உலக கோப்பையில் சுழற்சி முறையில் வீரர்கள் களம் இறக்க படுவார்கள் லிராட் கோலி திட்டவட்டம்

50 ஓவர் உலக கோப்பை போட்டிகள் வருகிற மே 30ந் தேதி தொடங்க உள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ ஏற்கெனவே அறிவித்து விட்டது. இந்நிலையில் உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்க நாளை இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது இந்திய அணி.

இந்நிலையின் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்த்திரி ஆகியோர் செய்தியாளர்களை இன்று சந்தித்தனர். அப்போது விராட் கோலி கூறியதாவது.,

தற்போது உலக கோப்பை போட்டிகளில் விளையாட இந்திய அணி தயார் நிலையில் உள்ளது. இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் உச்சகட்ட எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது அனைத்து வீரர்களுக்கும் சவாலாக இருக்கும். அதை நாங்கள் நிச்சயம் பூர்த்தி செய்வோம்.

இம்முறை உலக கோப்பை அணியில் தேர்வான ஒவ்வொரு வீரருக்கு சுழற்சி முறையில் களம் இறக்கப்படுவார்கள். அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

அனைத்து வீரர்களும் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட்டு விளையாடினால் கோப்பையை மீண்டும் கொண்டு வர வாய்ப்பு உள்ளது என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

மூன்று அதிரடி மாற்றங்களுடன் புதிய உலக கோப்பை இங்கிலாந்து அணி அறிவிப்பு

12வது 50 ஓவர் உலக கோப்பை போட்டிகள் வரும் மே 30ந் தேதி தொடங்கி ஜூலை 14 ந் தேதி வரை இங்கிலாந்து நாட்டில் நடைபெற உள்ளது. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட அதிகாரப்பூர்வ இறுதி இங்கிலாந்து அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

இதில் மூன்று முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சமீப காலமாக லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ஜோஃப்ரா ஆர்ச்சர் அணியில் இடம் பெற்றுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு நாள் தொடரில் மோசமாக ஆடிய டேவிட் வில்லி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதே போல் தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸுக்கு மாற்றாக ஜேம்ஸ் வின்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். அணியில் மூன்றாவது ஸ்பின்னராக லியம் டேவ்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலக கோப்பை 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி: இயான் மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், ஜேம்ஸ் வின்ஸ், ஜானி பே்ர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், லியம் டேவ்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், லியம் பிளங்கெட், கிறிஸ் வோக்ஸ், மொயீம் அலி, அடில் ரஷித், டாம் கர்ரன், மார்க் வுட்.

உலக கோப்பையில் மிகவும் ஆபத்தான அணி இதுதான் பிரைன் லாரா எச்சரிக்கை

அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த 50 ஓவர் உலக கோப்பை போட்டிகள் வருகிற மே 30ந் தேதி தொடங்க உள்ளது. 27 ஆண்டுகளுக்கு பின் இம்முறை உலக கோப்பையில் ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மோத உள்ளன.

இம்முறை உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிகளில் ஒன்று தான் வெல்லும் என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. பேலும் மேற்கு இந்திய தீவுகள், ஆஸ்ரேலியா, நியூஸ்லாந்து போன்ற அணிகள் கடும் சாவால் அளிக்கும் எனவும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் ஆஸ்ரேலியா அணி தான் மிகவும் ஆபத்தான அணியாக இருக்கும் என மேற்கு இந்திய அணியின் லெஜன்ட் பிரைன் லாரா கூறியுள்ளார். அவர் கூறி உள்ளதாவது.,

வார்னர் மற்றும் ஸ்மித்தின் வருகை அந்த அணிக்கு வலு சேர்த்துள்ளது. அவர்களின் நிலைதன்மை மற்றும் ஃபார்ம் சிறப்பாக உள்ளது. சமீபத்தில் ஆஸ்ரேலியா அணி சிறப்பாக விளையாடி உள்ளது. தற்போது உள்ள ஆஸ்ரேலிய அணி 1999 மற்றும் 2003ல் உள்ள அணி போன்று வலிமையானதாக இல்லாவிட்டாலும், அவர்களை குறைத்து எடை போட முடியாது. அவர்கள் நடப்பு சாம்பியன். உலக கோப்பை என்று வந்து விட்டால் அந்த அணி மிகவும் ஆபத்தான அணியாக மாறிவிடும். இந்த முறையில் அப்படித்தான் இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

உலக கோப்பையை இந்த அணி தான் வெல்லும் திட்டவட்டமாக தெரிவித்த கம்பீர்

அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டிகள் வருகிற மே 30ந் தேதி இங்கிலாந்து நாட்டில் நடக்க உள்ளது.

