளது பெங்களுர் அணி.

போட்டி முடிந்த பின் தனது ஆட்டம் குறித்து பேசிய டிவில்லியர்ல் கூறியதாவது., இப்போட்டியில் எனது விக்கெட் எவ்வளவு முக்கியம் என எனக்கு தெரியும். அதனால் முதலில் நிதானமாக ஆடலாம். கடைசி ஓவர்களில் அடித்து ஆடலாம் என முடிவு எடுத்தேன். எப்போதும் கடைசி ஓவரில் அடித்து ஆடுவது எளிதல்ல. முதலில் வெற்றி பெற 160 ரன்கள் மட்டும் போதும் என நினைத்தேன். போட்டியின் இரண்டாம் பாதியில் எளிதாக பேட் செய்ய முடிந்தது. அதனால் தான் 20 ரன்களை தொட முடிந்தது.

எங்களது பவுலர்கள் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தினர். முதலில் தொடர் தோல்விகளை எங்கள் அணி சந்தித்தாலும், தற்போது வெற்றி பாதைக்கு திரும்பியது சந்தோஷம் தருகிறது. தற்போது ஓர் அணியாக இணைந்து செயல்படுகிறோம் அதனால் தான் தொடர் வெற்றிகள் எங்களுக்கு கிடைத்துள்ளது.

RCB VS KXIP இன்றைய போட்டியில் எதிர்பார்க்கப்படும் அணி

இன்று இரவு 8 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் லீக் போட்டியில் ரவிசந்திரன் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

முதல் 8 போட்டிகளில் 7ல் தோல்வியடைந்த பெங்களுர் அணி கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும்  வெற்றி பெற்றுள்ளது. பெங்களுர் அணிக்கு அனுபவ வீரர் டேல் ஸ்டெயின் வருகைக்கு பின்னால் அந்த அணியின் தோற்றம் முழுமையாக மாறியுள்ளது. தற்போது அந்த அணியில் விராட் கோலி, டி-வில்லிய்ரஸ் மற்றும் மொயீம் அலி ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி தொடக்கத்தில் வெற்றிகளை குவித்தாலும், கடைசியாக விளையாடிய  போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக ஆடினாலும், கெய்ல் மற்றும் ராகுலை தவிர மற்ற வீரர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து பேட்டிங் செய்யவில்லை.

இன்றைய போட்டியானது இரு அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய மிக முக்கியமானது. இதனால் இன்றைய போட்டி மிகுந்த சுவாரஷ்யம் உள்ளதாக எதிர் பார்க்கப்படுகிறது.

ஆர்.சி.பி எதிர்பார்க்கப்படும் அணி: விராட் கோலி, பார்திவ் பட்டேல், ஏபி டி வில்லியர்ஸ், மொயீம் அலி, மார்க்கஸ் ஸ்டாய்னிஷ், அக்ஷிதீப் நாத், பவன் நேகி, டேல் ஸ்டெயின், யுஸ்வேந்திர சஹல், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி.

பஞ்சாப் எதிர்பார்க்கப்படும் அணி: கிறிஸ் கெய்ல், கே.எல் ராகுல், மயங்க அகர்வால், டேவிட் மில்லர், மந்தீப் சிங், நிக்கோலஸ் பூராண், ரவிசந்திரன் அஸ்வின், முருகன் அஸ்வின், முஜீப் உர் ரெஹ்மான், அர்ஸ்தீப் சிங், மொஹமது ஷமி.

கங்குலி தோனி கோலி சிறந்த கேப்டன் யார் சேவாக் தந்த அதிரடி பதில்

நான் விளையாடிய கேப்டன்களிலே கங்குலி தான் மிகவும் திறமை வாய்ந்தவர். தோனி மற்றும் விராட் கோலி எல்லாம் அவருக்கு கீழ் தான் என இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரரும், தொடக்க ஆட்டக்காரருமான விரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

கடந்த 2000மாவது ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி மேட்ச் பிக்சிங் புகாரால் நிலை குலைந்து போனது. அதன் பின் தான் இந்திய அணிக்கு கேப்டனாக லந்தார் சவுரவ் கங்குலி.