இம்முறை உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிக்கு தான் வாய்ப்பு உள்ளது எனவும், ஆஸ்ரேலியா, நியூஸ்லாந்து, வெஸ்ட் இன்டிஸ் அணிகள் உலக கோப்பையை வெல்ல கடும் சவால் அளிக்கும் அணிகள் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ஆஸ்ரேலியா அணிதான் உலக கோப்பையை வெல்லும் என கருத்து தெரிவித்துள்ளார்.

இம்முறை உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகள் அனைத்தும் ஏறக்குறைய சமபலத்தில் உள்ளன. போட்டிகள் பார்ப்பதற்கு சுவாரஷ்யமாக இருக்கும் என நினைக்கிறேன். உலக கோப்பை போட்டிகளில் விளையாட போகும் வீரர்கள் சுயநலமின்றி தங்கள் அணி வெற்றி பெற உழைக்க வேண்டும்.

என்னை பொறுத்த வரை இந்த முறை உலக கோப்பையை வெல்ல ஆஸ்ரேலியா அணிக்கு தான் அதிக வாய்ப்பு. இங்கிலாந்து இந்திய அணிகளுக்கு வாய்ப்பு இரண்டாவது தான். இந்த முறை உலக கோப்பை போட்டிகளில் ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி அதிக ரன்கலை குவிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

இதை மட்டும் செய்தால் இந்திய அணி எளிதில் வெல்லலாம் டிராவிட் கருத்து

12வது 50 ஓவர் உலக கோப்பை போட்டிகள் வரும் 30ந் தேதி இங்கிலாந்து நாட்டில் தொடங்க உள்ளன. தற்போது இத்தொடரில் பங்கேற்கும் ஒல்வொரு அணிகளும் தீவிர பயிற்சி மற்றும் திட்டமிடுதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

உலக கோப்பைக்கான இந்திய அணி வருகிற மே 22ந் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்று 25ந் தேதி நியூஸ்லாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் எதிரணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை விரைவில் அவுட் செய்தால் உலக கோப்பை இந்தியாவுக்கு தான் என தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட்.

தற்போது இங்கிலாந்து மைதானங்கள் பேட்டிங்கிற்கு உதவுமாறு தயார் செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்த முறை உலக கோப்பை போட்டிகள் அனைத்தும் அதிக ரன் குவிக்கப்படும் போட்டிகளாக இருக்கும். இது போன்ற மைதானங்களில் பவுலர்களின் பங்கு மிகவும் முக்கியதுவம் வாய்ந்தது.

எதிரணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை சாய்த்தால் இந்திய அணி எளிதில் கோப்பையை கைப்பற்றும் . இதை செய்ய இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். பும்ரா, குல்தீப், சஹல் ஆகியோர் மிடில் ஓவரில் விக்கெட் வீழ்த்துவதில் வல்லவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை இந்திய அணியின் இரண்டு எக்ஸ் ஃபேக்டர் வீரர்கள் இவர்கள் தான் மைக்கேல் ஹோல்டிங்

வருகிற மே 30ந் தேதி இங்கிலாந்து நாட்டில் தொடங்க உள்ளது 12வது 50 ஓவர் உலக கோப்பை போட்டிகள். இத்தொடரில் இரண்டு முறை உலக சாம்பியன் அணியான இந்தியா ஜுன் 5ந் தேதி தனது முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியுடன் மோதுகிறது.

இந்த முறை உலக கோப்பையை வெல்லும் என கருதப்படும் இரண்டு அணிகளுள் ஒரு அணியாக இந்தியா உள்ளது. இந்திய அணியில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் தலை சிறந்த வீரர்களை கொண்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அணியின் பவுலிங் யூனிட் அகர வளர்ச்சி அடைந்துள்ளது. பும்ரா. சஹல், குல்தீப் ஆகியோர் பவுலிங்கில் அசத்தி வருகின்றன. அதே சமயம் பேட்டிங்கில் விராட் கோலி, ரோகித் சர்மா, தோனி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்திய அணியின் உலக கோப்பை வாய்ப்பு குறித்து வெஸ்ட் இண்டீஸ் லெஜன்ட் மைகேல் ஹோல்டிங் தெரிவித்திருப்பதாவது.,