அவர்தான் நிலை குலைந்து இருந்த இந்திய அணியை மறு உருவாக்கம் செய்தார். பல திறமையான இளம் வீரர்களை கண்டெடுத்து அணியில் இணைத்தார். 2003 உலக கோப்பை இறுதி போட்டி வரை அழைத்து சென்றார் கங்குலி. உலகின் தலை சிறந்த கிரிக்கெட் அணியாக இந்தியாவை மாற்றினார்.

கங்குலி மிகவும் திறமைசாலி. அவர் கேப்டனாக கள வியூகங்களை அற்புதமாக வகுக்க கூடியவர். ஒரு வீரரை பார்த்தவுடன் அவரது திறமை என்ன என்பதை நொடியில் எடை போட்டு விடுவார்.

அனுபவம் உள்ள வீரர்கள் கொண்ட அணியை கேப்டனாக வழி நடத்துவது மிகவும் எளிது. ஆனால் கங்குலி அனுபவமில்லாத வீரர்களை கொண்டு அணியை கட்டமைத்தார். அணியை சிறப்பாகவும் வழி நடத்தினார்.

நான் கங்குலி, தோனி, கோலி என மூன்று கேப்டன்களுக்கு கீழும் விளையாடி உள்ளேன். எனது அனுபவத்தில் கங்குலி தான் சிறந்த கேப்டன் திறமைசாலி. தோனி, கோலி எல்லாம் அவருக்கு ஒருபடி கீழ்தான் என சேவாக் தெரிவித்துள்ளார்.

விஸ்டன் கிரிக்கெட்டர் விருதை 3வது முறையாக பெற்ற விராட் கோலி

ஒவ்வொரு ஆண்டும் சிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்தாண்டு விஸ்டன் கிரிக்கெட்டர் விருதை பெறப்போகும் வீரர்கள் பெயர்கள் வெளியாகி உள்ளது. இதனை விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக் புத்தகத்தின் எடிட்டர் வெளியிட்டுள்ளார்.

அதில் இந்தாண்டின் தலை சிறந்த முன்னனி கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தலை சிறந்த முன்னனி கிரிக்கெட் வீராங்கனை ஸ்ருமிதி மந்தனா மற்றும் தலை சிறந்த முன்னனி டி20 வீரர் ரஷீத் கான் என குறிப்பிடபட்டுள்ளது.

விராட் கோலி விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் விருதை தொடர்ந்து 3வது முறையாகவும், ரஷீத் கான் தொடர்ந்து 2வது முறையாக மற்றும் ஸ்ருமிதி மந்தனா முதல் முறையாககவும் பெருகின்றனர்.

இல் விருதுகளை பெறப்போகும் விராட் கோலி மற்றும் ஸ்ருமதி மந்தனா ஆகியோருக்கு பல முன்னாள் வீரர்களும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஐ.பி.எல்லை வைத்து கோலியை எடை போடாதீர்கள் திலிப் வெங்சர்க்கார் கருத்து

உலகின் தலை சிறந்த வீரராக இருக்கும் விராட் கோலி கடந்த 3 மூன்று மாதங்களாக கேப்டனாக பல சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்ரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணியின் கேப்டனாக இழந்தார் லிராட் கோலி. அதனை தொடந்து ஐ.பி.எல் தொடரில் கோலி வழி நடத்தும் பெங்களுர் அணி முதல் 6 போட்டிகளில் தோற்று ஏறக்குறைய பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது.

இதனால் பல முன்னாள் வீரர்களும் லிராட் கோலியின் கேப்டன்சியை விமர்சனம் செய்ய ஆரமித்து விட்டனர். கம்பீர் விராட் கோலியை அப்பிரண்டீஸ் கேப்டன் என விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் விராட் கோலியை இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ரோகித் சர்மாவை புதிய கேப்டனாக நியமிக்கும் படி பல கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது கருத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஐ.பி.எல் போட்டிகளை கொண்டு விராட் கோலியின் கேப்டன்சியை எடை போட வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கார் பேட்டியளித்துள்ளார்.

விராட் கோலி மிகச் சிறந்த பேட்ஸ்மேன். அவர் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் பேட்டிகளில் நல்ல ஃபார்மில் உள்ளார். அவர் உலகின் தலை சிறந்த கேப்டன்களுள் ஒருவர்.

ஐ.பி.எல் போட்டிகளை வைத்து விராட் கோலியின் பேட்டிங்கையும், கேப்டன்சியையும் எடை போடக் கூடாது. அவர் ஒருநாள் மற்றும் உலக கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார்.

உலகப் கோப்பைக்கான இந்திய அணி 4ம் வரிசை வீரரை ஐ.பி.எல் போட்டிகள் கொண்டு தேர்வு செய்வது தவறானது. அந்த இடத்திற்கு அனுபவ வீரர் அஜங்கியா ரகானே அல்லது கே.எல் ராகுலை நியமிப்பதே நல்லது என தெரிவித்துள்ளார்.

கோலி ஒரு அப்பிரண்டீஸ் கம்பீரின் சாட்டையடி விமர்சனத்தால் புதிய சர்ச்சை

தொடர்ந்து பெங்களுர் அணிக்கு வெற்றிகளை பெற்று கொடுக்காமல் இருக்கும் விராட் கோலி எப்படி தான் இன்னும் கேப்டன் பதவியில் நீடிக்கிறாரோ? என்று இந்தாண்டு ஐ.பி.எல் தொடர் தொடங்கும் முன்பே கோலியின் மீது தனது கடுமையான லிமர்சனத்தை முன் வைத்தார் கவுதம் கம்பீர்.

அதன்படியே விராட் கோலி தலைமையிலான பெங்களுர் அணி விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வி அடைந்து ஐ.பி.எல் வரலாற்றில் மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு கம்பீர் எழுதியுள்ள கட்டுரையில் விராட் கோலியை இன்னும் ஒருபடி மேல் சென்று விமர்சனம் செய்துள்ளார்.

” விராட் கோலி என்ற பேட்ஸ்மேன் பேட்டிங்கில் மாஸ்டர். ஆனால் விராட் கோலி என்ற கேப்டன் ஒரு அப்பிரண்டீஸ். கோலி கேப்டன்சிபில் இன்னும் நிறைய கற்று கொள்ள வேண்டியுள்ளது. ஒவ்வொரு முறையும் பவுலர்களை குறை சொல்வதை விட்டு தானே குற்றங்களை ஏற்று கொள்ள வேண்டும்.

அந்த அணியின் தவறுகள் எங்கே தொடங்கியது என்பது குறித்து எழுதியுள்ள கம்பீர். கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் தான் தவறுகள் தொடங்கியது. மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் நேதன் குல்டர் நைல் போன்ற வீரர்கள் தொடக்கம் முதல் ஐ பி எல் விளையாட முடியாது என தெரிந்தும் ஐ.பி.எல் ஏலத்தில் அவர்களை ஏன் வாங்கினார்கள்.

பெங்களுர் அணியின் மைதானம் (சின்ன சுவாமி மைதானம்) தட்டையாகவும் சிறிதாகவும் இருக்கும் போது முழுமையான வேகப் பந்து வீச்சாளரை வாங்காமல் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் போன்ற ஆல் ரவுண்டரை ஏன் வாங்சினார்கள் ஏன் வாங்கினார்கள் என கட்டுரையில் எழுதியுள்ளார்.

பல முன்னாள் இந்திய வீரர்களும் விராட் கோலியை தேரடியாக விமர்சிக்க தயங்கும் போது, கம்பீரின் நேரடி லிமர்சனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.”

கோலியின் கேப்டன்சி எப்படி உள்ளது தோனி பரபரப்பு பேட்டி

இந்தாண்டு ஐ.பி.எல் தொடரில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணி தொடர்ந்து 5 தோல்விகளை சந்தித்துள்ளது. இதனால் அவரின் கேப்டன்சி மீது பல கேள்விகள் எழும்பி உள்ளது. குறிப்பாக விராட் கோலியை உலகப் கோப்பைக்கான இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கலாமா என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கோலியின் கேப்டன்சி குறித்தும், அவரது கேப்டன்சியை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை தோனியிடம் நிரூபர்கள் கேட்டனர். அதற்கு அவர் தெரிவித்ததாவது.,

தற்போது வரை கோலியின் கேப்டன்சிபில் எனக்கு எந்த குறையும் தெரியவில்லை. ஐ.பி.எல் போட்டிகளை வைத்து கோரியின் கேப்டன்சியை எடை போட முடியாது. கேப்டன்சி என்பது சுளத்தில் எப்படி சாமர்த்தியமாக முடிவு எடுக்கிறார் என்பதை பொறுத்தே அமையும்.