இந்திலையில் இந்த முறை உலக கோப்பையை கைப்பற்ற இந்திய அணிக்கு முழு தகுதியும் உள்ளது. இந்திய அணியால் உலகின் எந்த மைதானத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். உலக கோப்பை இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் எக்ஸ்-ஃபேக்டராக இருப்பார்கள். அவர்கள் சிறப்பாக விளையாடினாள் உலக கோப்பையை இந்தியா நிச்சயம் வெல்லும் என அவர் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பையில் இந்த இரு வீரர்களுக்கு பந்து வீசுவது மிக கடினம் புவனேஷ்வர் குமார் பேட்டி

தற்போதைய கிரிக்கெட் உலகில் தலைசிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருப்பவர் புவனேஷ்வர் குமார். இவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இரண்டாவது முறையாக இடம் பிடித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடர் புவனேஷ்வர் குமாருக்கு சுமாராகவே அமைந்தது. தற்போது இங்லாந்தில் நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிகளுக்கு தயாராகி வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்தில் உள்ள மைதாஙை்கள் அனைத்தும் தட்டையாக(பிளாட் பிட்ச்) பேட்ஸ்மேனுக்கு ஆதரவாக மாற்றப்பட்டுள்ளது. பிட்சில் இருந்து எந்த ஒரு உதவியும் பந்து வீச்சாளர்க்கு கிடைக்காது. இதனால் இங்கிலாந்து மைதாஙை்களில் பந்து வீசுவது என்பது மிகவும் சவாலான ஒன்று.

இந்நிலையில் இங்கிலாந்து மைதாங்களில் பந்து வீசுவது குறித்து புவனேஷ்வர் குமார் பேட்டி ஒன்றில் கூறியதாவது.,

எனக்கு இங்கிலாந்தில் பந்து வீசுவது மிகவும் பிடிக்கும். அங்கு பந்து ஸ்விங் ஆகும். அதுதான் என்பவம். ஆனால் தற்போது மைதானங்கள் தட்டையாக்கபட்டு விட்டன. பந்து வீசுவது கடினம் தான். இந்திய அணியில் உலக தரம் வாய்ந்த பவுலர்கள் உள்ளனர். எங்களால் போட்டியை தொடக்கம் முதல் முடிவு வரை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அங்குள்ள சூழ்நிலையை பார்த்து திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படும். கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் பவுலிங் மேம்பட்டு உள்ளது. இந்திய அணியின் பவுலர்கள் எந்த வகை மைதானத்திலும் சிறப்பாக செயல்பட முடியும். என்னை பொறுத்த வரை உலக கோப்பை போட்டிகளில் டேவிட் வார்னர் மற்றும் ஆன்ரே ரஸல் என்ற இரு வீரர்களுக்கு பந்து வீசுவது மிக கடினம். அவர்கள் தற்போது நல்ல ஃபார்மில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

உலக கோப்பையில் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தாது முன்னாள் கேப்டன் கருத்து

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகள் மோதும் போட்டிகளை காண உலகம் முழுவதும் ஒரு ரசிகர் பட்டாளம் எப்போதும் உண்டு.

கடந்த சில ஆண்டுகளாக இவ்விரு அணிகளும் ஐ.சி.சி நடத்தும் தொடர்களில் மட்டுமே பங்கேற்று வருகின்றன. அதை தவிர தனிபட்ட முறையில் ஒருநாள், டெஸ்ட், டி20 தொடர்களில் விளையாடுவது இல்லை.

உலக கோப்பை போட்டிகளை பொறுத்தவரை இதுவரை இந்திய அணியை பாகிஸ்தான் அணி தோற்கடித்தது இல்லை. ஆனால் 2017ம் ஆண்டு சாம்பியன் டிரோபி தொடர் இறுதி போட்டியில் இந்திய அணியை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

இந்நிலையில் ஜூன் 16ந் தேதி நடைபெறும் உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வெல்லும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, நான் பாகிஸ்தான் அணியை பல ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். சில போட்டிகளில் தோல்வி அடைந்த பிறகும் மனம் தளராமல் போராடி தொடரை வெற்றி பெறும் அளவிற்கு அந்த அணி வல்லமை பெற்றுள்ளது.