களத்தில் அணியின் வீரர்கள் சிறப்பாக லிளையாடாவிட்டால் அவர் என்ன செய்ய முடியும். முதலில் பெங்களுர் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் நெஹ்ரா பந்துக்கு பந்து அறிவுரை வழங்குவதை நிறுத்த வேண்டும். இது போன்று பந்துக்கு பந்து அறிவுரை வழங்கினால் கோவியால் சுயமாக சிந்திக்கவே முடியாது. அப்புறம் எப்படி சிறந்த கேப்டனாக வர முடியும்.

டெஸ்ட் போட்டிகளின் போது கோலி தானே பல முடிவுகளை எடுத்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார். பிறகு ஏன் நெஹ்ராவும்,கேரி கிறிஸ்டனும் கோலியை நம்புவதில்லை.

களத்தில் கோலியே முடிவு எடுக்கட்டும், வெற்றியோ தோல்வியோ நிறைய அனுபவம் கிடைக்கும். இதுவே அவரை சிறந்த கேப்டனாக மாற்றும்.

கவலை வேண்டாம் கோலி இன்னும் கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளது ஆறுதல் கூறிய கேரி கிறிஸ்டன்.

கவலை வேண்டாம் இன்னும் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள விராட் கோலிக்கு ஆறுதல் கூறியுள்ளார் பெங்களுர் அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன்.

கடந்த 2011ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்ற போது பயிற்சியாளராக இருந்தவர் தென்னாப்ரிக்க அணியின் முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டன். அவர் தான் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.

நேற்று நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களுர் அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வேகப்பந்து வீச்சாளர்களின் மோசமான பந்து வீச்சால் கொல்கத்தா அணியிடம் வீழ்ந்தது.

இது பெங்களுர் அணியின் 5 வது தொடர் தோல்வியாகும். முதல் ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளதால் கோலி மற்றும் பெங்களுர் அணியின் அனைத்து வீரர்களும் தற்போது சோகத்தில் உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் அந்த அணியின் பயிற்சி கேரி கிறிஸ்டன் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, எந்த ஒரு அணிக்கும் இது போன்ற தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வருவது மிக கடினமான ஒன்று. இது போன்ற தோல்விகள் எதிர்பார்க்காதது. இந்த தோல்வியில் இருந்து வீரர்கள் இயல்பு நிலைக்கு உடனடியாக திரும்ப வேண்டியது அவசியம்.

நான் கோலிக்கு சொல்வதெல்லாம் ஒன்று தான். நாம் மும்பை இந்தியன்ஸ் அணியை உதாரணமாக எடுத்து கொள்வோம். நாம் முயற்சி செய்தால் இனி வரும் 9 போட்டிகளை வென்று கோப்பையை கைப்பற்றலாம். எந்த கவலையும் வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

கதறி அழுத கோலி தோல்விக்கு எனது அணியில் இருக்கும் அவர் தான் காரணம்

கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்விக்கு டிம் சவுத்தி தான் காரணம் என பெங்களுர் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களுர் அணி 20 ஓவர் முடிவில் 205 ரன்கைளை குவித்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக விராட் கோலி (84), டி வில்லியர்ஸ் (63), மார்க்ஸ் ஸ்டாய்னிஸ் (28) ரன்களை குவிந்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு கிறிஸ் லின் ( ) , ராபி உத்தப்பா (), நிதிஷ் ரானா () சிறப்பாக ஆடினர். இருந்தாலும் அந்த அணியின் வெற்றிக்கு கடைசி 18 பந்தில் 53 ரன்கள் தேவைப்பட்டது.

இந்த சூழ்நிலையில் களம் இறங்கிய ரஸல் 13 பந்துகளில் 48 ரன்களை குவித்தார். இதில் 7 சிக்சர் 1 பவுண்டரிகள் அடங்கும். இதனால் கொல்க்ததா அணி 19.1 ஓவரில் 206/5 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பின் பேட்டியளித்த விராட் கோலி தோல்வி குறித்து கூறியதாவது. இன்று நாங்கள் அடைந்த தோல்வியை ஏற்று கொள்ள முடியாது. எங்கள் மனம் சுக்கு நூறாய் உடைந்து போய் உள்ளது. இன்றைய போட்டியில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினார்கள். 205 ரன்களையும் குவித்தனர்.

எந்த மைதானத்திலும் 200+ ரன்கள் என்பது நல்ல இலக்கு தான். ஆனால் இப்படி பந்து வீசினால் தோல்வி தான் அடைய முடியும். முகமது சிராஜ் மீது அதிக நம்பிக்கை வைத்தேன். என்னை எமாற்றி விட்டார். நாங்கள் பல நல்ல கேட்சுகளையும் கோட்டை விட்டோம், பில்டிங்கிலும் சொதப்பினோம்.

மேலும் டிம் சவுத்தி போன்ற வீரர்கள் முதல் ஓவரில் இருந்து மோசமாக வீசினால் நான் என்ன செய்ய முடியும். யாரை குறை சொல்ல முடியும். இந்த தோல்விக்கு டிம் சவுத்தி தான் பொறுப்பேற்க வேண்டும்.

பெங்களுர் அணிக்கு பெரும் பின்னடைவு தாயகம் திரும்பும் 4 வெளிநாட்டு வீரர்கள்

வழக்கம் போல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிக்கு இந்தாண்டும் மோசமான தொடக்கமாகவே அமைந்துள்ளது. இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

இரு தினங்களுக்கு முன் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் நேதன் குல்டர்நைல் மற்றும் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் பெங்களுர் அணியில் இணைந்தனர். இதனால் 5 வது போட்டியில் இருந்தாவது பெங்களுர் அணி வெற்றி பாதைக்கு திரும்பும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் நியூஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் உலக கோப்பை தொடருக்கான 15 கொண்ட நியூஸ்லாந்து அணியை அறிவித்துள்ளது. இதில் தற்போது ஐ.பி.எல் தொடரில் விளையாடி வரும் பல முக்கிய வீரர்கள் (வில்லியம்சன், காலின் -டி- கிராண்ட்ஹோம், காலின் மன்ரோ, டிம் சவுத்தி, டிரன்ட் போல்ட், லூக்கி பெர்குசன், இஷ் சோதி, மிட்செல் சாண்ட்னர்) இடம் பெற்றுள்ளன.

SEDDON PARK, HAMILTON, NEW ZEALAND – 2017/02/19: Tim Southee (R) and Colin de Grandhomme (L) in their partnership during the International match between New Zealand and South Africa in Hamilton in New Zealand. South Africa wins by 4 wicket. (Photo by Shirkey Kwok/Pacific Press/LightRocket via Getty Images)

மேலும் இந்த நியூஸ்லாந்து அணி ஆஸ்ரேலியா அணியுடன் 3 அதிகாரப்பூர்வமற்ற ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இப்போட்டிகள் எப்ரல் 13ந் தேதி தொடங்கி மே 1 வரை நடைபெறுகிறது.

இதனால் பெங்களுர் அணியில் இருக்கும் நேதன் குல்டர்நைல், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், காலின் -டி- கிராண்ட்ஹோம், டிம் சவுத்தி என நான்கு முக்கிய வீரர்கள் ஒரு வாரத்திற்குள் தாயகம் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

இதுவரை நான்கு போட்டிகளில் பங்கேற்றுள்ள பெங்களுர் அணிக்கு பேட்டிங், பீல்டிங், பவுலிங் என எதுவும் செட்டாகவில்லை. இந்நிலையில் முக்கிய வீரர்கள் தாயகம் திரும்ப உள்ளதால் பெங்களுர் அணி மேலும் பின்னடைவை சந்திக்க உள்ளது. இதனால் விராட் கோலி விழி பிதுங்கி உள்ளார்.

அதிர்ச்சி நடுவர் அறைக்கு சென்று தகாத வார்த்தையில் பேசிய விராட் கோலி

போட்டி முடிந்த பின் நடுவர்கள் அறைக்கு சென்று விராட் கோலி நடுவர்களை தகாத வார்த்தையில் திட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களுர் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை அணி. இப்போட்டியில் பெங்களுர் அணி வெற்றி பெற கடைசி பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது. மலிங்கா வீசிய கடைசி பந்தில் சிவம் துபே 1 ரன் மட்டும் எடுக்க மும்பை அணி வெற்றி த்ரில் பெற்றது.

இதனையடுத்து மலிங்கா வீசிய கடைசி பந்து நோ-பாலாக இருப்பதும், அதை நடுவர் எஸ்.ரவி கவனிக்காததும் மைதானத்தில் இருந்த பெரிய திரை டி.வி ரீப்ளேவில் தெரிய வந்தது. இதனை பார்த்த கோலி கோபத்தின் உச்சத்திற்கு சென்றார்.