இது வரை பாகிஸ்தான் உலக கோப்பையில் இந்திய அணியை தோற்கடித்தது இல்லை. பாகிஸ்தான் அணி 2017 சாம்பியன் ட்ரோபியில் இந்தியாவை வீழ்த்திய தன்னம்பிக்கையில் இம்முறை உலக கோப்பை போட்டிகளில் களம் இறங்கும். அதனால் எளிதில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தும்.

அதே போல் சாம்பியன் ட்ரோபி தோல்விக்கு இந்திய அணி பதிலடி தர நினைக்கும் இதனால் ஜூன் 16ந் தேதி உலக கோப்பை போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

பெரிய அடி! உலக கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்ட அதிரடி வீரர் சற்றுமுன் வெளியான தகவல்

12வது உலக கோப்பை போட்டிகள் வருகிற மே 30ந் தேதி தொடங்கி இங்கிலாந்து நாட்டில் நடைபெற உள்ளன. இத்தொடர்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த அணியில் இங்கிலாந்து அதிரடி தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ல் இடம்பெற்றிருந்தார். இவர் சமீபத்தில் நடைபெற்ற மது சோதனையில் (recreational drug test) இரண்டாவது முறையாக தன்னை நிரூபிக்க தவறினார். இதனால் இவருக்கு 21 நாட்கள் கிரிக்கெட் விளையாட தடை விதித்தது இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட்.

during the 3rd Royal London ODI match between England and Australia at Trent Bridge on June 19, 2018 in Nottingham, England. (Photos by Gareth Copley/Getty Images)

இதனையடுத்து உலக கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்களில் அலெக்ஸ் ஹேல்ல் நேரடியாக பங்கேற்பார் என கூறப்பட்டது. இந்நிலையில் அவரை இங்கிலாந்து உலக கோப்பை அணியில் இருந்து நீக்கியுள்ளது அந்நாட்டு கிரிக்கெட் போர்ட்.

மேலும் அவருக்கு பதிலான மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அலெக்ஸ் ஹேல்ஸின் நீக்கம் உலக கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும்.

உலக கோப்பை அணியில் இடமில்லை விரக்தியில் ராயுடு போட்ட டுலிட்டால் பரபரப்பு

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்ட்ட, இங்கிலாந்தில் நடைபெறும் 12வது உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி பி.சி.சி.ஐ நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் 4ம் வரிசை வீரராக அம்பத்தி ராயுடு தேர்வு செய்யப்படுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நியூஸ்லாந்து மற்றும் ஆஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ராயுடு எதிர்பார்த்த அளவு ரன்களை குவிக்கவில்லை. அதேசமயம் நடப்பு ஐ.பி.எல் தொடரிலும் தனது திறமையை நிரூபிக்க தவறினார்.

இதனால் உலக கோப்பை அணியில் இருந்து அம்பாத்தி ராயுடு நீக்கப்பட்டு, சமீபகலமாக சிறப்பாக ஆடி வரும் விஜய் சங்கருக்கு 4ம் வரிசை வீரராக உலக கோப்பை அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காத அம்பத்தி ராயுடு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவிட் போட்டுள்ளார். அதில் இந்த ஆண்டு உலக கோப்பை போட்டிகளை பார்க்க புதிய 3டி கண்ணாடிகளை ஆர்டர் செய்துள்ளேன் அவ்வளவுதான் என தனது வருத்தத்தை மறைத்து கொண்டு காமெடியாக டுவிட் செய்துள்ளார். இந்த டுவிட்டை பல நெட்டீசன்களும் கிண்டல் செய்து வருகின்றனர்.

விஜய் சங்கரை 4ம் வரிசை வீரராக தேர்வு செய்தது தவறு முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து

மே 30ந் தேதி தொடங்க உள்ள 12வது உலக கோப்பைக்கான இந்திய அணி நேற்று எம்.எஸ்.கே பிரசாத் தலைமையிலான இந்திய கிரிக்கெட் தேர்வு குழு அறிவித்தது.

நீண்ட காலமாக இந்திய அணியில் விவாத பொருளாக இருந்த 4ம் வரிசை வீரர் மற்றும் இரண்டாவது விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்விக்கு விடை நேற்று கிடைத்தது.