இச்சம்பவம் நடந்த சில நிமிடங்களிலே நடுவர்கள் அறைக்கு சென்ற கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நடுவர்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சில தகாத வார்த்தைகளிலும் திட்டியுள்ளார். மேலும் அந்த பால் நோ-பாலாக அறிவித்திருந்தால் போட்டி தலைகீழாக மாறியிருக்கும். விதிமுறைகளை மீறி உங்களிடம் வாக்குவாதம் செய்வதற்கு அபராதம் விதித்தாலும் பரவாயில்லை என போட்டி நடுவர் மனு நாய்யரிடம் கூறியுள்ளார்.

இதன் பின் அதே கோபத்துடன் பேட்டியளித்த கோலி கூறியதாவது, நாங்கள் கிளப் லெவல் கிரிக்கெட் விளையாடவில்லை. உயர் தர ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறோம். நடுவர்கள் கண்களை திறந்து வைத்து கொண்டு கண்காணிக்க வேண்டும் என கோபத்துடன் கூறியுள்ளார்.

இன்றைய போட்டியில் மும்பை அணியில் இடம் பெறும் சுழல் ஜாம்பவான்

ஐ.பி.எல் 12வது சீசனின் இன்று நடக்கும் ஏழாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றனர். இப்போட்டி பெங்களுர் சின்னசாமி மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

இன்று மோதும் இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளனர். எனவே இன்று நடக்கும் முதல் போட்டியில் இரு அணிகளும் முதல் வெற்றியை பதிவு செய்ய தீவிரம் காட்டும்.

மும்பை அணியை பொறுத்த வரை முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பெளலிங் சுமாராகவே இருந்தது. பேட்டிங்கில் யுவராஜ் சிங் மட்டும் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். ஆனால் பந்துவீச்சில் ஒரு வீரர் கூட எக்கனாமிக்காக பந்து வீசவில்லை.

மேலும் முதல் போட்டியில் முழுநேர சுழற் பந்து வீச்சாளர் மும்பை அணியில் இடம் பெறாதது ஒரு குறையாக கருதப்பட்டது. இதனால் இன்றைய போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ராசிக் சலாம் நீக்கப்பட்டு, கடந்த ஆண்டு மும்பை அணிக்கு சிறப்பாக பந்து வீசிய மயங் மார்கண்டே இன்றைய போட்டியில் இடம் பெறுகிறார்.

கடந்த ஆண்டு மும்பை அணிக்காக 14 போட்டியில் விளையாடிய மயங் மார்க்கண்டே 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மேலும் அணியில் பென் கட்டிங் நீக்கப்பட்டு மும்பை அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்கா இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் புகழ் பெற்ற 100 வீரர்கள் தோனி கோலிக்கு டஃப் கொடுத்த யுவராஜ் சிங்

உலகின் புகழ் பெற்ற 100 வினையாட்டு வீரர்களின் பட்டியலை இ.எஸ்.பி.என் ஸ்போர்ட்ஸ் வலைதளம் வெளியிட்டுள்ளது. ஒரு வீரரை சமூக வலைதளங்களில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை, கூகுள் டிரெண்டிங் மற்றும் அவர்கள் பெயருக்கான மதிப்பு ஆகிய மூன்றை அடிப்படையாக கொண்டு இப்பட்டியல் தயாரிக்கபட்டுள்ளது.

இந்த பட்டியலில் உலக புகழ் பெற்ற வீரர்கள் ரொனால்டோ, லீபிரான் ஜேம்ஸ், மெஸ்ஸி ஆகியோர் முதல் மூன்று இடங்களிலும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 7வது இடத்திலும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 13வது இடத்திலும் உள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் இருக்கும் யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் யாரும் எதிர்பார்க்காத வகையில் 18 மற்றும் 22வது இடங்களை பிடித்துள்ளனர்.

அதே போல் இந்திய கிரிக்கெட் அணியின் ஹிட் மேன் 46வது இடத்தையும், ரவிசந்திரன் அஸ்வின் 42வது இடத்தையும் பிடித்துள்ளனர். இப்பட்டியலில் இல்லாத உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் ெபயரை கமென்ட் செய்க.