உலக கோப்பை இந்திய அணியில் 2வது விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் மற்றும் 4ம் வரிசை வீரராக விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து விஜய்சங்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முரளி கார்த்திக் உலக கோப்பை இந்திய அணியில் அம்பத்தி ராயுடுவுக்கு மாற்றாக விஜய் சங்கரை 4ம் வரிசை வீரராக தேர்வு செய்தது தவறு என பேட்டியளித்துள்ளார்.

விஜய் சங்கர் உலக கோப்பை அணியில் இடம் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அவர் 4ம் வரிசை வீரராக அம்பத்தி ராயுடுவுக்கு மாற்றாக இடம் பெற்றிருப்பது வருத்தம் அளிக்கிறது. 4ம் வரிசை வீரருக்கு மிகவும் பொருத்தமானவர் அம்பத்தி ராயுடு தான்.

4ம் வரிசையில் களம் இறங்குபவர் அதிக ரன்களை குவிப்பவராகவும், நிலை தன்மை உடையவராகவும், வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சை திறமையாக கையாளுபவராக இருக்க வேண்டும்.

இதனை அம்பத்தி ராயுடு இந்திய அணிக்காக நிறைய போட்டிகளில் ஆடி தனது திறமையை காட்டி இருக்கிறார். அவரிடம் நல்ல அனுபவம் உள்ளது. ஆனால் விஜய் சங்கரிடம் அந்த அனுபவம் இல்லை. என்னை பொறுத்த வரை 4ம் வரிசை வீரராக விஜய் சங்கரின் தேர்வு தவறானது தெரிவித்துள்ளார்.

சற்றுமுன்: உலக கோப்பைக்கான ஆஸ்ரேலியா அணி அறிவிப்பு

வருகிற மே 30ந் தேதி தொடங்க உள்ள 50 ஓவர் உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட ஆஸ்ரேலிய அணியை, ட்ரெவர் ஹோன்ஷ் தலைமையிலான தேர்வு குழு இன்று அறிவித்துள்ளது.

ஆஸ்ரேலியா அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசல்வுட் உலகப் கோப்பை அணியில் இடம் பெறவில்லை. ஹசல்வுட்க்கு முதுகில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையாதது தான் இதற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் அனைவரும் எதிர்பார்த்தது போல் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் மீண்டும் ஆஸ்ரேலியா அணியில் இடம் பெற்றுள்ளனர்.

சமீப காலமாக சிறப்பாக ஃபார்மில் இருந்த பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், ஆஸ்ரேலிய அணியில் துர்திருஷ்ட வசமாக இடம் சிடைக்க வில்லை. இதற்கு காரணம் ஸ்மித் மற்றும் வார்னரின் வருகை தான்.

ஆஸ்ரேலியா அணியை ஆரோன் பிஞ்ச் கேப்டனாக வழிநடத்துகிறார். விக்கெட் கீப்பராக அலெக்ஸ் கேரி இடம் பெற்றுள்ளார். மற்றபடி எதிர்பார்த்த அனைவரும் ஆஸ்ரேலியா அணியில் இடம் பெற்றுள்ளனர்.

உலக கோப்பைக்கான ஆஸ்ரேலியா: அணி: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), உஷ்மான் கவாஜா, டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டாய்னிஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஆடம் ஜாம்பா, நேதன் லைன், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நேதன் குல்டர் நைல், ஜேசன் பெகரண்ட்டாஃப், ஜய் ரிச்சர்ட்சன்.

அவர் நிச்சயம் உலக கோப்பை அணியில் இடம் பெறுவார் ஸ்ரீகாந்த் திட்டவட்டம்

இன்னும் ஒரு சில நாள்களில், 2019 உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவிக்க உள்ளது பி.சி.சி.ஐ. 15 இடங்களில் 11 இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், மீதமுள்ள அந்த 4 இடங்களில் யார் இடம் பெற போகிறார்கள் என தெரியவில்லை.

இந்திய அணிக்கு நான்காம் வரிசை வீரரை தேர்வு செய்வதில் எப்படி குழப்பம் நீடிக்கிறதோ, அதே போல் உலக கோப்பைக்கான இந்திய அணியில் மூன்றாவது தொடக்க ஆட்டக்காரரை தேர்வு செய்வதிலும் குழப்பம் நீடிக்கிறது.

தற்போது ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் மோசமான ஃபார்மில் உள்ளதால், இந்திய அணிக்கு மூன்றாவது தொடக்க ஆட்டக்காரர் கட்டாயம் தேவைப்படும் என பல முன்னாள் வீரர்கள் சுருத்து தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் வீரர் கே.எல் ராகுல் சதம் விளாசினார். இதனை தொடர்ந்து கே.எல் ராகுலை உலக கோப்பை அணியில் மூன்றாவது தொடக்க ஆட்டக்காராக தேர்வு செய்ய வேண்டும் என முன்னாள் வீரர் கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

அவர் கூறியதாவது., கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் கே.எல் ராகுலிடம் நல்ல வித்தியாசம் தெரிகிறது. போட்டியின் சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்ப தனது பேட்டிங்கை மாற்றிக் கொள்கிறார். இந்தாண்டு ஐ.பி.எல் போட்டியில் 3 அரைசதம் மற்றும் 1 அரைசதம் அடித்துள்ளார். நல்ல ஃபார்முக்கு திரும்பி உள்ளார்.

இன்னமும் ரோகித் சர்மா மற்றும் தவானின் ஃபார்ம் கவலைகிடமாக உள்ளது. என்னை பொறுத்தவரை உலக கோப்பைக்கான இந்திய அணியில் கே.எல் ராகுலை நிச்சயம் நான் எடுப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் 4வது வீரர் இவர்தான் உண்மையை போட்டுடைத்த ரோஹித் சர்மா

12வது உலக கோப்பை போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் வருகிற மே 30ந் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இத்தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஜூன் 5ந் தேதி தென்னாப்ரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்நிலையில் இன்று உலக கோப்பைக்கான இந்திய அணி வருகிற ஏப்ரல் 15ந் தேதி அறிவிக்கப்படும் என பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

ஆனால் யார் அந்த 4வது வீரர் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது இதற்கான விடையை இந்திய அணியின் துணை கேப்பன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

பேட்டியின் போது அவர் கூறியதாவது, உலக கோப்பையில் இந்திய அணியின் 4வது வரிசை வீரர் தேர்வில் அம்பத்தி ராயுடு, தினேஷ் காந்திக், ஸ்ரேயாஷ் ஐயர் மற்றும் விஜய் சங்கர் பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. ராயுடு தனக்கு கிடைத்த வாய்ப்புகளை வீணடித்துவிட்டார்.

தற்போது ஐ.பி.எல் போட்டிகளில் விஜய் சங்கர் மற்றும் ஸ்ரேயாஷ் ஐயர் மட்டும் தான் சூழ்நிலையை உணர்ந்து விளையாடி வருகின்றனர். இவர்கள் இருவரில் ஒருவரை நான் தேர்வு செய்ய உள்ளோம். இது குறித்து நானும் கோலியும் தேர்வு குழுவிடம் பேசி வருகிறோம்.

அதே சமயம் பேக் அப் லிக்கெட் கீப்பர் குறித்து இன்னும் குழப்பம் நீடிக்கிறது. யார் என்று முடிவு செய்ய படவில்லை என தெரிவித்துள்ளார்.

திடீர் அறிவிப்பு! உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் தேதி அறிவிப்பு

வருகிற மே மாத இறுதியில் 2019ம் ஆண்டுக்கான 50 ஓவர் உலக கோப்பை போட்டிகள் தொடங்க உள்ளன. இத்தொடர் தொடங்க இன்னும் ஒன்றரை மாதங்கள் மட்டுமே இடைவெளி உள்ளது.

உலக கோப்பையில் பங்கேற்கும் ஓவ்வொரு நாடும் தங்கள் அணியை அறிவிக்க ஏப்ரல் 23ந் தேதியை கடைசி நாளாக அறிவித்துள்ளது ஐ.சி.சி. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 3ந் தேதி நியூஸ்லாந்து அணி தனது உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது.

உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி வருகிற ஏப்ரல் 15ந் தேதி அறிவிக்க உள்ளதாக பி.சி.சி.ஐ அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.

உலக கோப்பைக்கான இந்திய அணியில் நான்காம் நிலை வீரர் யார்? அந்த 3 பேக்அப் வீரர்கள் என்ற கேள்விக்கு இதுவரை விடை தெரியாத நிலையில், வருகிற 15ந் தேதியில் இதற்கான விடைகள் கிடைக்கும்.

இந்திய அணி ஜுன் 5ந் தேதி தனது முதல் போட்டியில் தென்னாப்ரிக்க அணியுடன் மோதுகிறது.